வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
091216
Bail விற்பனைக்கு
140117
அறை வாடகைக்கு
130117
Bail விற்பனைக்கு
070117
வீடு விற்பனைக்கு
271216
Bail விற்பனை
271216
Bail விற்பனை
141216
வீடு விற்பனைக்கு
091216
வீடுகள் விற்பனைக்கு
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
தேசத்துக்கு நேர்ந்த பேரிடர்!: ரூபாய் நோட்டு நடவடிக்கை குறித்து மன்மோகன் சிங்
12 January, 2017, Thu 3:02 GMT+1  |  views: 606
  • Mohan Jewellery Mart
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் இதுவரை சந்திக்காத பேரிடரை நாடு எதிர்கொண்டுள்ளது என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசுக்கு எதிராக போராட்டத்தை முன்னெடுக்குமாறு மக்களுக்கு அறைகூவல் விடுக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
உயர் மதிப்புடைய ரூபாய் நோட்டுகளைத் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்ததற்கு, பல்வேறு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. குறிப்பாக காங்கிரஸ் கட்சி மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகிறது. இந்நிலையில், காங்கிரஸ் சார்பில் தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், இதுகுறித்து பேசியதாவது:
பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து எடுத்துவிட்டால், கருப்புப் பணம் ஒழிந்துவிடும் என மத்திய அரசு நினைக்கிறது. ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் பொதுமக்களுக்கு அசெளகரியங்கள் ஏற்பட்டதுடன், அதைத் தாண்டி பொருளாதார நிலையிலும் பல்வேறு பாதிப்புகள் எழுந்துள்ளன.
இதனால் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறையும். தற்போது நாட்டின் பொருளாதாரம் படிப்படியாக பாதிக்கப்பட்டு வருகிறது. வரும் நாள்களில் அந்த நிலை மேலும் மோசமடையும்.
ரூபாய் நோட்டு வாபஸ் காரணமாக நாடு சந்தித்துள்ள பேரிடர் என்ன? என்பது குறித்து மக்களிடத்தில் காங்கிரஸார் விளக்கிக் கூற வேண்டும். மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களை நடத்துமாறு அறைகூவல் விடுக்க வேண்டும் என்றார் அவர்.
இதைத்தொடர்ந்து, மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் பேசியதாவது: ரூபாய் நோட்டு வாபஸ் குறித்து ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்ததாகவும், அதன் பிறகு கடந்த ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதியன்று மத்திய அமைச்சரவையைக் கூட்டி ஆலோசித்து முடிவு செய்ததாகவும் மத்திய அரசு தெரிவித்தது.
ஆனால், அந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ரூபாய் நோட்டு விவகாரம் குறித்து முடிவு செய்ததற்கான எவ்வித குறிப்பும் இல்லை. மத்திய அரசின் கூற்றுக்கு ஆதாரம் எங்கே? மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1 சதவீதம் குறைந்தால் கூட, தேசத்துக்கு ரூ.1.5 லட்சம் கோடி இழப்பு ஏற்படும். ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கையால் அதைக் காட்டிலும் கூடுதலாக வருவாய் இழப்பு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.
ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் நிலவுவது இயல்பு. இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் தற்போது ரிசர்வ் வங்கியின் நிலை உள்ளது. மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும் ஏதோ ஒரு துறை போல ரிசர்வ் வங்கி செயல்படுகிறது என்றார் சிதம்பரம்.

பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சூஜியோகிராபி (Zoogerogrphy)

பூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தில்லியில் மெழுகுவர்த்தி ஏந்தி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு!!!
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்து, மாநிலங்களவை முன்னாள் பாஜக உறுப்பினரும், தமிழ் ஆர்வலருமான தருண் விஜய்
19 January, 2017, Thu 3:06 | views: 230 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தீபா விரைவில் அதிமுகவில் இணைவார்: நடராஜன் நம்பிக்கை
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா விரைவில் அதிமுக-வில் இணைவார் என்று சசிகலாவின் கணவர் நடராஜன் நம்பிக்கை தெரிவித்து....
19 January, 2017, Thu 3:04 | views: 134 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜல்லிக்கட்டு போராட்டத்தைக் கைவிட இளைஞர்களுக்கு முதல்வர் உத்தரவாதத்துடன் வேண்டுகோள்
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் தங்கள் போராட்டங்களை கைவிட வேண்டும் என முதல்வர் ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
19 January, 2017, Thu 3:00 | views: 239 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜல்லிக்கட்டு: இளைஞர்கள் எழுச்சிப் போராட்டம்: குவிந்த மாணவர்கள், மெரீனாவில் பதற்றம், போலீஸ் தடியடி
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை
19 January, 2017, Thu 2:58 | views: 123 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜல்லிக்கட்டு விவகாரம்: புதுச்சேரியில் நாளை பந்த் போராட்டம் அறிவிப்பு
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கவும், பீட்டாவுக்கு தடை விதிக்கவும் வலியுறுத்தி வரும் வெள்ளிக்கிழமை புதுச்சேரியில் பந்த்
18 January, 2017, Wed 14:51 | views: 441 |  செய்தியை வாசிக்க
  Annonce
parking வாடகைகஂகு
60 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Vt Cash & Carry
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS