Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
போதையில் பட்டதாரிகள்
28 April, 2017, Fri 8:42 GMT+1  |  views: 1798

 ஏன்டா!, ஏதோ பொறியியல் படிக்கிறதும் படிக்க வைக்கிறதும் தேச விரோத செயல் மாதிரி எழுதிருக்க! மொதல எல்லாத்தையும் எதிர்மறை பார்வையிலிருந்து பார்காதிங்கடா! என்று கொஞ்சம் கூட இடைவெளி இல்லாமல் திட்டிக்கொண்டே இருந்தான் நண்பன். (அப்பாடா நம்ப கட்டுரையை ஒரு பொறியியலாளன் படுச்சு கோபம் வந்துருக்குனா உருப்படியா எழுதிருக்கோம் என்று எண்ணியபடி பேச ஆரம்பித்தேன்.)

 
உனக்கு என்னடா புடிக்கல அந்த கட்டுரையில்? என்றேன்.
 
எல்லாமேதான் புடிக்கல!,பொறியியல் படிச்சா மட்டும் தான் வேலை கிடைக்காதுனு மாதிரி எழுதிருக்க . இப்போ எந்த படிப்பு படிச்சாலும்தான் வேலை கிடைக்காது! அப்றம் ஏதோ பெரிய ட்விஸ்ட்  வச்சு முடிக்கனும்னு பில்டப் கொடுத்து முடுச்சியே, எங்க சொல்லுடா பார்ப்போம் என்று கோபமாக என் முன் அமரந்தான். (இவன்ட அடிவாங்கமா தப்பிகனுமே என்று எண்ணியபடி ஆரம்பித்தேன்)
 
எல்லா படிப்புக்கும் வேலை இல்லை என்பது உண்மைதான் ஆனால் ஏன்?. எல்லா இடத்திலும் எந்த வேலைனாலும் பரவாயில்லை என்று பொறியியல் படித்தவர் போய் வேலை கேட்பதும் குறைந்த ஊதியத்தில் அவர்களை பயன்படுத்திக்கொள்வதும்தான். ஒரு உணவக விளம்பரம் ஒன்றில் புரோட்டா போட ஆட்கள் தேவை பொறியாளர்கள் விண்ணப்பிக்காதீர்கள் என்று போட்டிருந்தார்கள் இதை பகடி என்று கடந்து விட முடியாது! காரணம், கடந்த ஆண்டு ஒரு மாநிலத்தில் நகர சுத்தி (cleaners) தொழிலாளர்கள் பணிக்கு வந்த விண்ணப்பத்தில் 80% பொறியியல் மாணவர்களின் விண்ணப்பம். இதை விட சிறந்த விளக்கம் எப்படித் தர முடியும்?
 
 
வேற வழி இல்லாமல் இப்ப இருக்க 80% பொறியியல் மாணவர்கள் BPO வை நோக்கி போகிறார்கள், வெறும் ஆங்கில அறிவும் 12ஆம் வகுப்பு தேர்ச்சியும் மட்டுமே அதுக்கு போதுமே!,டேய் நீ மறுபடியும் வேலை இல்லா திண்டாட்டத்தை வச்சே ஒப்பேத்துர!, இத தாண்டி ஒரு அதிர்ச்சி இருக்குனு பில்டப் குடுத்தேல அத பத்தி சொல்லு என்று இடை மறித்ததான்.
 
அதுக்கு தான்டா வரேன் இரு! BPO வில் 90% இரவுப் பணி மட்டும் தான், முழுக்க முழுக்க இரவுப் பணி பார்க்கும் இளைஞர்களின் மனநிலை வேறு மாதிரியாக மாறுகிறது!. அவர்கள் மன உளைச்சல் காரணமாக போதையின் பிடியில் சிக்குகிறார்கள். சென்னைப் போன்ற பெருநகரங்களில், பெற்றோர்களிடம் இருந்து தொலைவில் இருக்கும் இளைஞர்கள் கஞ்சா போன்ற வஸ்துக்களையே நாடுகின்றனர்.
 
கஞ்சாவுல அப்டி என்னதான் இருக்கு என்று ஒருமுறை அதை பயன்படுத்தும் நபர் ஒருவரைக் கேட்க, கஞ்சா அடுச்சுட்டு சீலிங் பேன படுத்துக்கிட்டு பார்த்தா அது மூஞ்சி பக்கத்துல வர மாதிரி தெரியும் தம்பி என்று  அவர் சிரித்தது எனக்கு வயிற்றில் புளியை கரைத்தது.
 
தேவைக்கு அதிகமான பணம், பற்று இல்லாத வேலை, தட்டிக் கேட்க ஆள் இல்லாத சூழல். இந்த உட்சக்கட்ட சுதந்திரம் அவர்களை “குரோதத்தின்” எல்லைவரை கொண்டு செல்கிறது. இதன் கேவலமான உதாரணம் தான் சென்னையில் ஒரு IT மாணவன் 3 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதும் எரித்ததும்!.
 
ஒரு குழந்தையை அந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும் மன நிலையை அவனுக்கு ஏற்படுத்தியது எது?
 
 
நான் சிறுவனாக இருக்கும் போது பார்த்த பல திரைப்படங்களில்  “படிச்ச” பிள்ளை வருது அது முன்னாடி “பீடி ” குடிக்கிறியே அத தூக்கி போடு. என்ற காட்சிகள் வரும், ஆனால் இன்று மாணவர்களுக்கு உருவாக்கப்பட்டதே “மது ” என்று விளம்பரம் செய்கின்றன சினிமா!. என் பையனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை என்று பெண் பார்த்த காலம் போய் என் பையன் “Social Drinker ” (எப்போதாவது குடிப்பவர்) என்று இணையத்தில் பெண் தேடுகிறார்கள்.
 
புகையும், குடியும் பிள்ளைகளுக்கான சுதந்திரம் என்று பெற்றோர்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டனர். அவர்களின் இப்போதைய கண்டிப்பு அவர்களின் கண்முன் தவறுகளை செய்யாதிருப்பது மட்டுமே (பிள்ளைகளை கவனிக்க நேரமில்லை என்று காரணம் கூறும் பெற்றோர்கள்தான் அதிகம்) இப்பொழுது  தந்தையும் மகனும் இணைந்து மது அருந்தும் காட்சி படங்களில் வருவதைப் பார்க்கும்போது பயமாக உள்ளது.
 
சரி சினிமா, சமூகம் மற்றும் குடும்பம்தானே இளைஞர்கள் பாதை மாறுவதற்கான காரணம் இதில் பொறியியல் படிப்பை மட்டும் குறிப்பிட்டு சொல்வதற்கு காரணம் என்ன? என்று தோன்றலாம்!. பொறியியல் படிப்பை தேர்வு செய்யும் மாணவனின் மனநிலை பட்டம் பெற்று வெளியே வரும்போது வேறு விதமாக உள்ளது. அறிவியல் மற்றும் கலை பிரிவு படிக்கும் மாணவனிடம் இருக்கும் “Experimentation ” (தான் எதற்கு சரியானவன் என்று சோதிப்பது) பொறியியல் மாணவர்களிடம் சுத்தமாக இல்லை!. ஒரு கட்டிடக்கலை பயின்ற (Civil Engineering) பொறியியல் மாணவனுக்கு “ஒரு ஏக்கருக்கு எத்தனை சென்ட் ” என்று கூட தெரியவில்லை. இவர் எப்படி தன் துறை சார்ந்த வேலையை திறம்பட செய்வார்?, இவர் எளிதாக பணம் பெறும் துறை என்று BPOவை மட்டுமே நாடுவார். கல்லூரியில் 4 ஆண்டுகள் படித்தது போதாது என்று நேர்முகத் தேர்விற்கு சிறப்பு வகுப்புகள் வேறு!, என்ன தான் செய்கிறது கல்லூரிகள்?.
 
அவர்கள் வாழ்கையை அவர்கள் தீர்மானிக்கிறார்கள் என்று விட்டு விட முடியாது! 2020 இந்தியாவின் மக்கள் தொகையில் சரி பாதி இளைஞர்களே அதில் 65% பேர் வருமானம் ஈட்டக் கூடியவர்களாக இருப்பார்கள் என்று ஒரு ஆய்வு சொல்கிறது. மற்றொரு ஆய்வு உலக ” காசநோயாளிகளில்”  30% பேர் இந்தியாவில் தான் உள்ளார்கள் என்றும் அதில் பெரும்பான்மை இளைஞர்கள் என்றும் கூறுகிறது. இந்திய இளைஞர்கள் மது குடிக்க ஆரம்பிக்கும் வயது 16 என்று ஒரு அறிக்கை தெரிவிக்கிறது ஆனால் இங்கு 18 வயதிற்கு குறைந்தவர்க்கு போதை பொருட்கள் விற்பது குற்றம் ஆகும், பின் எப்படி இது நடக்குறது?.
 
 
பள்ளியில் இருந்து கல்லூரி வரை ஒன்றாக படித்த நண்பனை சமீபத்தில் சந்தித்தேன் பேசும் போது பந்தாவாக “சிகரெட்டை” எடுத்து பற்ற வைத்தான். டேய் உனக்கு எப்ப இருந்துடா இந்த பழக்கம்? என்றேன். இல்ல பங்காளி “பாஸ்” (boss) கூட நெருங்கி பழக week end party-ல அடுச்சு பழகிட்டேன் நிறுத்த முடியல என்றான், வீட்டுக்கு தெரியுமா என்றேன் தெரியும் ஆனா காட்டிக்க மாட்டாங்க என்றான்!..
 
நோயாளி இளைஞர்களைக் கொண்டு இந்தியாவின் பலமான எதிர்காலத்தை உருவாக்க முடியாது. இதை அரசு சிந்திக்க வேண்டும் ஆனால் இங்கு அரசு தானே மதுக்கடைகளையே நடத்துகின்றன!. சரி குடி, புகை இது இரண்டும் தனி நபரைத்தானே பாதிக்கிறது என்று கடந்து போகிறவர்களும் உண்டு. ஆனால் இதனால் “பாதிப்படைவது பெண்களே” குடித்துவிட்டு இரவு நேரங்களில் பெண்களிடம் தவறாக நடப்பது அதிகமாகி உள்ளது. இதன் விளைவாக கர்நாடக அரசு எல்லா நிறுவனங்களும் இரவு பணிகளில் பெண்களை அமர்த்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளது . இது எப்படி நிரந்தர தீர்வாக அமையும்?. முன்பு எல்லாம் தவறு செய்பவர்கள் படிப்பறிவு குறைந்தவர்களாக இருப்பார்கள் ஆனால் இன்று பட்டதாரிகள் அல்லவா அதிகமாக உள்ளார்கள்.
 
தன் வேலையின் மீதான காழ்ப்புணர்வை எந்த வழியில் வெளிப்படுத்துவது என்று தெரியாமல் எல்லா தீய பழக்கத்திற்கும் ஆளாகிறார்கள். அதற்கு இப்பொழுது இருக்கும் தொழில்நுட்பம் எளிதில் வழி காட்டுகிறது,  இதற்கும் பொறியியல் படிப்பை தேர்வு செய்வதற்கும் என்ன சம்பந்தம்?,
 
“ஒரு மீனின் இயல்பு என்பது நீந்துவது அதை மரம் ஏறச் சொல்லி கட்டாயப் படுத்தினால் அது இறந்து போகும்”, அது போல பள்ளிப் பருவத்திலேயே குழந்தைகளின் திறன் கண்டு அவர்களின் மேற்படிப்பை தேர்ந்தெடுக்க வைக்க வேண்டும். அப்படி இல்லையேல் அந்த மீனின் நிலைதான் அவர்களுக்கும்.
 
சரி விருப்பமான துறையில் பயிலும் மாணவன் தவறு செய்ய மாட்டான் என்று உறுதி கூற முடியுமா? என்றால், தனக்குப் பிடித்த துறையை தேர்வு செய்யும் மாணவன் அதில் சாதனைகள் செய்ய புதுப்புது உத்திகளை பயிலவும், பயன்படுத்தவுமே எண்ணுவான். கண்டிப்பாக தீய பழக்கங்களுக்கு அடிமையாகும் விகிதம் குறையும்.
 
 
டேய் உண்மையிலயே! BPO- ல வேலை பார்க்குறவங்க கஞ்சா அடிக்கிறாங்களா? உனக்கு தெரியுமா? பொய் தானே சொல்ற அப்பதான் நிறையா பேர் படிப்பாங்கனு! என்றான் நண்பன். 100% அடிப்பாங்கனு சொல்லலடா ஆனா பெரும்பான்மையான நபர்கள் அடிக்கிறாங்க என்று தெரிந்த ஒரு நண்பனின் அறைக்கு அவனை அழைத்துச் சென்றேன். விடுமுறை தினம் வேறு, அறை முழுவதும் ஒரே புகை மூட்டம். தொலைக் காட்சியில் ஒரு புரியாத ஆங்கிலப் பாடல் அதிலும் கஞ்சா புகைத்துக் கொண்டுதான் ஆடுகிறார்கள். வாயடைத்து நின்றான் நண்பன். உள்ளே இருக்கும் 5 பேர்களும் கோயம்பத்தூரில் ஒரு சிறந்த கல்லூரியில் (அப்படித்தான் விளம்பரம் செய்து கொள்கிறார்கள்) பொறியியல் படித்தவர்கள். மாதம் வாங்கும் 25,000 சம்பளத்தில் 15,000 இப்படித்தான் போகிறது என்று கூறிய போது ஐவரில் ஒருவன் நான் வந்ததை இப்பொழுதுதான் கவனித்தான் (15  நிமிடம் கழித்து) யோவ் டைரக்டர் எப்பயா வந்த? என்று என் அருகில் வந்தான்.
 
யோவ் டைரக்டர், நானும் எவ்ளோ நாள் சொல்றேன் இதுல இரண்டு இழுவ இழுத்தனு வையி (கஞ்சா) ஜேம்ஸ் கேமரூன், ஸபீல் பெர்க் எல்லாம் உன்னட்ட பிச்சைதான் எடுக்கணும் என்று சிகரெட்டைக் காட்ட, கட்டுரை எழுத வந்தவனை காவு வாங்கிடுவான்க போலயே என்று நண்பனையும் இழுத்துக் கொண்டு பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓடி வந்தேன். (என்னுடன் ஒரு புது நபர் வந்திருந்ததை அவர்களில் யாருமே கவனிக்கவில்லை அவ்வளவு போதை)
 
 
  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* புதினாவின் தமிழ்ப் பெயர்

  ஈஎச்சக்கீரை

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தனிமை விரும்பிகளுக்கு தலவாக்கலை!!
குளிர் விரும்பிகளும், பரபரப்பான நகர்ச் சூழலிலிருந்து விடுபட்டு இயற்கையை குளுமையுடன் ரசிக்கவேண்டும் என்று
17 November, 2017, Fri 3:39 | views: 528 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அறியப்படா இலங்கையின் அழகு செம்புவத்த ஏரி!
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் சுற்றுலா நிரலில் அதிகம் இடம்பிடிக்கக் கூடிய
24 October, 2017, Tue 13:10 | views: 1516 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அழியப் போகும் ஆடல் கலை!
“ஆடல் கலையே தேவன் தந்தது” இது வெறும் சினிமா பாடல் வரிகள் மட்டுமே இல்லை. நாம் கற்கால மனிதர்களாக
7 October, 2017, Sat 16:01 | views: 917 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நம் அன்றாட வாழ்வில் நாசா!
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் (நாசா) இன்று வான்வெளி ஆராய்ச்சியிலும், தொழில்நுட்பம் மற்றும்
3 October, 2017, Tue 14:44 | views: 855 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ராமர் பாலம் – புராணமா ? அறிவியலா ?
ராமேஸ்வரத்தில் உள்ள தனுஷ்கோடி கடல் பகுதியை ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்துக்கு ஏதுவாக ஒரு திட்டம்
19 September, 2017, Tue 16:52 | views: 1348 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS