வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வாடகைக்கு வீடுகள்
080817-15days
வேலையாள்த் தேவை
060817
Bail விற்பனை Paris 12
050717
Bail விற்பனைக்கு
La Chapelle
270617
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
2018-2019 பாடசாலை விடுமுறைகள் - கல்வி அமைச்சின் அதிகாரபூர்வ வெளியீடு!!
France Tamilnews
குறைக்கப்படும் வீட்டுதவித்தொகை!! அவதிக்குள்ளாகப் போகும் மக்கள்!! வெடிக்குமா மக்கள் போராட்டம்!!
France Tamilnews
பரிசின் செய்ன்நதி நீச்சற்தடாகம் உங்களிற்காக!! இலவசமாக!!!
France Tamilnews
அப்போலோ ரகசியத்தை வெளியிட்டால் இந்தியாவில் பிரளயமே ஏற்படும்!
14 December, 2016, Wed 10:53 GMT+1  |  views: 1575
  • coffee-bharath
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 

 
ஹேக்கிங்'  இந்த வார்த்தையே பலரை பீதியூட்டுவதாக மாறிவிட்டது. 'ஹேக்கிங்' என்பது நல்லது, கெட்டது இரண்டு செயல்களுக்கும் பயன்படுத்த முடியும். ஆனால் தற்சமயம், ஒருவரின் அனுமதி இல்லாமல் அவரைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் திருடி, தனக்கு சாதகமாக்கி கொள்வதற்கே ஹேக்கிங் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. 
 
லீஜியன் என்ற ஹேக்கர் குழு இந்தியாவைப் பற்றி ஓர் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது. அதில், நாங்கள் ஹேக் செய்துள்ள, சில அரசியல் தகவல்களை வெளியிட்டால், இந்தியா மிகப் பெரும் குழப்பங்களைச் சந்திக்க நேரிடும் என்பதே அது.  
 
இந்த லீஜியன் ஹேக்கர் குழுதான், காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்தி, தொழிலதிபர் விஜய் மல்லையா, ஊடகவியலாளர்கள் பர்க்கா தத் மற்றும் ரவிஷ்குமார் ஆகியோரின் ட்விட்டர் கணக்குகளை முடக்கியுள்ளது. கணக்குகளை முடக்கியதோடு அவர்களது பெயரில் தவறான தகவல்களையும் பதிந்துவிட்டது.
 
இந்த நிலையில் கடந்த திங்கள்கிழமை (12-12-16), வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் வெளியுறவுச் செய்திகளைக் கண்காணிக்கும் மேக்ஸ் பேரக் தந்த செய்தி இன்னும் அதிர்ச்சியானது.  லீஜியன் ஹேக்கிங் குழு இந்தியாவைக் குறிவைத்து பல முக்கிய பிரமுகர்களின் கணக்குகளை முடக்குவது, அரசியல் கட்சிகளின் சமூக வலைத்தளங்களையும் கம்ப்யூட்டர்களையும் ஹேக் செய்து முக்கிய டேட்டாக்களை எடுப்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறதாம். 
 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை எடுத்த அப்போலோ மருத்துவமனையின் சர்வரையும் ஹேக் செய்துள்ளனராம் இந்த லீஜியன் ஹேக்கர் குழுவினர். அப்போலோவில் அவர்களுக்குக் கிடைத்த சில தகவல்களை வெளியிட்டால் தமிழகத்தில் மட்டுமல்ல, இந்திய அளவில் மிகப் பெரிய அரசியல் குழப்பம் வரக்கூடுமாம். 
 
இந்தியாவிலிருந்து பல ஜிகாபைட்ஸ் அளவுள்ள தகவல்களைத் திருடியுள்ளனர். இந்திய அரசியல் தளங்களை ஹேக் செய்வதில் தொடக்கத்தில், இவர்களுக்கு ஆர்வமிருக்கவில்லை. ஆனால் கிடைத்த செய்திகளின் சுவாரஸ்யம் தொடர்ந்து திருட வைத்துள்ளது.  இதுவரை இந்தியாவில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சர்வர்கள் இந்த லீஜியன் ஹேக்கிங் குழுவால் ஹேக் செய்யப்பட்டுள்ளன. 
 
மேலும், பர்க்கா தத்-தின் ட்விட்டர் கணக்கு மற்றும் மெயில்களிலிருந்து இதுவரை 1.2 ஜிகாபைட் அளவுகளில் தகவல்கள் திருடப்பட்டுள்ளனவாம்.  மேலும், அடுத்தகட்டமாக இந்திய அரசியல்வாதி லலித் மோடியின் கணக்குகளைத் திருட திட்டமிட்டிருக்கிறதாம் லீஜியன் ஹேக்கிங் குழு.  என,  அதிர்ச்சியான தகவல்களை வெளியிட்டிருக்கிறார் மேக்ஸ் பேரக்.
 
- விகடன்
  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

* உடலில் ரத்தம் பாயாத பகுதி

  கருவிழி

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
யாழ்ப்பாணத்தில் அதிசய கிணறு!
குடாநாட்டுக்கு விஜயம் செய்யும் சுற்றுலாப் பயணிகள் முக்கியமாகச் சென்று பார்த்து ஆச்சரியப்படும் இடமாக விளங்கும்
11 August, 2017, Fri 11:59 | views: 1908 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நாம் எங்கிருந்து வந்தோம்?
இது தெரியாதா? ஆபிரிக்காவுல குரங்கா இருந்து கொஞ்சம் கொஞ்சமா மனிதனா மாறியிருக்கோம்
3 August, 2017, Thu 14:41 | views: 1518 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மானின் இரத்தத்தில் குளிக்கும் ரஷ்ய ஜனாதிபதி! காரணம் என்ன?
ரஷ்யாவின் ஜனாதிபதி புடின் பல்வேறு மருத்துவ குணங்கள் உடையதாக கூறப்படும் சிவப்பு மான்களின் இரத்தத்தில் குளிப்பார் என தகவல்கள் வெளிய
19 July, 2017, Wed 8:11 | views: 3043 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பொலித்தீனிலிருந்து விடுதலைபெறும் இலங்கை
இலங்கை 2030; Pizza பெட்டிக்குள் இருக்கின்ற பிளாத்திக்கு “மேசை” இருக்காது. அட நீங்க வேற, “நாங்க
16 July, 2017, Sun 13:12 | views: 1411 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தகவல் அறியும் உரிமைச் சட்டம் – அறிமுகம்
இன்றைக்கு தகவல் அறியும் உரிமைச்சட்டம்பற்றிப் பேசாத ஆளில்லை. அதனை ஒரு வரப்பிரசாதமாகக் கொண்டாடுவோர் ஒருபுறம்.
8 July, 2017, Sat 17:27 | views: 1268 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS