Facebook உபயோகிக்கப் பெற்றோர்களின் அனுமதி அவசியம் - புதிய சட்டம்!!!
14 December, 2017, Thu 16:00 GMT+1 | views: 11730
தனிப்பட்டவர்களின் தகவல்களின் பாதுகாப்புப் பற்றிய திட்டங்களை இயற்றிவரும், பிரான்சின் நீதியமைச்சர் நிக்கொல் பெலுபே (Nicole Belloubet) இன்று நடந்த அமைச்சர்களின் அலோசனைக் கலந்தாய்வில், Facebook மற்றும் ஏனைய சமூகவலைத்தளங்கள் பற்றிய புதிய தீர்மானங்களை நிறைவேற்றி உள்ளார்.
பதினாறு வயதிற்குட்பட்டவர்கள், facebook உபயோகிப்பதானால், பெற்றோர்களின் அனுமதியும் அவர்களின் ஒப்புதலும் சட்டப்படி வழங்கப்படல் வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பதினாறு வயதிற்குட்பட்வர்களின் தனிப்பட்ட தகவல்கள், துஸ்பிரயோகம் செய்யப்படாமல் காப்பதற்கு, அவர்களின் பெற்றோர்களின் அனுமதி அவசியமாகின்றது. இதனால் facebook கணக்கை ஆரம்பிப்பதற்கு அல்லது தொடர்ந்து உபயொகிப்பதற்கு, பெற்றோரின் அடையாளம் மற்றும் அனுமதி கட்டாயமாகக் கோரப்பட உள்ளது.
பிரான்சில் பதினாறு வதிற்குட்பட்டவர்களில் 79% ஆனவர்கள் சமூக வலைத்தளங்களை உபயோகிக்கின்றனர் என, அரசாங்கத்தின் புள்ளி விபரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.