வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
190617
வீடு வாடகைக்கு
190617
Bail விற்பனைக்கு
150617
கடை வாடகைக்கு
130617
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
தேவை - அழகு நிபுணர்
270517
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
நாளை வியாழக்கிழமை இல்-துபிரான்சில் நாள் முழுவதும் பயணிக்க 3.80€ மட்டுமே!!
France Tamilnews
முக்கியம் - சுகாதார மையத்தின் வெயிலிற்கான ஆலோசனைகள்!! (காணொளி)
France Tamilnews
மகரந்தப் பரவல் - ஒவ்வாமை நோய் - கடும் எச்சரிக்கை - இல்-து-பிரான்ஸில் அபாயம்!!
France Tamilnews
தவறவிடாதீர்கள்!! 10.000 வேலைவாய்ப்புக்கள்!!
France Tamilnews
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
ஜனாதிபதி தேர்தலுக்கு பொது வேட்பாளர் சோனியாவுடன் பா.ஜனதா குழு சந்திப்பு
17 June, 2017, Sat 4:31 GMT+1  |  views: 302
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

ஜனாதிபதி தேர்தலுக்கு பொது வேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை பா.ஜனதா குழு சந்தித்து பேசியது. எனினும் இதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.
சோனியாவுடன் சந்திப்பு

தற்போது ஜனாதிபதியாக உள்ள பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் அடுத்த மாதம்(ஜூலை) 25–ந்தேதி நிறைவு அடைகிறது. இதையொட்டி, ஜூலை 17–ந்தேதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. வேட்பு மனுதாக்கல் செய்ய வருகிற 28–ந்தேதி கடைசி நாள் ஆகும். இந்த தேர்தலில் அனைத்து கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் பொது வேட்பாளரை நிறுத்தவேண்டும் என்று பிரதமர் மோடி விரும்புகிறார்.

இதனால் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பா.ஜனதா தலைவர் அமித்ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், அருண்ஜெட்லி, வெங்கையா நாயுடு ஆகியோர் கொண்ட மூவர் குழுவை அமைத்து உள்ளார். இவர்கள் ஜூன் 16–ந்தேதி சோனியா காந்தியை சந்தித்து பேசுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இந்த சந்திப்பு நேற்று நடந்தது.

நிதிமந்திரி அருண்ஜெட்லி தென்கொரியா சென்று இருப்பதால், அவர் தவிர மூவர் குழுவில் உள்ள மற்ற 2 தலைவர்களான ராஜ்நாத்சிங், வெங்கையா நாயுடு ஆகிய இருவரும் நேற்று காலை டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவருடைய எண்.10 ஜன்பத் இல்லத்தில் சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தை சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது.
முன்னேற்றம் ஏற்படவில்லை

பா.ஜனதா தலைவர்களின் இந்த சந்திப்பின்போது, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் உடன் இருந்தனர். இரு தரப்பிலும் வெகு நேரம் ஆலோசனை நடத்தப்பட்டாலும் பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த சந்திப்பின்போது இரு தரப்பினரும் பொதுவாக நிறுத்தக்கூடிய வேட்பாளர் பெயர் பற்றி எதுவும் தெரிவிக்கவில்லை.

இதுபற்றி மல்லிகார்ஜூன கார்கே கூறும்போது, ‘‘ஜனாதிபதி வேட்பாளராக யாரை நிறுத்தலாம் என்பது தொடர்பாக பேச்சுவார்த்தை முடியும்வரை பா.ஜனதா தலைவர்கள் குறிப்பிட்ட எந்த ஒருவரின் பெயரையும் தெரிவிக்கவில்லை. இதனால் ஒருமித்த கருத்து என்பது பற்றிய கேள்வியே எழவில்லை’’ என்றார்.
மீண்டும் சந்திப்பார்கள்

குலாம்நபி ஆசாத் கூறுகையில், ‘‘பா.ஜனதா தலைவர்கள் யாருடைய பெயரையாவது கூறுவார்கள் என்று எதிர்பார்த்தோம். ஆனால் சொல்லவில்லை. அதேநேரம் எங்களிடம் யாருடைய பெயரையாவது குறிப்பிட விரும்புகிறீர்களா? என்று கேட்டனர். ஜனாதிபதி தேர்தலை பொறுத்தவரை அவர்கள் எங்களுடைய ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறார்கள் என்று நினைக்கிறேன். அவர்களது மனதில் யாருடைய பெயராவது இருக்கலாம். ஆனால் எந்த ஒரு பெயரும் எங்களது சந்திப்பின்போது கூறப்படவில்லை. அவர்கள் பெயரை குறிப்பிட்டால் மட்டுமே அதுபற்றி விவாதிக்கமுடியும்’’ என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ஆளும் கட்சி தரப்பினர், இன்னும் ஒரு வாரத்தில் குறிப்பிட்ட சில பெயர்களுடன் காங்கிரஸ் தலைமையை (சோனியா) மீண்டும் சந்திப்பார்கள் என நம்புகிறேன் என்றார்.
எதிர்க்கட்சிகள் உறுதி

ஜனாதிபதி தேர்தலுக்கு பொதுவேட்பாளரை நிறுத்துவது தொடர்பாக பா.ஜனதா தலைவர்கள் குறிப்பிடுகையில், ‘‘தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, காங்கிரஸ் தலைவர்களுடன் வெங்கையா நாயுடு தொடர்பு கொண்டு உள்ளார். அவர் தேசியவாத காங்கிரஸ் தலைவர்கள் சரத்பவார், பிரபுல் பட்டேல், பகுஜன் சமாஜ் தலைவர் சதீஷ் மிஸ்ரா ஆகியோருடன் சம்பிரதாய முறையில் பேச்சுவார்த்தையும் நடத்தி இருக்கிறார்’’ என்றனர்.

தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்கனவே மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜன்சக்தி ஜனாதிபதி தேர்தலில் பிரதமர் மோடி நிறுத்தும் வேட்பாளரை ஆதரிப்போம் என்று அறிவித்து உள்ளது. இதேபோல் ஆந்திர முதல்–மந்திரி சந்திரபாபு நாயுடு, தனது தெலுங்கு தேசம் கட்சியும், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளரை ஆதரிக்கும் என்று ஏற்கனவே உறுதி அளித்து இருக்கிறார்.

எதிர்க்கட்சிகளை பொறுத்தவரை பொதுவேட்பாளர் மதசார்பற்றவராக இருக்கவேண்டும், அவர் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பின்னணியை கொண்டவராக இருக்கக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளன. எனவே ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜனாதிபதி வேட்பாளருக்கான பெயரை தெரிவித்தால் மட்டுமே அதுபற்றிய பேச்சுவார்த்தை இருதரப்பிலும் தொடர்ந்து நடைபெறும் என்று தெரிகிறது.

ஒருவேளை இதில் ஒருமித்த கருத்து ஏற்படாவிட்டால், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிராக வலுவான ஒருவேட்பாளரை எதிர்க்கட்சிகள் நிறுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொதறிவுத் துணுக்கு :

* மேல் தாடையை அசைக்கும் விலங்கு

  முதலை

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ரஜினிகாந்தை எங்களுடன் இணைக்க பா.ஜனதா முயற்சி செய்கிறதா? ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
ரஜினிகாந்தை எங்களுடன் இணைத்து வைக்க பா.ஜனதா முயற்சி செய்கிறது என்பது வெறும் வதந்தி என்று ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
24 June, 2017, Sat 5:51 | views: 646 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா:தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா தொடர்பான வழக்கில் தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
24 June, 2017, Sat 5:49 | views: 197 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜனாதிபதி தேர்தல் : எதிர்க்கட்சிகள் வேட்பாளர் மீரா குமார் கோரிக்கை
ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் நலன் கருதி எம்.பி.க்களும், எம்.எல்.ஏ.க்களும் வாக்களிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் சார்பில்
24 June, 2017, Sat 5:45 | views: 193 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ராஜீவ்காந்தி கொலை கைதி விடுதலை செய்யப்படுவாரா? நிர்மலா சீதாராமன் பேட்டி
ராஜீவ் கொலை கைதி விடுதலை பற்றி மத்திய அரசு தனிப்பட்ட முறையில் முடிவு எடுக்க முடியாது என்று மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் க
24 June, 2017, Sat 5:43 | views: 180 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நீட் தேர்வு முடிவு வெளியீடு கவுன்சிலிங் நடத்துவது குறித்து மாநிலங்களே முடிவு செய்துகொள்ளலாம்
11 லட்சம் பேர் எழுதிய மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு முடிவை சி.பி.எஸ்.இ. வெளியிட்டது.
24 June, 2017, Sat 5:42 | views: 233 |  செய்தியை வாசிக்க
  Annonce
தமிழ் மொழிபெயர்ப்பு

Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS