விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
23 December, 2017, Sat 8:00 GMT+1 | views: 13295
பிரான்சின் இரத்தவங்கியான EFS (Etablissement français du sang) பெரும் எச்சரிக்கை மணியொன்றை அடித்துள்ளது. குளிர்காலத்தின் தேவைக்கான இரத்த வங்கியின் இருப்பு மிகவும் குறைந்துள்ளதாக இரத்த வங்கி எச்சரித்துள்ளது.
குளிர்காலத்தின் தேவைக்காக மட்டும், குறைந்தது ஒரு இலட்சம் (100.000) இரத்த இருப்புகள் தேவைப்படுமிடத்தில், வெறும் 75.000 இரத்த இருப்புகள் மட்டுமே உள்ளதாக, பிரான்சின் இரத்த வங்கி தெரிவித்துள்ளது.
இதற்கான அவசரப் பிரச்சாரங்கள் வெகு விரைவாக மேற்கொள்ளப்படுகின்றன. குறைந்தது 25.000 பேர் இரத்தம் வழங்கினால் மட்டுமே இந்தக் குளிர்கால விபத்துக்கள் மற்றும் சத்திர சிகிச்சைகளிற்கான தேவைகளை நிறைவு செய்யமுடியும். இதனால் பரிசிலும், உங்கள் நகரங்களிலும் பல இரத்ததான மையங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
எதிர்வரும் ஜனவரி 13ம் திகதிக்குள் இந்த இரத்த தான முகாம்கள் வெகு விரைவாக இயங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.