ஹலால் இறைச்சியயை மட்டுமே விற்றதற்காக, ஒரு வர்த்தகர் மீது வழக்கு விசாரணை நடைபெற உள்ளது. இவர் மீதான விசாரணை நாளை செவ்வாய்க்கிழமை நோந்தேர் நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
Colombes (92) இல் உள்ள இந்த வரத்தக நிலையத்தை வாடகைக்கு விட்ட, மாநகரசபையின் HLM பிரிவினர், இவர் சாதாரண பொதுவான கடையாக நடாத்த வேண்டும் என்றும், பொதுவான இறைச்சி, பன்றி இறைச்சியிலான ஜம்போன் மற்றும் மதுபானமும் விற்கவேண்டும் என்ற நிபந்தனையின் பேரிலேயே, வாடகைக்கு வழங்கி இருந்தனர்.
ஆனால் இதனை இவர் வெறும், மதம் சார்ந்த ஹலால் இறைச்சிகளை மட்டுமே விற்கும், பொதுத் தன்மையற்ற வர்த்தக நிலையமாக நடாத்தி வந்துள்ளார். இது ஒப்பந்த மீறல் என்றும், முறையற்ற வியாபாரம் என்றும், இவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்டது. இதற்கான விசாரணையே நாளை நடாத்தப்பட உள்ளது.
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.