Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
வீடு வாடகைக்கு
180318
அழகுக் கலைநிபுனர் தேவை
070318
வீடு வாடகைக்கு
040318
ஆங்கில ஆசிரியர்
200218
அழகுக் கலைநிபுனர் தேவை
190218
Baill விற்பனைக்கு
160218
ஆசிரியர் தேவை
160218
Bail விற்பனைக்கு
030218
Bail விற்பனைக்கு
010218
கடை Bail விற்பனைக்கு
130118
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
Dunkerque வெளியேற்றம்! - ஒரு தோல்வியின் கதை!!
7 September, 2017, Thu 15:30 GMT+1  |  views: 2636
அமெரிக்க திரைப்பட இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் எடுத்திருந்த Dunkirk திரைப்படத்தில் வரலாற்றைச் சிதைக்காமல் பல கற்பனைகளை கலந்து உருவாக்கியிருந்தார். ஆனால் உண்மை வரலாறு திரைப்படத்தை விடவும் வலி மிக்கது!
 
பிரான்சின் எல்லை நகரமான Dunkerque இல் இரண்டாம் உலகப்போர் நேரத்தில் இடம்பெற்ற ஒரு சம்பவம் தான் 'Dunkerque வெளியேற்றம்!' இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனியின் கை ஓங்கியிருந்த காலம் அது. நாசி படையினரின் மூர்க்கத்தனமான தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்கள் காவு வாங்கப்பட்டனர். 
 
Dunkerque நகரில் பிரித்தானிய, பிரெஞ்சு மற்றும் பெல்ஜிய துருப்புக்கள் (இராணுவ சிப்பாய்கள்) சுற்றி வளைக்கப்பட்டனர். ஜெர்மனி படையினர் மிக மூர்க்கத்தனமானவர்கள். பல இலட்சம் படைகள் ஒரு நகருக்குள் மாட்டிக்கொண்டுவிட... நான்கு திசைகளிலும் நாசி படையினர் நெருங்கிக்கொண்டிருந்தனர். 
 
சுற்றிவளைக்கப்பட்ட வீரர்களுக்கு எதிர்காலம் இருண்டுபோனது. தம்மை காப்பாற்ற தேவ தூதன் தான் வரவேண்டும் என படையினர் நம்பிக்கை இழந்து காத்திருக்க... அத்தனை இலட்சம் வீரர்களை ஒரு சேர காவு கொடுத்தல் என்பது எத்தனை கொடூரம்..??
 
வழி வந்தது.. பிரித்தானிய பிரதமர் வின்சண்ட் சர்ச்சில் ஒரு வீர உரை ஆற்றினார். "ஒரு மகத்தான இராணுவ பேரழிவு!' என குறிப்பிட்டார். மறுபக்கம் அடோல்ப் ஹிட்லரின் கட்டளையின் படி Dunkerque துறைமுகம் ஜெர்மனிய படையினர் கட்டுப்பாட்டில் வந்து, மூடப்பட்டது. 
 
அந்த அதிசயம் அப்போது நடந்தது... பல பொதுமக்கள் பல படகுகளில் Dunkerqueஐ முற்றுகையிட்டனர். உயிர் காக்கும் படகுகள்.. சிறு சிறு படகுகள்.. பாய்மர கப்பல்கள் என கடலில் பயணிக்கக்கூடிய அத்தனையையும் எடுத்துக்கொண்டு, மக்கள்  Dunkerqueகு வந்தனர். 
 
மே மாதம் 26 ஆம் திகதி 1940 ஆம் ஆண்டு.. முதல் நாள்... இராணுவ வீரர்களை படகுகளில் பத்திரமாக அழைத்துச்செல்கிறார்கள்.. முதன் நாளில் மாத்திரம் 7,669 வீரர்கள் வெளியேற்றப்பட்டனர். 
 
இரண்டாம் நாள்.. மூன்றாம் நாள்... என தொடர்ச்சியாக எட்டு நாட்கள் இந்த வெளியேற்றம் இடம்பெற்றது... ஜெர்மனியினர் யுத்தத்தை நிறுத்திவிட்டு... 'எப்படி பயந்து ஓடுகிறார்கள் பார்.. எலிகள் போல்...!' என சிரித்துக்கொண்டனர். 
 
பலத்த அவமானம்.. உலக மகா தோல்வி.. இருந்த போதும் தொடர்ச்சியாக வெளியேற்றம் இடம்பெற்றது.. எட்டாம் நாள் முடிவில்... ஜூன் 4 ஆம் திகதி 1940 ஆம் ஆண்டு.. மொத்தமாக 338,226 வீரர்கள் வெளியேற்றப்பட்டிருந்தனர். 
 
பிரித்தானியாவின் டோவர் (Dover) பகுதிக்கு வெறுமனே உயிரை மாத்திரம் மிச்சம் வைத்துக்கொண்டு வந்து சேர்ந்தனர் வீரர்கள்!!
 
ஆனால் இந்த சம்பவம் வரலாற்றில் எங்கேயும் 'கோழைத்தனம்' என பதிவாகவில்லை. மேற்படி வரலாற்றை தான் கிறிஸ்டோபர் நோலன் கற்பனை கலந்து பிரம்மாண்டமாக 400 மில்லியன் டொலர்கள் பெறுமதியான கப்பலை எல்லாம் உடைத்து தகர்த்து திரையில் சொல்லியிருந்தார்.
பொதறிவுத் துணுக்கு :

* விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் பிறந்த நாடு,

  ஜெர்மனி

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
Cinémathèque Française - சினிமா பெட்டகம்!!
இன்று சினிமா தொடர்பான ஒரு இடத்துக்குச் செல்லலாம். Cour Saint-Émilion மெற்றோ நிலையத்தில் (வழி 14) இறங்கி
24 March, 2018, Sat 11:32 | views: 224 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
'ஃபஷன் ஷோ' பார்க்கலாம் வாங்க!!
உலகுக்கே நாகரீகங்களை அறிமுகப்படுத்திக்கொண்டிருப்பது பரிஸ் தானே...? அதிலும், 'பரிஸ் ஃபஷன் ஷோ!' என்றால் உலக பிரபலம்... வா
23 March, 2018, Fri 13:30 | views: 720 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கைகளால் தயாரிக்கப்படும் காவிக்கண்டைகள்!!
காவிக்கண்டை குழந்தைகளுக்கு மட்டுமானதா? ஐரோப்பாவில் இல்லை. குறிப்பாக பிரான்சில் இல்லவே இல்லை. அது இருக்கட்டும் காவிக்கண்டை என்றால் என்னப்பா..
22 March, 2018, Thu 10:30 | views: 1296 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Maison de Balzac - இலவசமாய் ஒரு இதிகாச வீடு!!
பரிஸ் 16 ஆம் வட்டாரத்தில் உள்ள் ஒரு வீடு குறித்து இன்றைய பிரெஞ்சு புதினத்தில் தெரிந்துகொ
21 March, 2018, Wed 11:30 | views: 1032 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
கலைகளுக்கென ஒரு கல்லறை!!
உலக மக்கள் பரிசுக்கு வருவதற்கு ஐந்து காரணங்கள் சொல்லுங்கள் என்றால்... அதில் ஒரு காரணம், உலகில்.. மிக அழகழகான கல்லறைகள் பரிசுக்குள் குவிந்திருப்பதை சொல்ல
20 March, 2018, Tue 10:30 | views: 946 |  செய்தியை வாசிக்க
new-veeras-le-blanc-mesnil-france

Amthyste International
  Annonce
APPARTEMENT 3 PIÈCES A VENDRE
169 000 €
Paristamil Annonce
F2 A LOUER
800 €
Paristamil Annonce
Actif assurance
Advertisements  |  RSS