வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
190617
வீடு வாடகைக்கு
190617
Bail விற்பனைக்கு
150617
கடை வாடகைக்கு
130617
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
தேவை - அழகு நிபுணர்
270517
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நாளை வியாழக்கிழமை இல்-துபிரான்சில் நாள் முழுவதும் பயணிக்க 3.80€ மட்டுமே!!
France Tamilnews
முக்கியம் - சுகாதார மையத்தின் வெயிலிற்கான ஆலோசனைகள்!! (காணொளி)
France Tamilnews
மகரந்தப் பரவல் - ஒவ்வாமை நோய் - கடும் எச்சரிக்கை - இல்-து-பிரான்ஸில் அபாயம்!!
France Tamilnews
தவறவிடாதீர்கள்!! 10.000 வேலைவாய்ப்புக்கள்!!
France Tamilnews
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
தாயக அரசியலில் ஏற்பட்ட திடீர் திருப்பம்!
18 June, 2017, Sun 10:35 GMT+1  |  views: 1887
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
பிளவுபட்டிருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பை மீள ஒன்றிணைக்கும் சமரசப் பேச்சுவார்த்தையில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.
 
முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் வடக்கு மாகாண சபை தொடர்ந்து இயங்குவதற்கான சாத்தியம் ஏற்பட்டுள்ளது.
 
வடக்கு மாகாண சபை விவகாரத்தால் முரண்பட்டுள்ள இரண்டு தரப்புகளையும் இணைப்பதற்கான சமரசப் பேச்சுவார்த்தைகள் நேற்றும் (17) தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டன. 
 
பரஸ்பர கருத்துப் பரிமாற்றங்களைத் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் (புளொட்) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும்
குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் மேற்கொண்டிருந்தனர்.
 
இவர்கள் மேற்கொண்ட தொடர்பாடலின் விளைவாக இரு தரப்பினரும் சமரசத்தீர்வுக்கான சமிக்ஞையை வெளிப்படுத்தியிருப்பதாகவும் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். 
 
தற்போது யாழ்ப்பாணத்தில் தங்கியிருக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடனும் முதலமைச்சர் விக்கினேஸ்வரனுடனும் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து குழப்பத்தை முடிவுக்குக் கொண்டு வருவதில் சாதகமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சித்தார்த்தன் தெரிவித்தார்.
 
குற்றஞ்சாட்டப்படாத இரண்டு அமைச்சர்களைக் கட்டாய விடுமுறையில் அனுப்பும் முதலமைச்சரின் முடிவு மாற்றப்பட வேண்டும் என்ற தமிழரசுக் கட்சியின் கோரிக்கையை முதலமைச்சரிடம் எடுத்துரைத்தபோது, அதற்கு இணக்கம் தெரிவித்த முதலமைச்சர், இரண்டு அமைச்சர்களும் தம்மீதான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்வதற்கு இடையூறு விளைவிக்க மாட்டார்கள் என எழுத்து மூலம் உறுதிப்படுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
 
அதனைத்தொடர்ந்து குறிப்பிட்ட அமைச்சர்களிடம் முதலமைச்சரின் நிலைப்பாட்டை சமரசப் பேச்சுக்கான தொடர்பாளர்கள் விளக்கியுள்ளனர். 
 
எனினும், அதற்கு அவசியமில்லை எனவும் விசாரரணக்கான முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் பதிலளித்துள்ளனர். இதனிடையே, கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் ஓர் அவசர கடிதமொன்றை முதலமைச்சருக்கு அனுப்பிவைத்திருக்கிறார்.
 
அதில், குற்றஞ்சாட்டப்படாத இரண்டு அமைச்சர்கள் தொடர்பான தீர்மானத்தில் திருத்தம் செய்யப்பட்டால் மட்டுமே தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வு காண முடியும் எனத் தெரிவித்துள்ளார். 
 
இதற்கு இணக்கம் தெரிவித்துள்ள முதலமைச்சர், குறித்த அமைச்சர்கள் எதிர்காலத்தில் நடத்தப்படும் விசாரணக்கு ஒத்துழைப்பதை உறுதிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்திருக்கிறார்.
 
இந்த நிலைமையின் கீழ், இரு தரப்பிலும் சிறு சிறு கோரிக்கைகளே முன்வைக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டிய சித்தார்த்தன், பிரச்சினையைத் தீர்ப்பதற்கான நம்பிக்கை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
 
மாகாண சபையில் ஏற்பட்டுள்ள குழப்பகரமான நிலைமைக்குத் தீர்வு காணுமுகமாக குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து இரு தரப்புக்குமிடையிலான தொடர்பாடல் பணிகளில் ஈடுபட்டுள்ளார்.
 
வடக்கு மாகாண சபை குழப்பத்தால், தமிழரசுக் கட்சியின் மீதும் கூட்டமைப்பின் மீதும் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியான நிலையைப் போக்க வேண்டுமாயின், மாகாண சபை நிர்வாகம் மீண்டும் சுமுகமாக இயங்க வேண்டும் என்பதில் இரு தரப்பினரும் அக்கறைகொண்டு செயற்பட வேண்டும் என அரசியல் நோக்கர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
 
இதற்கமைய, எதிர்த்தரப்பினர் எதிர்பார்த்ததைப்போலன்றி மீண்டும் வட மாகாண சபை நீதியரசர் விக்கினேஸ்வரனையே முதலமைச்சராகக்கொண்டு தொடர்ந்து இயங்கும் என்ற எதிர்பார்ப்பு தமிழ் மக்கள் மத்தியில் மேலோங்கியிருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
 
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய தீவு எது? 
  கிரீன்லாந்து

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
கட்டார் நெருக்கடியினால் பாதிக்கப்படும் இலங்கையர்கள்!
தீவிரவாதிகளுக்கு உதவியதாக குற்றம் சுமத்தி அண்டைய நாடுகள் நான்கு உட்பட மேலும் சில நாடுகள் கட்டார் நாட்டை தனிமை
25 June, 2017, Sun 7:08 | views: 124 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொழும்பில் திடீரென மாறிய காலநிலை! பல பகுதிகளில் கடும் குளிர்
இலங்கைத் தீவின் பல பகுதிகளில் இன்று முதல் அடைமழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு
24 June, 2017, Sat 15:21 | views: 960 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகில் சிறந்த 100 விமான சேவைகள் மதிப்பீட்டில் இலங்கைக்கு ஏற்பட்ட பரிதாபம்!
சர்வதேச ஸ்கை ட்ரெக்ஸ் உலகில் சிறந்த 100 விமான சேவைகளை மதிப்பீடு செய்யும் நடவடிக்கையினை மேற்கொள்ளு
24 June, 2017, Sat 12:04 | views: 1189 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தொடர்ந்து இலங்கை மக்களை அச்சுறுத்தும் மர்ம அழைப்பு - அவதானம்
சில தினங்களுக்கு முன்னர் நபர் ஒருவரின் கையடக்க தொலைபேசிக்கு வெளிநாட்டில் இருந்து மர்ம அழைப்பு ஒன்று கிடைத்துள்ளதாக
24 June, 2017, Sat 9:55 | views: 1116 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
காலநிலை தொடர்பில இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!
இலங்கையின் பல பகுதிகளில் இன்றை தினமும் கடுமையான மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்
24 June, 2017, Sat 8:33 | views: 680 |  செய்தியை வாசிக்க
  Annonce
தமிழ் மொழிபெயர்ப்பு

Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS