வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
190117
தேவை
190117
Bail விற்பனைக்கு
091216
Bail விற்பனைக்கு
140117
அறை வாடகைக்கு
130117
வீடு விற்பனைக்கு
271216
Bail விற்பனை
271216
Bail விற்பனை
141216
வீடு விற்பனைக்கு
091216
வீடுகள் விற்பனைக்கு
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
சர்வதேசத்தின் அழுத்தம்! பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் திருத்தம்!
11 January, 2017, Wed 8:34 GMT+1  |  views: 716
  • Mohan Jewellery Mart
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 தமிழர்களை அடக்குவதற்காக சிறிலங்கா அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது. 

 
சர்வதேசத்தின் தொடர் அழுத்தம் காரணமாக பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்க வேண்டிய கட்டாயத்தில் சிறிலங்கா உள்ளது. 
 
இந்நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக, புதிதாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது. 
 
இந்தச் சட்டம் தொடர்பான பிரதிவாதங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. புதிய சட்டம் தொடர்பான நகல் வரைவில் திருத்தங்களைச் செய்ய சிறிலங்கா அரசாங்கம் இணங்கியுள்ளது.
 
புதிதாக கொண்டு வரப்படும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் தொடர்பான நகல் ஆவணம் கடந்த செப்ரெம்பரில் சிறிலங்கா அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
 
இந்த நகல் ஆவணம், வெளியே கசிந்த நிலையில், அதில் இடம்பெற்றிருந்த பல்வேறு விடயங்கள் குறித்து கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
 
இந்த நிலையிலேயே, அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட மூல வரைவில் திருத்தங்களைச் செய்ய சிறிலங்கா அரசாங்கம் இணங்கியுள்ளது.
 
இந்த திருத்தங்கள் தொடர்பாக, நாடாளுமன்ற வளாகத்தில் நேற்று நடந்த தேசிய பாதுகாப்புத் தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழுவின் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
 
இந்தக் கூட்டத்தில் சூடான விவாதங்கள் நடந்ததாக, துறைசார் கண்காணிப்புக் குழுவின் உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
 
சந்தேகநபர் ஒருவரிடம் இருந்து முதல் வாக்குமூலம் பெறுவதற்கு முன்னதாக, சட்டவாளரை அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட சில விதிமுறைகள் தொடர்பாக இன்னமும் முடிவு எடுக்கப்படாமலேயே நேற்றைய கூட்டம் முடிவடைந்தது.
 
சந்தேக நபர் கைது செய்யப்பட்டவுடன், சட்டவாளரைச் சந்திக்க அனுமதிக்கப்பட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜேவிபி என்பன, துறைசார் கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளன.
 
எனினும், பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் திருத்தங்களுடன் நேற்று அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே இந்த திருத்த வரைவை அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளார்.
 
இந்த திருத்தங்களுக்கு அமைச்சரவை அனுமதி பெறப்பட்ட பின்னர், நாடாளுமன்றத்தில் சட்டமூலம் சமர்ப்பிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
சிறிலங்கா அரசின் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட வரைவு குறித்து அனைத்துலக மனித உரிமை அமைப்புகள் கவலை வெளியிட்டிருந்த நிலையிலேயே, அதில் சில திருத்தங்களை செய்ய சிறிலங்கா அரசாங்கம் இணங்கியுள்ளது.
 
பொதறிவுத் துணுக்கு :

*  சராசரி மனிதனின் தகவல்கள்....
   குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
   உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.
   ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்
   இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்
   மிகவும் குளிரான பகுதி - மூக்கு
   வியர்க்காத உறுப்பு - உதடு
   சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
   நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
   வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
   இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
சாதனை படைத்த மாணவர்கள்: அவசர சட்டம் பிறப்பித்த இரண்டே நாளில் நிரந்தர சட்டம்!
சென்னை மெரினா கடற்கரையில் மாணவர்கள் நடத்தி வந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
23 January, 2017, Mon 14:32 | views: 481 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வன்முறைக் களமான மெரினா: காவல் நிலையத்துக்கு 'தீ' வைப்பு - பின்னணியில் யார்?
சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கடந்த 6 நாட்களாக போராட்டம் அமைதியாக நடைபெற்றது.
23 January, 2017, Mon 13:32 | views: 523 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறிலங்கா வான்பரப்பில் இன்று ஏற்படவுள்ள அதிசயம்!
சிறிலங்கா வான்பரப்பினை விண்வெளி மையம் கடந்து செல்லும் நிகழ்வை இன்று அவதானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
23 January, 2017, Mon 8:10 | views: 828 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கிளிநொச்சியில் மூன்று சிறுவர்கள் மாயம்! தேடும் பணிகள் தீவிரம்
கிளிநொச்சி, உருத்திரபுரத்தில் உள்ள காந்தி சிறுவர் இல்லத்தில் இருந்து மூன்று சிறுவர்கள் காணாமல் போயுள்ள
23 January, 2017, Mon 7:16 | views: 546 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கொலைக்குற்றச்சாட்டில் சிக்கவுள்ள கோத்தபாய?
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க படுகொலை செய்யப்பட்டமை தொடர்பாக, முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோ
23 January, 2017, Mon 5:41 | views: 573 |  செய்தியை வாசிக்க
  Annonce
பல்பொருள் வாணிபம்
35000 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Vt Cash & Carry
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS