வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
091216
Bail விற்பனைக்கு
140117
அறை வாடகைக்கு
130117
Bail விற்பனைக்கு
070117
வீடு விற்பனைக்கு
271216
Bail விற்பனை
271216
Bail விற்பனை
141216
வீடு விற்பனைக்கு
091216
வீடுகள் விற்பனைக்கு
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
ரூபாய் நோட்டு நடவடிக்கை உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை கடுமையாக பாதிக்கும்: மன்மோகன் சிங்
10 January, 2017, Tue 1:59 GMT+1  |  views: 503
  • Mohan Jewellery Mart
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

பழைய ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெற்ற நடவடிக்கையானது மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தை கடுமையாக பாதிக்கும் என்று முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் தெரிவித்தார்.
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சி சார்பிலான தேர்தல் அறிக்கையை தில்லியில் மன்மோகன் சிங் திங்கள்கிழமை வெளியிட்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ரூபாய் நோட்டு நடவடிக்கையால் கருப்புப் பணத்தையும், ஊழலையும் ஒருபோதும் ஒழிக்க முடியாது. இந்த நடவடிக்கையின் விளைவாக நாட்டின் பொருளாதாரம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. மேலும், மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்திலும் இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்.
இந்தக் கூற்றை மெய்ப்பிக்கும் விதமாக, தேசிய வருவாய் அமைப்பு சார்பில் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கையில், நிகழ் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதமானது 7.6 சதவீதத்திலிருந்து 7.1 சதவீதமாக குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்தவிதமான திட்டமிடலும், முன்னேற்பாடும் இல்லாமல் மத்திய அரசு கொண்டு வந்த இந்த நடவடிக்கையால் ஏழை மற்றும் நடுத்தர மக்களே கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
இந்த நடவடிக்கையின் விளைவு, எதிர்வரும் 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களிலும் கட்டாயம் எதிரொலிக்கும் என்றார் மன்மோகன் சிங்.
"பஞ்சாபை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வோம்'
அகாலிதளம் - பாஜக அரசால் சீரழிந்து கிடக்கும் பஞ்சாப் மாநிலத்தை வளர்ச்சிப் பாதையில் காங்கிரஸ் கொண்டு செல்லும் என்று மன்மோகன் சிங் உறுதியளித்தார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
பஞ்சாபை ஆளும் அகாலிதளம் - பாஜக அரசு கடந்த 10 ஆண்டுகளாக மாநிலத்தின் நிர்வாகத்தை தவறாகப் பயன்படுத்தியுள்ளது. பஞ்சாபின் மொத்த ஆற்றலையும், வளங்களையும் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான அரசு சுரண்டிவிட்டது. இளைஞர்கள் வேலையின்றி திண்டாடுகின்றனர்.
இனியும் அவர்கள் கையில் பஞ்சாப் சிக்கினால், அதன் எதிர்காலம் மிக மோசமாக இருக்கும். பஞ்சாபை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் திறன் காங்கிரஸுக்கு மட்டுமே உள்ளது. எனவே, இந்தத் தேர்தலில் காங்கிரஸை பெரும்பான்மை பலத்துடன் மக்கள் வெற்றிப் பெறச் செய்ய வேண்டும் என்றார் அவர்.
முன்னதாக, மன்மோகன் சிங் வெளியிட்ட காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு பல்வேறு சலுகைகளும், இலவசங்களும் அறிவிக்கப்பட்டிருந்தன. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாயக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்; விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும்; வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 உதவித்தொகை வழங்கப்படும்; இளைஞர்களுக்கு இலவச "ஸ்மார்ட் ஃபோன்கள்' வழங்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

ஏரோமீட்டர் (Aerometer)

காற்று மற்றும் வாயுக்களின் எடை மற்றும் அடர்த்தியை அளக்கும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தில்லியில் மெழுகுவர்த்தி ஏந்தி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு!!!
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு ஆதரவு தெரிவித்து, மாநிலங்களவை முன்னாள் பாஜக உறுப்பினரும், தமிழ் ஆர்வலருமான தருண் விஜய்
19 January, 2017, Thu 3:06 | views: 231 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தீபா விரைவில் அதிமுகவில் இணைவார்: நடராஜன் நம்பிக்கை
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா விரைவில் அதிமுக-வில் இணைவார் என்று சசிகலாவின் கணவர் நடராஜன் நம்பிக்கை தெரிவித்து....
19 January, 2017, Thu 3:04 | views: 135 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜல்லிக்கட்டு போராட்டத்தைக் கைவிட இளைஞர்களுக்கு முதல்வர் உத்தரவாதத்துடன் வேண்டுகோள்
ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் தங்கள் போராட்டங்களை கைவிட வேண்டும் என முதல்வர் ஓபிஎஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
19 January, 2017, Thu 3:00 | views: 240 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜல்லிக்கட்டு: இளைஞர்கள் எழுச்சிப் போராட்டம்: குவிந்த மாணவர்கள், மெரீனாவில் பதற்றம், போலீஸ் தடியடி
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டம் தீவிரமடைந்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், பீட்டா அமைப்பை
19 January, 2017, Thu 2:58 | views: 124 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜல்லிக்கட்டு விவகாரம்: புதுச்சேரியில் நாளை பந்த் போராட்டம் அறிவிப்பு
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கவும், பீட்டாவுக்கு தடை விதிக்கவும் வலியுறுத்தி வரும் வெள்ளிக்கிழமை புதுச்சேரியில் பந்த்
18 January, 2017, Wed 14:51 | views: 441 |  செய்தியை வாசிக்க
  Annonce
parking வாடகைகஂகு
60 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Vt Cash & Carry
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS