Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
ஆசிரியர் தேவை!
121017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
சொர்க்காபுரியாக மாறும் கொழும்பு!
30 November, 2016, Wed 16:46 GMT+1  |  views: 3002

 கொழும்பு, இலங்கைவாழ் மக்கள் மட்டுமன்றி இவ்விந்துசமுத்திர நித்திலத்தை நோக்கிப் படையெடுக்கும் உல்லாசப்பிரயாணிகள், மற்றும் பல்வேறு தேவைநிமிர்த்தம் இங்குவந்துசேரும் அனைத்து மக்களதும் சொர்க்கபுரியாகும். 

 
அடுக்குமாடிக்கட்டடம்முதல் தாழ்ந்து குறுகிநிற்கும் குடிசைவரை, சீறிப்பாயும் கார்களிலிருந்து நாட்டமிகள் இழுக்கும் சில்லுவண்டிகள் வரைக்கும், ஹை ஹீல்சுகள் தாளமிட்டுச் செல்லும் அதே நடைபாதையில் ஐந்திற்கும் பத்திற்கும் அல்லல்படும் மக்களையும் கொண்டு பல்வகைமைகாட்டிநிற்கும் தலைநகரம்.
 
இன்று எம்தலைநகரில் காணக்கிடைக்கும், எமது கவனத்தை கட்டியீர்க்கும் காட்சிகளில் முதன்மைவகிப்பது கடந்த சில வருடங்களுக்குள் கொழும்பில் வானுயர எழுந்து நிற்கும் கட்டிடங்களும், நாள்தோறும் வளர்ச்சிபெறுகின்ற கட்டிட நிர்மாணங்களும் என்றால் மிகையில்லை. 
 
அப்படி எதைத்தான் வானுயர கட்டிடங்களாக கட்டிக்கொண்டு இருக்கிறார்கள் என சிந்தித்து இருக்கிறீர்களா ? அப்படியானால், கொழும்பையும் அதனை அண்டிய பகுதிகளிலும் எவ்வாறான கட்டிடங்கள் புதிதாக எழுந்துள்ளன. அடுத்துவரும் குறுகியகாலத்தில் எவை எல்லாம் வான்தொட்டு நம் கொழும்பின் இயற்கை வனப்பை குறைத்து, செயற்கை அழகை தரப்போகின்றன என பார்க்கலாம்.
 
Krrish Square (க்ரிஷ் சதுக்கம்)
 
அமைவிடம் – புறக்கோட்டை
மொத்த பெறுமதி – USD 650M
உயரம் – 1380 Ft
கட்டிமுடிக்க எதிர்பார்க்கும் காலம் – 2018/19
உரிமையாளர் – Krrish Construction (இந்தியா)
(edouardfrancois.com)
 
உலகவர்த்தக மையத்தை அண்டியதாக புறக்கோட்டையின் பிரதானபகுதியில் இந்த கட்டிடம் அமையப் போகிறது. Kirish Square அரசியல் களத்தில் அதிக சர்ச்சைகளை சந்தித்த கட்டிடமாக இருக்கும். கடந்த ஆட்சியாளர்களுடனான சர்சைகளின் விளைவாக, 2013ல் ஆரம்பிக்கவேண்டிய கட்டிட நிர்மாணப்பணிகள் அனைத்தையும் நிறுத்தவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. ஆனாலும், தற்போது அனைத்து பிரச்சனைகளும் தீர்வை எட்டியநிலையில், புதிய சீனகம்பனியின் துணையுடன், மீளவும் Krish Squareஇற்கான வேலைகள் ஆரம்பித்திருக்கின்றன. முழுமையாக 95 அடுக்குமாடிகளை கொண்டதாக அமையவுள்ள இந்தக் கட்டிடம். ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புக்களையும், அலுவலக வசதிகளையும் கொண்டதாக அமையப் பெறுகிறது.
 

Altitude (96 Iconic Tower)
 
அமைவிடம் – கொழும்பு 08 (ராஜகிரிய)
மொத்த பெறுமதி – USD 300M
உயரம் – 1257 Ft
கட்டிமுடிக்க எதிர்பார்க்கும் காலம் – 2019/20
உரிமையாளர் – Bharat Diamond Bourse (இந்தியா)
(grandengineer.ru)
 
இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் முதலாவது உலகக்கோப்பையை 1996ல் வெற்றிகொண்டதையும், அதன்போது இலங்கை அணித்தலைவர் அர்ஜுனா ரணதுங்க உலகக்கோப்பையை ஏந்திநின்ற வரலாற்றையும் மறந்திருக்கமாட்டீர்கள். அவ்வாறு, கைகளில் தவழ்ந்த உலககோப்பையை அடிப்படையாகக்கொண்டு நினைவுசின்னமாக இந்த கட்டிடம் அமையப்பெற இருக்கிறது. மொத்தமாக 96 அடுக்குமாடிகளை கொண்டதாக உள்ளதுடன், இதில் 376 ஆடம்பர குடியிருப்புக்கள், 92 ஆடம்பர வீடுகள் , சந்தைத்தொகுதி , பேரங்காடி (Shopping Mall) சினிமா திரையரங்கு மற்றும் உள்ளக கிரிக்கெட் அரங்கு என்பனவும் அமையப்பெற உள்ளது.
 
 
Altair
 
அமைவிடம் – கொழும்பு 02 (கங்காராமவுக்கு முன்னால்) 
மொத்த பெறுமதி – USD 111M 
உயரம் – 787 Ft 
கட்டிமுடிக்க எதிர்பார்க்கும் காலம் – 2018/19 
உரிமையாளர் – INDOCEAN DEVELOPERS (PVT) LTD (altair.lk)
 
இலங்கையில் கட்டப்படுகின்ற வித்தியாசமான தோற்ற அமைப்பைக்கொண்ட கட்டிடத்தொகுதி இதுவாகும். ஆங்கில எழுத்தான “A” யினை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கட்டிடதொகுதியில், சாய்வான தளம் 63 மாடிகளையும், உயர்ந்து நிற்கும் தளம் 68 மாடிகளையும் கொண்டதாக அமையும். இதில், 400 ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புக்கள் அமைவதுடன், குறித்த கட்டிடத்தில் பேரங்காடி மற்றும் 63வது தளத்தில் பூந்தோட்டம் மற்றும் நீச்சல்குளம் என்பன அமையப்பெற இருக்கிறது. வித்தியாசமான கட்டிடக் கலைக்கு நிபுணத்துவம் பெற்ற Moshe Safdie என்பவரினால் வடிவமைக்கபட்ட கட்டிடத்தொகுதி இது என்பதனாலேயே பாதிக்கும் மேலான அடுக்குமாடி குடியிருப்புக்கள் விற்றுத் தீர்ந்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.


ITC Colombo
 
அமைவிடம் – கொழும்பு 01 (காலிமுகத்திடல் கடற்கரைக்கு முன்னால்)
மொத்த பெறுமதி – USD 140M
உயரம் – 738 Ft
கட்டிமுடிக்க எதிர்பார்க்கும் காலம் – 2021/22
உரிமையாளர் – ITC Group of Company (இந்தியா) (static1.gensler.com)
 
ITCயின் கட்டிட அமைப்பானது இரட்டைக் கோபுரத்துக்கு ஒப்பான அமைப்பைக் கொண்டதாக அமைந்துள்ளது. இதில் பெரிய கோபுரம் முழுவதுமாக ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 350 ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புக்கள் மொத்தமாக 55 மாடியில் அமையள்ளதுடன், சிறிய 33 மாடிகளைக் கொண்ட கோபுரமானது முழுவதுமாக ITC யின் ஆடம்பர விடுதிக்கென ஒதுக்கபட்டுள்ளது. இதில் 133 ஆடம்பர அறைகளையும், ஆடம்பர விடுதிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் உள்ளடக்கியதாக கட்டப்படவுள்ளது. ITC குழுமமானது இந்தியா முழுவதும் 100க்கு மேற்பட்ட ஆடம்பர விடுதிகளை நடாத்திவருகின்ற ஒரு பல்தேசிய நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 
 
 
Clearpoint Residencies
 
அமைவிடம் – கொழும்பு 08 (ராஜகிரிய) மொத்த
பெறுமதி – USD 55M
உயரம் – 610 Ft
கட்டிமுடிக்க எதிர்பார்க்கும் காலம் – 2016/17
உரிமையாளர் – Milroy Perera Associates (இலங்கை)(rentbuysrilanka.com)
 
இலங்கையில் அமையப்பெறும் வேறுபட்ட வானுயரக் கோபுரங்களில் இதுவும் ஒன்று. இக்கட்டிடம் முற்றுப்பெறும்போது, இது இலங்கையின் உயரமான செங்குத்து தோட்டத்தை தன்னகத்தே கொண்டதாக அமையப்பெறும். 46 மாடிகளில் 164 ஆடம்பரக் குடியிருப்புக்களை கொண்டதாக அமைந்துள்ள இக்கட்டிடத்தின் ஒவ்வொரு மாடியினையும் தொடர்புபடுத்துவதாக தோட்டங்களை வடிவமைக்க உள்ளார்கள். இதனால், குளிர்காற்று பதனாக்கியின் (AC) பயன்பாட்டை குறைப்பதன் மூலம், அதிகளவிலான மின்சக்தியை சேமிக்க முடியுமெனவும் எதிர்பார்க்கிறார்கள். இத்தகைய தோட்டங்களை அமைப்பதன் மூலம், நகர்ப்புற சூழலில் ஏற்படக்கூடிய வெளிப்புற ஒலியலைகளின் பாதிப்பையும் குறைக்க கூடியதாக இருக்கும். இவற்றுக்கு மேலதிகமாக, இந்த தோட்டத்திற்கான நீர் மழை நீர் சேகரிப்பு மூலமாகவும், கழிவு நீரை சுத்திகரித்து பயன்படுத்துவதன் மூலமாகவும் விநியோகிக்கபடவுள்ளது. இதனால், நீர் விரயமும் கட்டுப்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. முழுமையான பசுமைப் புரட்சியை அடிப்படையாகக்கொண்டு இந்த கட்டிடத்தொகுதி அமையப்பெறவுள்ளது.
 
 

Hyatt Regency
 
அமைவிடம் – கொழும்பு 03 (கொள்ளுப்பிட்டி)
மொத்த பெறுமதி – USD 240M
உயரம் – 426 Ft
கட்டிமுடிக்க எதிர்பார்க்கும் காலம் – 2017
உரிமையாளர் – Hyatt Group (அமெரிக்கா)
 
இலங்கைக்கு வருகைதருகின்ற உயர்நிலை வெளிநாட்டு உல்லாசப்பயணிகளை தனது தரப்பெயரைப் (Brand Name) பயன்படுத்தி கவர்வதை இலக்காகக்கொண்டு அமைக்கப்படும் உயர்தர உல்லாச விடுதியாகும். இதில், மொத்தமாக 49 அடுக்குமாடிகள் அமையப்பெருகிறது. அத்தனை அடுக்கு மாடிகளும் 397 உல்லாச அறைகளையும், 61 மத்தியதர உல்லாச அறைகளையும் உள்ளடக்கியுள்ளதுடன் 100 அடுக்குமாடி குடியிருப்புக்களையும் கொண்டதாக அமையவுள்ளது. Hyatt Regencyயுடன் அமையவுள்ள அனைத்து அடுக்குமாடி குடியிருப்புக்களுக்கும் Hyatt Regency உல்லாசவிடுதி சேவைகள் அனைத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பது மற்றுமொரு விசேட அம்சமாகும்.
 

Colombo City Center
 
அமைவிடம் – கொழும்பு 02 (கங்காராமவுக்கு முன்னால்)
மொத்த பெறுமதி – USD 160M
உயரம் – 550-600 Ft Approx
கட்டிமுடிக்க எதிர்பார்க்கும் காலம் – 2019/20
உரிமையாளர் – Silver Needle Hospitality & Abans Group (சிங்கப்பூர்&இலங்கை)
(marijanaberic.com)
 
Colombo City Center கட்டிடத் தொகுதியானது ஒரு பல்லியல் தன்மை கொண்ட கட்டிடதொகுதியாக அமைய இருக்கிறது. இது மொத்தமாக 65 மாடிகளை கொண்டுள்ளதுடன், அதில் முதல் 5 அடுக்குமாடிகள் உயர்தரத்தை பிரதிபலிக்கும் சந்தைப்பொருட்களை காட்சிபடுத்தும் வணிகங்களுக்கும், உணவருந்தக்கூடிய உணவுத்தொகுதி ஒன்றுகுமாக ஒதுக்கபட்டுள்ளதுடன், ஆஸ்திரேலியாவை தளமாக கொண்ட Next Hotel நிறுவனத்தினர் தமது உல்லாசவிடுதியை அமைக்க அடுத்த சில அடுக்குமாடிகள் ஒதுக்கபட்டுள்ளது. இதில் மொத்தமாக 196 உல்லாச அறைகள் அமையவுள்ளதுடன், ஒரு உல்லாசவிடுதிக்கு தேவையான நீச்சல் குளம் உட்பட, வெளியாக உணவருந்தும் அமைப்புக்கள் அனைத்துமே மேல்தளத்தில் அமையபெறும். அதற்கு மேலான 29 அடுக்குமாடியிலும் சுமார் 200 அறைகளை கொண்ட ஆடம்பர குடியிருப்புக்கள் அமையப்பெறும். இதில் அமையவுள்ள அத்தனை ஆடம்பர குடியிருப்புக்களும் Next Hotel உல்லாசவிடுதி சேவைகள் அனைத்தையும் பெற்றுக்கொள்ள முடியும் என்பது மற்றுமொரு விசேட அம்சமாகும்.
 
 
Cinnamon Life
அமைவிடம் – கொழும்பு 02 (Slave Island)(keells.com)
மொத்த பெறுமதி – USD 600M
உயரம் – 550-600 Ft Approx
கட்டிமுடிக்க எதிர்பார்க்கும் காலம் – 2019/20
உரிமையாளர் – JKH Group (இலங்கை)
 
Cinnamon Life இலங்கை வரலாற்றில் மற்றுமொரு மிகப்பாரிய கட்டிடநிர்மாணத் திட்டமாகும். முழுமையான ஒரு வாழ்க்கைச் சூழலை அடிப்படையாக கொண்டதாக, இந்த திட்டம் வடிவமைக்கபட்டுள்ளது. ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்புக்கள் , உயர்தர பேரங்காடி, உயர்தர இலங்கையின் உல்லாசவிடுதி (Cinnamon Luxurious Hotel) மற்றும் உலகவர்த்தக மைய கட்டிடத்தொகுதிக்கு இணையான அலுவலக இடத்தொகுதியை முழுமையாக உள்ளடக்கியதாக இந்தத் திட்டம் அமையவுள்ளது. இதில் ஆடம்பர அடுக்குமாடிக்குடியிருப்புக்களைக் கொண்ட கட்டிடம் மாத்திரம் தனியே 45 மாடிகளை கொண்டுள்ளது. அதுபோல, உல்லாசவிடுதி கட்டிடத்தொகுதி 800 ஆடம்பர உல்லாச அறைகளை கொண்டதாக வடிவமைக்கபட்டுள்ளது. அத்துடன், இந்த திட்டத்திற்கென, பெரியா ஏரி (Beria Lake) முழுமையாக சுத்திகரிக்கபட்டு உல்லாச பயணம் மேற்கொள்ளகூடியதாக மாற்றப்படுவதுடன், அதற்குக் குறுக்காக பாலமொன்று அமைக்கவும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
 

Achilleion
அமைவிடம் – கொழும்பு 04 (Majestic Cityக்கு அடுத்து)
மொத்த பெறுமதி – வெளியிடப்படவில்லை
உயரம் – 600 Ft Approx
கட்டிமுடிக்க எதிர்பார்க்கும் காலம் – 2020/21
உரிமையாளர் – Blue Mountain , Titan Palmer & Turner Group (இலங்கை & சிங்கப்பூர்)
 
Achilleion கட்டிட நிர்மாணமானது இலங்கையின் முதலாவது ஏழு நட்சத்திர பெறுதியை உடைய கட்டிடத்தெகுதி என்கிற பெயரை பெறுகிறது. மொத்தமாக 48 அடுக்குமாடிகளையும், 616 ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புக்களையும் தன்னகத்தே கொண்டதாக அமையவுள்ளது. அதுமட்டுமல்லாது, இந்த கட்டிட வடிவமைப்பு 2016/17ம் ஆண்டுக்கான சிறந்த குடியிருப்புக்கான கட்டிட வடிவமைப்பு விருதை வெற்றிகொண்டுள்ளது. இந்தக் கட்டிடத்தில், இலங்கையில் முதல்முறையாக உயரமான வான்தொடு பாலம் (SKY Bridge) , வான்தொடு உணவகம் (Tallest Sky Restaurant) , வான்தொடு முடிவில்லா நீச்சல்குளம் (Sky infinity Swimming Pool). குடியிருப்பாளர்களுக்கான ஹெலிகொப்டர் தரையிறங்கும் வசதி என்பனவும் அமைக்கப்படவுள்ளது.
 
 
Shangri-la
அமைவிடம் – கொழும்பு 01 (காலிமுகத்திடலுக்கு முன்னால்)
மொத்த பெறுமதி – USD 600M
உயரம் – 636 Ft
கட்டிமுடிக்க எதிர்பார்க்கும் காலம் – 2017/18
உரிமையாளர் – Shangri-la (சீனா)
 
அனைவர்க்கும் தெரிந்தவகையில் காலிமுகத்திடலில் அமையவுள்ள உல்லாசவிடுதியும், ஆடம்பர குடியிருப்புமே Shangri-la திட்டமாகும். இதில் ஐந்து நட்சத்திர வசதிகளை உள்ளடக்கியதாக 500 ஆடம்பர அறைகளை கொண்ட இவ்விடுதி, One Galle-face என்கிற பெயரில் 41 அடுக்குமாடிகளை கொண்ட ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு அருகில் அமையவுள்ளது. இவற்றுக்கு மேலதிகமாக அலுவலக தளத்தினையும், 7 உயர்தர உணவக வசதிகளை கொண்டதாகவும் மற்றுமொரு கட்டிடதொகுதி அமையவுள்ளது. குறிப்பாக, காலிமுகத்திடலை அண்டியதாக அமையவுள்ள இலங்கையின் நிதி நகரத்தை (Financial City) குறிவைத்து இந்த திட்டத்தை Shangri-la குழுமம் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 
இவற்றை தவிரவும், சுவிற்சலாந்தை தலைமையமாக கொண்ட Movenpick (USD 35 Mn) உல்லாசவிடுதி, தம்ரோ (Damro) நிறுவனத்தின் பங்குதாரராக Marino Sands Hotel (USD 30 Mn) , அமெரிக்காவை தலைமையகமாக கொண்ட Sheraton Hotel (USD 80 Mn), Astoria (USD 57 Mn) போன்ற பல வான்தொடு கட்டிடங்களும் அமைகின்றது.

 

  முன்அடுத்த   
Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

*  சராசரி மனிதனின் தகவல்கள்....
   குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
   உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.
   ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்
   இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்
   மிகவும் குளிரான பகுதி - மூக்கு
   வியர்க்காத உறுப்பு - உதடு
   சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
   நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
   வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
   இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தனிமை விரும்பிகளுக்கு தலவாக்கலை!!
குளிர் விரும்பிகளும், பரபரப்பான நகர்ச் சூழலிலிருந்து விடுபட்டு இயற்கையை குளுமையுடன் ரசிக்கவேண்டும் என்று
17 November, 2017, Fri 3:39 | views: 551 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அறியப்படா இலங்கையின் அழகு செம்புவத்த ஏரி!
இலங்கையிலிருந்து வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் பயணிகளின் சுற்றுலா நிரலில் அதிகம் இடம்பிடிக்கக் கூடிய
24 October, 2017, Tue 13:10 | views: 1528 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அழியப் போகும் ஆடல் கலை!
“ஆடல் கலையே தேவன் தந்தது” இது வெறும் சினிமா பாடல் வரிகள் மட்டுமே இல்லை. நாம் கற்கால மனிதர்களாக
7 October, 2017, Sat 16:01 | views: 930 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
நம் அன்றாட வாழ்வில் நாசா!
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையம் (நாசா) இன்று வான்வெளி ஆராய்ச்சியிலும், தொழில்நுட்பம் மற்றும்
3 October, 2017, Tue 14:44 | views: 859 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ராமர் பாலம் – புராணமா ? அறிவியலா ?
ராமேஸ்வரத்தில் உள்ள தனுஷ்கோடி கடல் பகுதியை ஆழப்படுத்தி கப்பல் போக்குவரத்துக்கு ஏதுவாக ஒரு திட்டம்
19 September, 2017, Tue 16:52 | views: 1354 |  செய்தியை வாசிக்க

Amthyste International
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS