வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
190117
தேவை
190117
Bail விற்பனைக்கு
091216
Bail விற்பனைக்கு
140117
அறை வாடகைக்கு
130117
வீடு விற்பனைக்கு
271216
Bail விற்பனை
271216
Bail விற்பனை
141216
வீடு விற்பனைக்கு
091216
வீடுகள் விற்பனைக்கு
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
அவதானம் - திங்கட்கிழமையில் இருந்து குற்றப்பணம்!!
France Tamilnews
கடுமையான எச்சரிக்கை!! குழந்தைகளிற்கு Uvestérol D வழங்குவதை உடன் நிறுத்தவும்!!
France Tamilnews
அவதானம்!! பெற்றோர்களிற்கு 135யூரோக்கள் குற்றப்பணம்!!
France Tamilnews
ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
9 January, 2017, Mon 14:59 GMT+1  |  views: 581
  • Mohan Jewellery Mart
  • palais-de-lepi-dor
  • pavillon-europe
  • Aswini Auto Ecole
  • Actif Assurance

 ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4 வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் பிப்ரவரி மாதம் 23-ம் தேதி வழக்கை ஒத்திவைத்துள்ளது.

இது தொடர்பாக சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த பி.ஏ.ஜோசப் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அவசர மனுவில் கூறியிருப்பதாவது:

நான் அதிமுக தொண்டன். தற்போதும் அடிப்படை உறுப்பினர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளன. ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த 4 மாதங்களில் உடல் நலம் பாதிக்கப்பட்டு அப்போலோவில் அனுமதிக்கப்பட்டார்.

ஜெயலலிதா உடல்நலம் முன்னேற்றமடைந்து வருவதாக மருத்துவமனை நிர்வாகமும் அறிக்கை மூலம் கூறி வந்தது. இதற்கிடையே ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்த வதந்தியை பரப்பியதாக 43 பேர் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். எல்லா தகவல்களும் ஜெயலலிதா நன்றாக உள்ளார். விரைவில் வீடு திரும்புவார் என்றே கூறி வந்தன. இதை உறுதி செய்யும் விதமாக பிரதாப் சி.ரெட்டியும் ஜெயலலிதாவின் உறுப்புகள் சரியாக செயல்படுகின்றன. இதனால் அவர் அவசர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவதாக கூறினார்.

இந்நிலையில் திடீரென டிசம்பர் 4-ம் தேதி ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பாக எய்ம்ஸ் மருத்துவர்கள், அவர் நன்றாக இருப்பதாக பேட்டி அளித்தனர். டிசம்பர் 5-ம் தேதி மாலை ஜெயலலிதா இறந்து விட்டதாகக் கூறுவது உண்மைக்குப் புறம்பானது என அப்போலோ மருத்துவமனை நிர்வாகமும் அறிக்கை வெளியிட்டது. ஆனால் அன்றிரவு 11.30 மணிக்கு அவர் இறந்து விட்டார் என மற்றொரு அறிக்கை வெளியிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் ஏராளமான குளறுபடிகள் உள்ளனமுன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் என்னைப் போன்ற சாதாரண மக்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட போது அவருடைய கால்கள் அகற்றப்பட்டுள்ளது, அவரது உடல் பதப்படுத்தப்பட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. பொதுவாக இறந்து அதிக நாட்களான உடலுக்குத் தான் இதுபோன்ற பதப்படுத்தும் பணிகள் செய்வது வழக்கம்.

டிசம்பர் 5-ம் தேதி இரவு இறந்த அவரது உடல் மறுநாளே அடக்கம் செய்யப்பட்டபோது எதற்காக பதப்படுத்த வேண்டும்? எதற்காக இறப்பதை அறிவிக்கும் முன்பாக முதல்வர் உள்ளிட்ட அமைச்சர்கள் பதவியேற்க வேண்டும்? அரவக்குறிச்சி உள்ளி்ட்ட 3 தொகுதி தேர்தலுக்கு கைரேகை பெறும்போது அவர் சுயநினைவோடு தான் இருந்தாரா? என அவரது மரணத்தில் அடுக்கடுக்கான சந்தேகங்கள் எழுந்துள்ளன.

ஏற்கெனவே, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மரணம் குறித்த வழக்கில் ஒரு நபர் விசாரணை கமிஷன் அமைத்து கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுபோல மிகப்பெரிய மக்கள் தலைவரான ஜெயலலிதாவின் மரணத்திலும் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. எனவே இதுதொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற 3 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்.

அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை தொடர்பான ஆவணங்களை பாதுகாக்க வேண்டும். அதுபோல மெரினாவில் அடக்கம் செய்யப்பட்டுள்ள ஜெயலலிதாவின் உடலை பத்திரமாக பாதுகாக்க உத்தரவிட வேண்டும். அவ்வாறு செய்யவில்லை என்றால், அந்த ஆதாரங்கள் எல்லாம் அழிக்கப்பட்டு விடும்.

மரணம் குறித்த அறிக்கையை தாக்கல் செய்ய தமிழக அரசு மற்றும் மருத்துவமனை நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கோரியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் விடுமுறை கால நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், வி.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது.

மனுதாரர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.எம்.விஜயன் ஆஜராகி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் பல சந்தேகங்கள் உள்ளன. உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தலைமையில் விசாரணை கமிஷன் அமைத்து விசாரித்தால் மட்டுமே பல உண்மைகள் வெளியே வரும். அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையிலும் பல முரண்பாடுகள் உள்ளன, என்றார்.

அப்போது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமாரசுவாமி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் எந்த மர்மமும் இல்லை. சரியான சிகிச்சை தான் அளிக்கப்பட்டது. திடீரென ஏற்பட்ட மாரடைப்பின் காரணமாகத்தான் அவர் இறக்க நேரிட்டது. இதே காரணத்திற்காக டிராபிக் ராமசாமி மற்றும் பிரவீணா என்பவர் தொடர்ந்த வழக்குகளை தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வு தள்ளுபடி செய்து விட்டது. எனவே இந்த மனுவையும் தள்ளுபடி செய்ய வேண்டும்'' என்றார்.

மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் மதனகோபாலராவ், தேவைப்பட்டால் இந்த மனு தொடர்பாக மத்திய அரசிடம் விளக்கம் பெற்று பதிலளிக்க கால அவகாசம் தேவை என்றார்.

அதற்கு நீதிபதிகள், ''மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள சந்தேகங்களைப் போக்க மாநில அரசு முற்றிலுமாக தவறி விட்டது. மத்திய அரசும் அவ்வப்போது எய்ம்ஸ் மருத்துவர்கள், மத்திய அமைச்சர்கள் ஏன் ஆளுநரைக்கூட தனது பிரதிநிதிகளாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்து அறிந்து கொண்டது.

ஆனால் ஒரு மாநில முதல்வருக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மத்திய அரசும் மக்களுக்கு எந்தவித தகவலையும் தெரிவிக்காதது கண்டனத்திற்குரியது. இதுவரை அமைதி காத்துவிட்டு இப்போது பதிலளிக்க மத்திய அரசு முன்வருகிறது. ஜெயலலிதாவின் உடல் நிலை குறித்த தகவல்களை தெரிவிக்காததில் இருந்தே பல உண்மைகள் மறைக்கப்பட்டுள்ளதோ? என்ற ஐயம் எழுந்துள்ளது.

மனுதாரர் அதிமுக உறுப்பினர். அவர் தனது கட்சித் தலைவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக்கூறி இந்த வழக்கைத் தொடர்ந்துள்ளார். பொதுவாக மரணத்தில் சந்தேகம் எழுவது இயல்பான ஒன்று தான் என்றாலும் அதைப்போக்க வேண்டிய கடமை மத்திய, மாநில அரசுகளுக்கு உள்ளது. ஒரு நீதிபதி என்பதைத் தாண்டி சாதாரண குடிமகன் என்ற அடிப்படையில் எங்களுக்கும் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் உள்ளது.

ரத்த உறவினரான அவரது அண்ணன் மகள் தீபா இதுவரை நீதிமன்றத்தை அணுகாதது ஏன் என தெரியவில்லை. அவரது உடலை தோண்டியெடுத்தால் தான் உண்மைகள் வெளியே வருமா? அப்படியென்றால் உண்மைகள் வெளியே வர அவரது உடலை ஏன் தோண்டியெடுக்க உத்தரவிடக் கூடாது?. மேலும் மனுதாரர், நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மர்ம மரணம் குறித்து அறிய கொல்கத்தா உயர் நீதிமன்றம் விசாரணை கமிஷன் அமைத்தது போல, ஜெயலலிதாவின் மரணத்தை அறிய 3 நீதிபதிகள் கொண்ட விசாரணை கமிஷன் அமைக்க கோரியுள்ளார். இந்த மனுவை நிராகரிக்க முடியாது'' என கருத்து தெரிவித்தனர்.

அதன்பிறகு நீதிபதிகள், ''இதுதொடர்பாக பிரதமர் அலுவலகம், சிபிஐ, மத்திய உள்துறை அமைச்சகம், நாடாளுமன்ற விவாகரத்துறை, தமிழக தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர், சட்டத்துறை செயலாளர், தமிழக சட்டசபை செயலாளர், தமிழக டி.ஜி.பி., சென்னை போலீஸ் ஆணையர், அப்போலோ மருத்துவமனை தலைவர் உள்ளிட்டோர் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து விசாரணையை வரும் ஜனவரி 9-க்கு தள்ளி வைத்தனர்.

இந்நிலையில் ஜெயலலிதா மரணம் தொடர்பான வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

4 வாரங்களுக்குள் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உயர் நீதிமன்றம் பிப்ரவரி மாதம் 23-ம் தேதி வழக்கை ஒத்திவைத்துள்ளது.

பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே பரப்பளவில் மிகப் பெரிய நாடு எது?
  ரஷ்யா

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
ஜல்லிக்கட்டு போராட்டம் வாபஸ்: மெரினாவில் இருந்து இளைஞர்கள் கலைந்து சென்றனர்
சென்னை மெரினா கடற்கரையில் நடத்தி வந்த போராட்டத்தை இளைஞர்கள் வாபஸ் பெற்றனர். இதையடுத்து மெரினா கடற்கரையில் இருந்து இளைஞர்கள்
23 January, 2017, Mon 14:47 | views: 473 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சட்டசபை சிறப்பு கூட்டத்தில் ஜல்லிக்கட்டு சட்ட மசோதா நிறைவேறியது
தமிழக சட்டசபையின் சிறப்பு கூட்டம் இன்று மாலை 5 மணிக்கு கூடியது. இந்த கூட்டத்தில், முதல்- அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம்...
23 January, 2017, Mon 14:34 | views: 268 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டில் மொத்தம் 69 கேவியட் மனுக்கள் தாக்கல்
தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்காக மல்லுக்கட்டுகிற நிலை உருவாகி உள்ளது. ஜல்லிக்கட்டுக்காக தமிழக அரசு கொண்டு...
23 January, 2017, Mon 7:36 | views: 556 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மெரினா போராட்டக்களமானது; போராட்டக்காரர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சால் பதட்டம்
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தும் வகையில் அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது, இருப்பினும் போராட்டம் தொடர்கிறது. அரசு தரப்பில்...
23 January, 2017, Mon 7:34 | views: 418 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மெரினாவில் போராட்டக்காரர்கள் வெறியேற்றம்; கடலில் இறங்கி மாணவர்கள் போராட்டம்
ஜல்லிக்கட்டு தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீது சுப்ரீம் கோர்ட்டு இன்னும் தீர்ப்பு வழங்காததால் இந்த ஆண்டும்...
23 January, 2017, Mon 4:47 | views: 809 |  செய்தியை வாசிக்க
  Annonce
பல்பொருள் வாணிபம்
35000 €
Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Vt Cash & Carry
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS