வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை - அழகு நிபுணர்
270517
வீடுகள் விற்பனைக்கு
270517
Bondyயில் வீடுகள் விற்பனைக்கு
240517
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
தவறவிடாதீர்கள்!! 10.000 வேலைவாய்ப்புக்கள்!!
France Tamilnews
பிரான்சின் ஐந்தாம் குடியரசின் முதற்பெண்மணிகள் - படங்களும் செய்திகளும் (பகுதி1)
France Tamilnews
உலகத்தின் இளைய தலைவர்கள் - எமானுவல் மக்ரோனின் பாதையில்...
France Tamilnews
அவதானம்!! மே1 முதல் 25யூரோவாகும் வைத்தியர் கட்டணம்!!
France Tamilnews
வார இறுதியில் மூடப்படும் மெட்ரோக்கள்!! அவதானம்!!
France Tamilnews
மஷ்ரூம் பிரியாணி
21 December, 2016, Wed 11:21 GMT+1  |  views: 292
  • Mohan Jewellery Mart
  • Actif Assurance
  • Aswini Auto Ecole
  • Actif Assurance
அசைவம் பிடிக்காதவர்களுக்கு சிறந்த மாற்று மஷ்ரூம். இப்போது மஷ்ரூம் வைத்து எப்படி பிரியாணி செய்யலாம் என்பதை விரிவாக கீழே பார்க்கலாம்.
 
சைவ பிரியர்களுக்கான மஷ்ரூம் பிரியாணி
தேவையான பொருட்கள் : 
 
பாசுமதி அரிசி - ஒரு கிலோ,
பட்டன் மஷ்ரூம்  - 400 கிராம், 
வெங்காயம் - 250 கிராம்,
தக்காளி - 200 கிராம், 
இஞ்சி - பூண்டு விழுது - 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 5
புதினா - 50 கிராம், 
கொத்தமல்லித் தழை - 100 கிராம், 
மிளகாய்த்தூள் - 20 கிராம்,
எலுமிச்சைப் பழம் - ஒன்று, 
பூண்டு - 100 கிராம், 
நெய் - 100 மில்லி,
எண்ணெய் - 100 மில்லி, 
கிராம்பு, பட்டை - தலா 10 கிராம், 
ஏலக்காய் - 5 கிராம், 
பிரியாணி இலை - 5 கிராம், 
தயிர் - 100 மில்லி, 
உப்பு - தேவையான அளவு.
 
செய்முறை : 
 
* வெங்காயம், தக்காளி, ப,.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
 
* மஷ்ரூமை நன்றாக கழுவி பெரிய துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
 
* அரிசியை 20 நிமிடம் ஊறவைக்கவும். 
 
* பாதியளவு பட்டை, பிரியாணி இலை, ஏலக்காய் ஆகியவற்றைப் பொடித்துக்கொள்ளவும். 
 
* அடி கனமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, மீதியுள்ள பட்டை, ஏலக்காய், பிரியாணி இலை மற்றும் கிராம்பு தாளித்து, நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வறுக்கவும். 
 
* வெங்காயம் நன்றாக வதங்கியதும் அதில் இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து… புதினா, தயிர், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லி, நறுக்கிய தக்காளி, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். 
 
* அனைத்தும் நன்றாக வதங்கி கிரேவி பதம் வந்த பிறகு, அரிசியின் அளவில் ஒன்றரை பங்கு தண்ணீரை ஊற்றிக் கொதிக்கவிடவும். 
 
* கொதிக்க ஆரம்பித்தவுடன் ஊறவைத்த அரிசியைப் போட்டு வேகவிட்டு, தண்ணீர் வற்றியதும், மஷ்ரூம் சேர்த்துக் கிளறவும். 
 
* பின்பு அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, தண்ணீர் தெளித்து, அதன்மீது பிரியாணி இருக்கும் பாத்திரத்தை வைத்து மூடி வைக்கவும் (அடுப்பை சிறு தீயில் வைக்கவும்). 20 நிமிடம் கழித்து இறக்கும்போது, நெய் சேர்த்துக் கிளறி, சிறிதளவு வறுத்த வெங்காயம் கொண்டு அலங்கரிக்கவும்.
 
பொதறிவுத் துணுக்கு :

*  சராசரி மனிதனின் தகவல்கள்....
   குருதியின் அளவு - 5.5 லிட்டர்.
   உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் சராசரி அளவு - 1.5 லிட்.
   ஒரு நாளில் அருந்த வேண்டிய நீரின் அளவு - 6 லிட்
   இரத்த நாளங்களின் மொத்த நீளம் - 100 000 கிலோமீ் ட்டர்
   மிகவும் குளிரான பகுதி - மூக்கு
   வியர்க்காத உறுப்பு - உதடு
   சிவப்பு அணுவின் சராசரி ஆயுட் காலம் - 120 நாட்கள்
   நகம் வளரும் வருட சராசரி அளவு - 12.5 அங்குலம்
   வியர்வைச் சுரப்பிகளின் எண்ணிக்கை  - 200 000
   இறந்த மனிதனின் இதயத்தின் உயிர்த்துடிப்பு அடங்கு நேரம் - 20 நிமிடங்கள்

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
தேங்காய்ப்பால் காய்கறி பிரியாணி
காய்கறி பிரியாணி அனைவருக்கும் பிடிக்கும். தேங்காய் பால், காய்கறி சேர்த்து செய்யும் இந்த பிரியாணி சூப்பராக இருக்கும். இதன் செய்மு
29 May, 2017, Mon 12:35 | views: 592 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கீரைப் பொங்கல்
கீரை சாப்பிடாத குழந்தைகளுக்கு நாம் செய்யும் உணவுகளில் கீரையை சேர்த்து செய்து அவர்களுக்கு கொடுக்கலாம். இன்று பொங்கலில் கீரை சேர்த்
25 May, 2017, Thu 10:58 | views: 727 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
வேர்கடலைத் துவையல் செய்வது எப்படி
வேர்க்கடலையில் புரதச்சத்து, தாது உப்புகள் அதிகம் நிறைந்துள்ளன. உடல் எடை அதிகரிக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற உணவு இது. இன்று வேர்க்கட
22 May, 2017, Mon 5:06 | views: 432 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
தக்காளி குழம்பு
தக்காளி குழம்பு செய்வது மிகவும் எளிமையானது. சுவையும் சூப்பராக இருக்கும். இன்று தக்காளி குழம்பு செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
19 May, 2017, Fri 11:05 | views: 421 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கேழ்வரகு முறுக்கு
குழந்தைகளுக்கு சத்தான சுவையான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க நினைத்தால் கேழ்வரகு முறுக்கி செய்து கொடுக்கலாம். இன்று இந்த முறுக்கை எப்படி
16 May, 2017, Tue 10:49 | views: 344 |  செய்தியை வாசிக்க
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS