வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
140117
அறை வாடகைக்கு
130117
Bail விற்பனைக்கு
070117
வீடு விற்பனைக்கு
271216
Bail விற்பனை
271216
Bail விற்பனை
141216
Bail விற்பனைக்கு
091216
வீடு விற்பனைக்கு
091216
வீடுகள் விற்பனைக்கு
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம்!! திசைமாறித் தவறாக வாகனம் செலுத்துபவர்களைக் கண்காணிக்கும் புதிய ரடார்!!!
France Tamilnews
வாகனச்சாரதிகள் அவதானம் - கருமையூட்டப்பட்ட கண்ணாடிகளிற்குத் தடை!!
France Tamilnews
ஜல்லிக்கட்டு உறுதியாக நடக்கும் - முதல்வர் !!!
12 January, 2017, Thu 2:55 GMT+1  |  views: 320
  • Mohan Jewellery Mart
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்வோம் எனவும், அதில் எள்ளளவும் பின்வாங்க மாட்டோம் என்றும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதிபடத் தெரிவித்தார்.
தமிழர்களின் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை கட்டிக் காப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து புதன்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதற்கு ஏதுவாக மத்திய அரசு அவசர சட்டத்தை பிறப்பிக்க வேண்டுமென பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன். இதுபற்றி மத்திய அரசிடமிருந்து எந்தவித பதிலும் இதுவரை பெறப்படவில்லை.
இந்த நிலையில், ஜல்லிக்கட்டு நடத்தப்பட வேண்டுமென்று வலியுறுத்தி பல அமைப்புகளும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், பல அரசியல் கட்சித் தலைவர்களும் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்த விளக்கத்தை மக்களுக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.
உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளின் அடிப்படையில் கடந்த ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வந்த சூழ்நிலையில், 2011 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போதைய மத்திய அரசானது காட்சிப்படுத்தும் விலங்கினங்கள் பட்டியலில் காளையையும் சேர்த்தது.
இதைத் தொடர்ந்து வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றமானது, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடத்த தடை பிறப்பித்தது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதை முற்றிலும் தடை செய்து விட்டதால், இதனை எதிர்த்து தமிழக அரசால் மறுஆய்வு மனு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மறு ஆய்வு மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
தொடர் வற்புறுத்தல்: இந்த நிலையில், ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை தமிழகத்தில் அனுமதிக்கும் வகையிலான எந்தவித மசோதாவும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படாத நிலையில், அவசரச் சட்டத்தை உடனடியாகக் கொண்டு வர வேண்டுமென பிரதமருக்கு மறைந்த முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியிருந்தார்.
அவரது தொடர் வற்புறுத்தலின் காரணமாக, மத்திய அரசின் சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்றம் அமைச்சகமானது கடந்த ஆண்டு ஜனவரியில் ஒரு அறிவிக்கையை வெளியிட்டது. இந்த அறிவிக்கையின்படி, காளைகள் என்பது காட்சிப்படுத்தும் விலங்குகள் பட்டியலில் தொடர்ந்து இருந்தாலும், ஒரு காப்புரையை சேர்த்தது.
இந்தக் காப்புரையில் உச்ச நீதிமன்றம் குறிப்பிட்ட ஐந்து உரிமைகள், பிராணிகள் வதை தடுப்புச் சட்டத்திலுள்ள கூறுகள் ஆகியன கடைபிடிக்கப்பட வேண்டுமெனத் தெரிவித்தது.
ஆனாலும், இதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் மத்திய அரசு வெளியிட்ட அறிவிக்கைக்கு தடை விதித்தது.
ஜல்லிக்கட்டு நடத்தப்படுவதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் கடந்த 2014}ஆம் ஆண்டு தீர்ப்பளித்ததற்கு முக்கியமான காரணமே திமுக அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கடந்த 2011 ஆம் ஆண்டு வெளியிட்ட அறிவிக்கைதான்.
ஜல்லிக்கட்டுத் தடைக்கு காரணமாக இருந்துவிட்டு ஆர்ப்பாட்டங்களை நடத்துவதால் தமிழக மக்கள் ஏமாந்து போக மாட்டார்கள். வழக்கம் போலவே, அரசியல் ஆதாயத்துக்காக தமிழக நலனை விட்டுக் கொடுக்க திமுக முற்பட்டுள்ளது.
தமிழகத்தின் உரிமைகளை காத்து அவற்றை மீட்டெடுத்தவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. காவிரி நதிநீர், முல்லைப் பெரியாறு பிரச்னைகள் என்றாலும், சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு என்றாலும், தமிழர் நலன் ஒன்றையே கருத்தில் கொண்டு அதனைப் பாதுகாத்தவர் ஜெயலலிதா.
அவர் வழியில் செல்லும் நானும், தமிழக அரசும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை நிச்சயம் உறுதி செய்வோம். அதில் எள்ளளவும் பின்வாங்க மாட்டோம். தமிழர்களின் பண்பாடு, கலாசாரம் ஆகியவற்றை கட்டிக் காப்போம் என்பதை தமிழக மக்களுக்கு உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தனது அறிக்கையில் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

பொதறிவுத் துணுக்கு :

*  சராசரி மனிதனின் தகவல்கள்....
   குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
   உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.
   ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்
   இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்
   மிகவும் குளிரான பகுதி - மூக்கு
   வியர்க்காத உறுப்பு - உதடு
   சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
   நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
   வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
   இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பாலமேட்டில் தடையை மீறி ஜல்லிக்கட்டு; போலீஸார் தடியடி
மதுரை மாவட்டத்தில், 14 இடங்களில் தடையை மீறி ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. பாலமேட்டில் தடையை மீறி காளைகள் அவிழ்த்து
16 January, 2017, Mon 5:01 | views: 414 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சமூக வலைதளங்களில் கருத்து கூடாது: விபின் ராவத்
சமூக வலைதளங்களில் தங்களது குறைகளை வெளியிடும் வீரர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் எச்சரித்தார்.
16 January, 2017, Mon 4:56 | views: 278 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
என்எஸ்ஜி-யில் இந்தியா இணைய சீனாதான் தடை: அமெரிக்கா
அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியாவை சேர்த்துக் கொள்வதற்கு சீனாதான் முட்டுக்கட்டையாக இருப்பதாக அமெரிக்கா
16 January, 2017, Mon 4:54 | views: 173 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
3-வது ஆண்டாக ஜல்லிக்கட்டு இல்லாத பொங்கல் பண்டிகை
உச்ச நீதிமன்றம் தடையை நீக்க மறுத்ததால் தமிழகத்தில் மூன்றா வது ஆண்டாக ஜல்லிக்கட்டு இல் லாத பொங்கல் பண்டிகை கொண் டாடப்படுகிறது.
15 January, 2017, Sun 5:29 | views: 876 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இன்று இந்திய ராணுவ தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், மதிப்பிட முடியாத சேவைக்கும் தலை வணங்குவதாக இந்திய ராணுவ தின வாழ்த்து செய்தியில் பிரதமர் மோடி
15 January, 2017, Sun 5:25 | views: 215 |  செய்தியை வாசிக்க
  Annonce
parking வாடகைகஂகு
60 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Vt Cash & Carry
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS