Paristamil France administrationParistamil France administrationParistamil France administrationParistamil France administration
வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pubs
வாடகைக்கு வீடு
231017
விற்பனைக்கு
121017
Bail விற்பனைக்கு
101017
வீடு, காணி வாங்க
091017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
020617
வாடகைக்கு வீடுகள்
061017
கடை விற்பனைக்கு
210917
Bail விற்பனைக்கு
210917
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
சிறீலங்காவில் வெறிநாய் கடித்த சிறுவன் லியோனில் மரணம்!!!
France Tamilnews
தவற விடாதீர்கள்!! வெள்ளிவரை இலவச வழக்கறிஞர்கள்!!
France Tamilnews
அவதானம் - வாகனம் இல்லாத பரிஸ் - மீறினால் குற்றப்பணம்!!
France Tamilnews
அவதானம் - நாளையில் இருந்து நவிகோ 75€20!!
France Tamilnews
அவரவர்கள் நாட்டில் வைத்தே அகதித்தஞ்ச ஒப்ரா விசாரணை - அனுமதி கிடைத்தால் மட்டுமே பிரான்சிற்குள் வரலாம்!!!
France Tamilnews
இரட்டை இலை சின்னம்:விசாரணையை அக்.30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்
23 October, 2017, Mon 19:02 GMT+1  |  views: 292

அ.தி.மு.க. பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு அக்கட்சி இரண்டாக உடைந்து, சசிகலா தலைமையில் ஓர் அணியாகவும், ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியாகவும் செயல்பட்டு வந்தது. சசிகலா சிறை சென்றதால் அவரது அணியைச் சேர்ந்த எடப்பாடி பழனிசாமி முதல்- அமைச்சர் ஆனார். இந்த நேரத்தில், ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால், இரட்டை இலை சின்னத்தை பெற இரு அணிகளும் தேர்தல் கமிஷனில் முறையிட்டன.

இதனால் வேறு வழியில்லாமல், அ.தி.மு.க. வையும், இரட்டை இலை சின்னத்தையும் தேர்தல் கமிஷன் முடக்கியது. இதன் காரணமாக, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெவ்வேறு சின்னங்களிலேயே இரு அணிகளும் போட்டியிட்டன. ஆனால், வாக் காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அங்கு இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

அதன்பின்னர், இரு அணிகளும் கட்சி மற்றும் சின்னத்தை பெறுவதில் முனைப்பு காட்ட தொடங்கின. லட்சக் கணக்கான பிரமாண பத்திரங்களை இரு அணியினரும் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்தனர். ஆனால், ஆவணங்களை தேர்தல் கமிஷன் ஆய்வு செய்யும் முன், ஓ.பன்னீர்செல்வம் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்றாக இணைந்தன. டி.டி.வி. தினகரன் தனி அணியாக செயல்பட்டு வருகிறார்.

இதற்கிடையே, இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பதை நவம்பர் 10-ந் தேதிக்குள் தேர்தல் கமிஷன் முடிவு செய்து அறிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, இந்திய தலைமை தேர்தல் அதிகாரிகள், அ.தி. மு.க.வின் இரு அணிகளிடமும் கட்சி மற்றும் சின்னம் குறித்து கடந்த 6-ந் தேதி விசாரணை மேற்கொண்டனர். அப்போது, முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணி தரப்பில், இரு அணிகளும் இணைந்துவிட்டதால், எங்களுக்கே கட்சியையும், சின்னத்தையும் ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

அதன்பிறகு கடந்த 16-ந் தேதி 2-வது கட்ட விசாரணை நடைபெற்றது. அன்று பிற் பகல் 3 மணிக்கு தொடங்கி நடைபெற்ற விசாரணையின் போது இரு அணிகளின் சார்பிலும் ஆஜரான நிர்வாகிகள் மற்றும் வக்கீல்கள் தங்கள் தரப்பு வாதங்களை முன்வைத்தனர். அதன்பின்னர், இறுதி விசாரணையை 23-ந் தேதிக்கு (அதாவது இன்று) ஒத்திவைப்பதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. அதன்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு விசாரணை துவங்கி நடைபெற்றது. இரு தரப்பும் நேரில் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர்.

 இதைத்தொடர்ந்து  அடுத்த கட்ட விசாரணையை வரும் 30 ஆம் தேதிக்கு தேர்தல் கமிஷன் ஒத்திவைத்தது. இதற்கிடையே, ஓபிஎஸ்-ஈபிஎஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, டிடிவி தரப்பினர் வழக்கை தாமதப்படுத்த முயற்சித்து வருகின்றனர் எனவும், உச்ச நீதிமன்ற தீர்ப்பை கருத்தில் கொண்டு விரைவாக தீர்ப்பளிக்க  கேட்டுக்கொண்டுள்ளோம். 30 ஆம் தேதி நடைபெறும் விசாரணையே இறுதி விசாரணையாக இருக்கும்” என்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார்.

 

Paristamil Marana Arivithal
பொதறிவுத் துணுக்கு :

* உலகிலேயே மிகப் பெரிய வளைகுடா எது?
   மெக்சிகோ  வளைகுடா

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
இரட்டை இலை சின்னம்:விசாரணையை அக்.30 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது தேர்தல் ஆணையம்
இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையை வரும் அக்.30 ஆம் தேதிக்கு தேர்தல் ஆணையம் ஒத்திவைத்தது.
23 October, 2017, Mon 19:02 | views: 292 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
மத்திய பா.ஜ.க. அரசிடம் இரட்டை இலை சின்னத்தை பெறவே அ.தி.மு.க. அடிமையாக உள்ளது மு.க.ஸ்டாலின்
இரட்டை இலை சின்னத்தை பெறவே மத்திய பா.ஜ.க. அரசிடம் அ.தி.மு.க. அடிமையாக இருக்கிறது என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
23 October, 2017, Mon 3:43 | views: 306 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
டி.டி.வி.தினகரன் அணி தரப்பில் வழங்கப்பட்டவை போலி ஆவணங்கள்
தேர்தல் கமி‌ஷனிடம் டி.டி.வி.தினகரன் அணி தரப்பில் வழங்கப்பட்டவை போலி ஆவணங்கள் என்று முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கூறினார்.
23 October, 2017, Mon 3:41 | views: 275 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜி.எஸ்.டி. வரிவிகித கட்டமைப்பை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டும்
ஜி.எஸ்.டி. வரி விகித கட்டமைப்பை முழுமையாக மாற்றி அமைக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று மத்திய வருவாய்த்துறை செயலாளர்
23 October, 2017, Mon 3:40 | views: 269 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஊழல் வழக்குகள் விசாரணை பிரதமர் மோடிக்கு சுப்பிரமணிய சாமி கடிதம்
பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணிய சாமி எம்.பி. பிரதமர் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:–
23 October, 2017, Mon 3:39 | views: 173 |  செய்தியை வாசிக்க
  Annonce
offre d'emploi / TRAVAIL

Paristamil Annonce
  விளம்பரம்
coffee-bharath
mohan-jewellery-mart
donuts-ice-bondy
Nira-English-Center
exact-exchange-sarl
Actif Assurance
Auto Ecole Aswini
Paris Decoration
Actif assurance
Advertisements  |  RSS