வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
140117
அறை வாடகைக்கு
130117
Bail விற்பனைக்கு
070117
வீடு விற்பனைக்கு
271216
Bail விற்பனை
271216
Bail விற்பனை
141216
Bail விற்பனைக்கு
091216
வீடு விற்பனைக்கு
091216
வீடுகள் விற்பனைக்கு
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம்!! திசைமாறித் தவறாக வாகனம் செலுத்துபவர்களைக் கண்காணிக்கும் புதிய ரடார்!!!
France Tamilnews
வாகனச்சாரதிகள் அவதானம் - கருமையூட்டப்பட்ட கண்ணாடிகளிற்குத் தடை!!
France Tamilnews
வறட்சி பாதித்த மாநிலம் தமிழகம்: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பு
11 January, 2017, Wed 4:16 GMT+1  |  views: 290
  • Mohan Jewellery Mart
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மேலும், வறட்சியால் பாதித்த நெல்-மானாவாரி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5,465 வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்தார்.
தமிழகத்தில் வறட்சியால் பாதித்த மாவட்டங்களில் ஆய்வுகளை மேற்கொள்ள அமைச்சர்கள், அதிகாரிகளைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுக்கள் அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டன.
ஆய்வறிக்கை அளிப்பு: அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வினை மேற்கொண்ட குழு, தங்களது அறிக்கையை அரசுக்கு கடந்த திங்கள்கிழமை (ஜன.9) அளித்தன. இந்தக் குழுக்கள் அளித்த அறிக்கைகளின்படி, விரிவான ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டன.
தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை மிகக் குறைவாக பெய்துள்ளது. எனவே, அனைத்து மாவட்டங்களும் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களாக அறிவிக்கப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் விவசாயிகள் செலுத்த வேண்டிய நிலவரி முழுவதும் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு-வணிக வங்கிகளில் விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடன், மத்திய காலக் கடனாக மாற்றியமைக்கப்படும். இவ்வாறு மாற்றியமைக்கத் தேவையான அன்னவாரி சான்றிதழ்கள் விரைந்து வழங்கப்படும். கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ.3,028 கோடி பயிர்க்கடனாக இந்த ஆண்டு வழங்கப்பட்டுள்ளது. இந்தக் கடன் மத்தியகாலக் கடனாக மாற்றியமைக்கப்படும்.
வறட்சியிலிருந்து மக்களைப் பாதுகாக்க பெரும் பொருட்செலவு தேவை. எனவே, மத்திய அரசின் நிதியுதவி கோரப்படும். அதற்கான வறட்சி நிவாரண கோரிக்கை மனு தயாரிக்கப்பட்டு விரைவில் மத்திய அரசுக்கு அனுப்பப்படும்.
நிவாரண உதவித் தொகை: 33 சதவீதத்துக்கு மேல் மகசூல் இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரண உதவித் தொகை அளிக்கப்படும். ஊரக வளர்ச்சி-ஊராட்சித் துறை மூலம் ஏரிகள் தூர் வாருதல், குளங்கள் சீரமைத்தல், பாசன வாய்க்கால்கள் தூர்வாருதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும்.
இந்தப் பணிகள் அனைத்தும் ரூ.3,400 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். இதன்மூலம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள கிராமப்புற விவசாயத் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுவர். வறட்சி காரணமாக ஏற்படும் கால்நடை தீவனப் பற்றாக்குறையைத் தீர்க்கும் வகையில் பசுந்தீவனம், அடர்தீவனம், உலர் தீவனம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கென ரூ.78 கோடி மதிப்பிலான திட்டங்கள் மேற்கொள்ளப்படும்.
குடிநீர் விநியோகம்: வறட்சியால் நகர்ப்புறங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பற்றாக்குறையைத் தீர்க்கும் வகையில், நீர் ஆதாரங்கள், குடிநீர் விநியோகத்தை மேம்படுத்தும் பணிகள் ரூ.160 கோடியில் மேற்கொள்ளப்படும்.
கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ள குடிநீர்ப் பற்றாக்குறையைத் தீர்க்கும் வகையில், ரூ.350 கோடியில் மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்படும்.
வறட்சியால் வன உயிரினங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, அவற்றுக்குத் தேவையான தீவனம்-குடிநீர் ஆதாரத்தைப் பெருக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். நிலத்தடி நீர்த்தேக்கும் அமைப்பு, நிலத்தடி நீர் செரிவூட்டும் அமைப்பு போன்ற நீராதாரங்கள் மேம்படுத்தும் பணிகள் ரூ.25 கோடியில் மேற்கொள்ளப்படும்.
வறட்சி பாதிப்பு காரணமாக அதிர்ச்சியில் விவசாயிகள் உயிரிழந்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்துள்ளன. இதுபற்றி விரிவான அறிக்கை மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்து கோரப்பட்டுள்ளன. இந்த அறிக்கைகள் கிடைக்கப் பெற்ற பிறகு, இறந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தக்க நிவாரண உதவி அளிக்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

நிவாரண உதவி எவ்வளவு?
இழப்பு ஏற்பட்டுள்ள விவசாயிகளுக்கு நிவாரண உதவித் தொகைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன் விவரம்:- (ஏக்கருக்கு)
நெல் பயிர் ரூ.5,465
இதர நீர்ப் பாய்ச்சப்பட்ட பயிர் ரூ.5,465
மானாவாரி பயிர் ரூ.3,000
நீண்ட கால பயிர் ரூ.7,287
முசுக்கட்டை பயிர் ரூ.3,000
சோளப் பயிர் ரூ.20,000
பயறு வகைகள் ரூ.12,000
கரும்பு ரூ.45,000
மஞ்சள் பயிர் ரூ.50,000
நெல் சாகுபடி செய்த விவசாயிகள், முழு பயிரிழப்பு அதாவது 100 சதவீத பயிரிழப்பு ஏற்பட்டிருந்தால் மாவட்டத்தைப் பொறுத்து, இழப்பீடு பெற இயலும். அதன்படி, காப்பீட்டு நிறுவனங்களிடம் இருந்து ரூ.21,500 முதல் ரூ.26 ஆயிரம் வரை பெறலாம்.
டெல்டா மாவட்டங்களில் இழப்பீடு ரூ.25 ஆயிரம். அங்கு, 80 சதவீத மகசூல் இழப்புக்கு ரூ.20 ஆயிரம். 60 சதவீத இழப்புக்கு ரூ.15 ஆயிரம். 33 சதவீத இழப்புக்கு ரூ.8,250.

தற்கொலை செய்துகொண்ட 17 விவசாயிகள் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்
தற்கொலை செய்து கொண்ட 17 விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களில் 17 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். விவசாயிகளின் இந்தத் தற்கொலைகள் பல்வேறு காரணங்களுக்காக ஏற்பட்டிருந்தாலும், இறந்தவர்களின் குடும்ப நலன் கருதி அவர்களது குடும்பங்களுக்கு முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம் அளிக்கப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

100 நாள் வேலை திட்டம் 150 நாள்களாக உயர்வு
வறட்சி காரணமாக விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் போதிய வேலைவாய்ப்பு இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு போதிய வேலைவாய்ப்பை ஏற்படுத்தும் வகையில், தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ், 100 நாள்கள் பணி வரம்பு என்பது 150 நாள்களாக உயர்த்தப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

பொதறிவுத் துணுக்கு :

எதைப்பற்றியது?

சூஜியோகிராபி (Zoogerogrphy)

பூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பாலமேட்டில் தடையை மீறி ஜல்லிக்கட்டு; போலீஸார் தடியடி
மதுரை மாவட்டத்தில், 14 இடங்களில் தடையை மீறி ஞாயிற்றுக்கிழமை ஜல்லிக்கட்டு நடைபெற்றது. பாலமேட்டில் தடையை மீறி காளைகள் அவிழ்த்து
16 January, 2017, Mon 5:01 | views: 418 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சமூக வலைதளங்களில் கருத்து கூடாது: விபின் ராவத்
சமூக வலைதளங்களில் தங்களது குறைகளை வெளியிடும் வீரர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்று ராணுவ தலைமைத் தளபதி விபின் ராவத் எச்சரித்தார்.
16 January, 2017, Mon 4:56 | views: 281 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
என்எஸ்ஜி-யில் இந்தியா இணைய சீனாதான் தடை: அமெரிக்கா
அணுசக்தி விநியோக நாடுகள் கூட்டமைப்பில் (என்எஸ்ஜி) இந்தியாவை சேர்த்துக் கொள்வதற்கு சீனாதான் முட்டுக்கட்டையாக இருப்பதாக அமெரிக்கா
16 January, 2017, Mon 4:54 | views: 173 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
3-வது ஆண்டாக ஜல்லிக்கட்டு இல்லாத பொங்கல் பண்டிகை
உச்ச நீதிமன்றம் தடையை நீக்க மறுத்ததால் தமிழகத்தில் மூன்றா வது ஆண்டாக ஜல்லிக்கட்டு இல் லாத பொங்கல் பண்டிகை கொண் டாடப்படுகிறது.
15 January, 2017, Sun 5:29 | views: 877 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
இன்று இந்திய ராணுவ தினம்: பிரதமர் மோடி வாழ்த்து
இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், மதிப்பிட முடியாத சேவைக்கும் தலை வணங்குவதாக இந்திய ராணுவ தின வாழ்த்து செய்தியில் பிரதமர் மோடி
15 January, 2017, Sun 5:25 | views: 215 |  செய்தியை வாசிக்க
  Annonce
parking வாடகைகஂகு
60 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Vt Cash & Carry
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS