வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
091216
Bail விற்பனைக்கு
140117
அறை வாடகைக்கு
130117
Bail விற்பனைக்கு
070117
வீடு விற்பனைக்கு
271216
Bail விற்பனை
271216
Bail விற்பனை
141216
வீடு விற்பனைக்கு
091216
வீடுகள் விற்பனைக்கு
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
தீர்ப்பு சாதகமாக வந்தால் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி-மத்திய அமைச்சர் உறுதி!!!
12 January, 2017, Thu 2:57 GMT+1  |  views: 640
  • Mohan Jewellery Mart
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தீர்ப்பு சாதகமாக வந்தால் ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கத் தயார் என்று மத்திய சுற்றுச்சூழல், வனத் துறை இணையமைச்சர் அனில் மாதவ் தவே உறுதியளித்தார்.
தில்லியில் மத்திய இணையமைச்சர் அனில் மாதவ் தவேவை அவரது இல்லத்தில் அதிமுகவைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் 27 பேர் மக்களவைத் துணைத் தலைவர் மு.தம்பிதுரை தலைமையில் புதன்கிழமை சந்தித்துப் பேசினர்.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கக் கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிமுக பொதுச் செயலர் வி.கே. சசிகலா எழுதியுள்ள கடிதத்தின் நகலை அப்போது அனில் மாதவ் தவேவிடம் தம்பிதுரை அளித்தார். சுமார் 20 நிமிடங்கள் இச்சந்திப்பு நடைபெற்றது. இது குறித்து பின்னர் செய்தியாளர்களிடம் அனில் மாதவ் தவே கூறியதாவது:
தீர்ப்புக்கு பின் நடவடிக்கை: ஜல்லிக்கட்டு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் விரைவாக தீர்ப்பு அளிக்க கேட்டுக் கொள்ளலாம் என தனிப்பட்ட முறையில் கருதுகிறேன். ஒரு அரசாங்கம் என்ற முறையில், உச்ச நீதிமன்றம் முறைப்படி தீர்ப்பு அளிக்க வேண்டும் என்பதற்காக காத்திருக்கிறோம். மத்திய அரசுத் தரப்பில் எல்லாம் (அறிவிக்கை வெளியிடும் நடவடிக்கை) தயார் நிலையில் உள்ளது.
நாடாளுமன்றம் மூலம் அவசரச் சட்டம் கொண்டு வருவது ஒரு வாய்ப்பாக இருந்தாலும், நீதிமன்றத்தில் இந்த விவகாரம் மீதான தீர்ப்பு எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் நிலை உள்ளது. ஜனநாயகத்தில் "நாடாளுமன்றம்' மிகப் பெரியது. அதே சமயம், நீதித் துறையை மதிக்கும் வகையில், நிலுவை வழக்கில் தீர்ப்புக்காகக் காத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு கருதுகிறது.
ஜல்லிக்கட்டின் போது காளைகள் துன்புறுத்தப்படுவது கிடையாது. ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உரிய நீதியை உச்ச நீதிமன்றம் வழங்கும் என நம்புகிறேன். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு சாதகமாக வந்தால், ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் பங்கேற்க வகை செய்யும் அனுமதியை அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது என்றார் அனில் மாதவ் தவே.
இதைத் தொடர்ந்து தம்பிதுரை கூறியதாவது: ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்கும் வகையில், அவசரச் சட்டத்தை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்தியில் 2011-இல் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கூட்டணி அரசும் அதில் அங்கம் வகிக்கும் திமுகவும் செய்த தவறால் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என சம்பந்தப்பட்ட துறையின் அமைச்சரே (அனில் மாதவ் தவே) கூறியுள்ளார்.
அனைத்துத் தரப்பினரோடு ஒன்று சேர்ந்து, அரசியலுக்கு அப்பாற்பட்டு, தமிழ் மக்களுக்காக ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கேட்டு அதிமுக சார்பில் தில்லிக்கு வந்துள்ளோம். நல்ல முடிவு எடுக்கப்படும் என நம்புகிறோம் என்றார் தம்பிதுரை.

பொதறிவுத் துணுக்கு :

* உடலில் ரத்தம் பாயாத பகுதி

  கருவிழி

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஜல்லிக்கட்டு விவகாரம்: புதுச்சேரியில் நாளை பந்த் போராட்டம் அறிவிப்பு
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கவும், பீட்டாவுக்கு தடை விதிக்கவும் வலியுறுத்தி வரும் வெள்ளிக்கிழமை புதுச்சேரியில் பந்த்
18 January, 2017, Wed 14:51 | views: 397 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தில்லியில் நாளை பிரதமர் நரேந்திர மோடியுடன் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்த முடிவு
ஜல்லிக்கட்டு குறித்து நாளை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பிரதமர் மோடியை சந்தித்து பேசவுள்ளார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 January, 2017, Wed 14:43 | views: 218 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜல்லிக்கட்டு போராட்டம்: முதல்வர் ஓபிஎஸ் - டிஜிபி ராஜேந்திரன் அவசர ஆலோசனை
ஜல்லிக்கட்டு போராட்டம் குறித்து முதல்வர் ஓபிஎஸ் தலைமைச் செயலகத்தில் டிஜிபி ராஜேந்திரனுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.
18 January, 2017, Wed 11:14 | views: 473 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அலங்காநல்லூரில் 2-ஆவது நாளாக போராட்டம்: அரசியல் கட்சிகளுக்கு எதிர்ப்பு!
அலங்காநல்லூரில் பொதுமக்கள், இளைஞர்கள் செவ்வாய்க்கிழமை ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடத்திய போராட்டத்தில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்
18 January, 2017, Wed 2:59 | views: 461 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜல்லிக்கட்டுக்கு வலுக்கிறது ஆதரவு: மெரீனாவில் இளைஞர்கள் தொடர் போராட்டம்
ஜல்லிக்கட்டை நடத்தக் கோரி தமிழகம் முழுவதும் ஆதரவு வலுத்து வருகிறது. இந்த நிலையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரீனாவில் 2 ஆயிரம்
18 January, 2017, Wed 2:58 | views: 208 |  செய்தியை வாசிக்க
  Annonce
parking வாடகைகஂகு
60 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Vt Cash & Carry
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS