இன்று முதல் பரிசில் புதிய சட்டம் - அடையாள அட்டைகள் மாநகரசபைகளில் மட்டுமே!!
5 December, 2017, Tue 9:00 GMT+1 | views: 27141
இது வரை பரிசில் இருந்த சட்டம் இன்று முதல் மாற்றத்திற்கு உள்ளாகின்றது. இது வரை பரிசில் வசிப்பவர்கள் பரிசின் மாவட்ட ஆணையமான préfecture இலேயே அடையாள அட்டைகளிற்கான விண்ணப்பங்களைக் கொடுத்து வந்துள்ளனர். அத்தோடு அங்கு சென்றே அவற்றைப் பெற்றும் வந்துள்ளனர்.
ஆனால் புறநகர்களின் நடவடிக்கை போல், இன்று 5ம் திகதி முதல் இவை பரிசின் ஒவ்வொரு பரிவின் மாநகரசபைகளிலுமே விண்ணப்பங்களை வழங்கி, அங்கேயே அடையள அட்டைகளைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்.
இதற்கான விண்ணப்ப நேரங்களை (RDV) மாநகரசபைகளின் இணையத்தளம் மூலம் அல்லது தொலைபேசி மூலம் (39 75) பெற்றுகொள்ளல் வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆயினும் இதற்கான அழைப்பாணையைக் காவல் நிலையங்கள் மேற்கொள்ளும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.