Paristamil France administration Paristamil France administration
விளம்பரம் செய்ய வர்த்தகர் பதிவு வழிகாட்டி பிரிவு  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
ஆங்கில பிரஞ்சு வகுப்புக்கள்
17112018
காசாளர் தேவை
10102018
வீடு வாடகைக்கு
08112018
Bail விற்பனைக்கு
02112018
வேலையாள்த் தேவை
06102018
அழகுக் கலைநிபுனர் தேவை
10102018
கடை / Bail விற்பனைக்கு
06102018
Abi Auto பயிற்சி நிலையம்
250918
திருமண மண்டப சேவை
250918
Beautician தேவை
27092018
நிகழ்வு சேவைகள்
220918
Baill விற்பனைக்கு
130918
வர்த்தகர்கள் கவனத்திற்கு
150918
ஆங்கில வகுப்புக்கள்
130918
Drancy நகரில் ஆங்கில கல்வி நிலையம்
210818*15
ஜோதிட நிலையம்
170818*15
மூலிகை வைத்தியம்
190718*15
வீடுகள் விற்க
30112017
விளம்பர தொடர்புக்கு
விளம்பர கட்டணம்
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
மஞ்சள் ஆடைப் போராட்டத்திற்கு ஆதரவாக மூடப்பட்ட Carrefour!!
France Tamilnews
வீழ்ச்சியடையும் எமானுவல் மக்ரோனின் மீதான நம்பிக்கை!!
France Tamilnews
டிஸ்னிலாண்டிற்குள் நுழைந்த மஞ்சள் ஆடைப் போராளிகள்!!
France Tamilnews
பரிசில் கடும் பனிப்பொழிவு - பிரான்சைத் தாக்கும் பெரும் குளிர்!!
France Tamilnews
உள்துறை அமைச்சின் புதிய அறிக்கை - 277 பேர் காயம் - தொடரும் போராட்டங்கள் - பரிஸ் மீண்டும் முடக்கப்படுமா? - காணொளி
France Tamilnews
Le Comte de Monte-Cristo - வரலாற்றில் இருந்து ஒரு நாவல்!
7 April, 2017, Fri 10:30 GMT+1  |  views: 3986
உண்மை சம்பவங்களின் கலவை இல்லாமல் எந்த ஒரு படைப்பும் உருவாகுவதில்லை.. அது சினிமாவாக இருந்தாலும் சரி... நாவலாக இருந்தாலும் சரி..! இன்றைய பிரெஞ்சு புதினத்தில், வரலாற்று சம்பவங்களுடன் இணைத்து ஒரு நாவல் எழுதப்பட்டு... சக்கை போடு போட்டு... மொழிபெயர்க்கப்பட்டு, திரைப்படமாக்கப்பட்டு.... வாங்க பார்க்கலாம்!!
 
முன்னர் ஒரு தடவை பிரெஞ்சு புதினத்தில் 'மூன்று துப்பாக்கிவீரர்கள்!' எனும் தலைப்பில் ஒரு நாவல் குறித்து எழுதியிருந்தோம்... அந்த நாவலை எழுதிய Alexandre Dumas, பேய்கதை  எழுத்தாளர் Auguste Maquet உடன் இணைந்த எழுதிய Le Comte de Monte-Cristo நாவல் குறித்து தான் பார்க்கப்போகிறோம்.
 
 கதை பிரான்ஸ் - இத்தாலிக்கு இடையில் இடம்பெறுகிறது.  கதைப்படி கதையின் நாயகன் தன் திருமணத்திற்கு முதல் நாள் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறான். சிறை என்றால் எங்கே... நான்கு பக்கமும் கடல் சூழ்ந்துள்ள தீவு ஒன்றில் சிறைவைக்கப்படுகிறான். சிறைச்சாலை தரும் கொடுமைகளை தாங்காமல் எப்படி சிறையில் இருந்து தப்பிக்கிறான் என்பது தான் பிரதான கதை. 
 
1844 ஆண்டு தொடக்கம் 1845 வரையான காலப்பகுதியில் இந்த நாவல் தொடராக வெளிவந்தது. இந்த நாவல் அன்பு, நேர்மை, துரோகம், காதல் என பல்வேறு உணர்வுகளை கொண்ட அட்டகாசமான நாவலாக உருவாகி, பலத்த வரவேற்பை சந்தித்தது. கதையில் வரும் ஒவ்வொரு மாந்தர்களும் ஒவ்வொரு குண இயல்புடன், அவர்களுக்குரிய நியாய தர்மங்களுடன் நடந்துகொள்ளும் போது எழும் சிக்கல்களை மிக நேர்த்தியாக சொல்லியிருப்பார் எழுத்தாளர் Alexandre Dumas. 
 
எழுத்தாளர் Jacques Peuchet எழுதிய The Count of Monte Cristo நாவலில் ஒரு காவல்துறை அதிகாரி, எப்போதும் பழிவாங்கும் எண்ணத்திலேயே இருப்பார்... அந்த கதாப்பாத்திரத்தின் பாதிப்பிலேயே இந்த நாவலை எழுதியதாக Alexandre Dumas தெரிவித்திருந்தார். இந்த நாவல் 18 பாகங்களாக Journal des Débats இதழில் வெளியானது. பின்னர் 1844 ஆம் ஆண்டு இந்த நாவல் புத்தகமாக வெளியானது. முதல் 16 பாகங்களிலும் Christo" எனும் பெயருக்கு பதிலாக "Cristo" என தவறுதலாக அச்சடிக்கப்பட்டதாக ஒரு வரலாறு உள்ளது. (தற்போது கிடைக்கும் புத்தகங்களில் சரியாக அச்சடிக்கப்பட்டுள்ளது) 
 
பின்னர் அது, ஆங்கிலத்தில் The Count of Monte Cristo எனும் பெயரில் மொழிபெயர்க்கப்பட்டது... அப்படியே பெல்ஜியம், இத்தாலி, என ஐரோப்பாவை தாண்டி... கண்டங்கள் கடந்தன. இதென்ன ஆச்சரியம் ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட முதல் பிரெஞ்சு நாவல் இதுவாகும். "Shigai Shiden Gankutsu-ou" என்பது அதன் பெயர். 
 
இப்போது நீங்கள் படிக்கப்போவது தான் ஆச்சரியம். இந்த வார ஆரம்பத்தில்  Château d'If தீவில் உள்ள சிறைச்சாலை குறித்து எழுதியிருந்தோமே... அதே தான். அங்குதான் இந்த கதை இடம்பெறுகிறது. உண்மையான சிறைச்சாலையை பின்னணியில் வைத்துக்கொண்டு கற்பனையாக கதை உருவாக்கியுள்ளார் எழுத்தாளர். 
 
தமிழில் 'சிறைச்சாலை' என ஒரு திரைப்படம் வெளியானது நினைவிருக்கலாம். அந்த படத்தின் கதை கூட இந்த நாவலில் இருந்து 'இன்ஸ்ஃபையர்' ஆனதுதான். இன்று இந்த நாவல் பல இலட்சம் பிரதிகள் விற்று சாதனை படைத்ததோடு, 'க்ளாஸிக்' பட்டியலிலும் சேர்ந்துள்ளது.
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

 போலோமீட்டர் (Bolometer)

வெப்பக் கதிர்வீச்சின் அளவை கணக்கிடும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
பரிசுக்குள் பாயும் சென் நதி - சில ஆச்சரியமான தகவல்கள்!!
சென் நதி பரிசுக்குள் நுழையும் போதே பல ஆச்சரியங்களையும் கொண்டே நுழைகின்றது.
10 November, 2018, Sat 12:30 | views: 1841 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
Source-Seine - இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் மொத்தம் 50 பேர் தான்!!
ஒரு கிராமத்தில் மொத்தமாக 50 பேர் தான் வசிக்கின்றனர். ஆனால் அந்த கிராமத்தை மிக சாதார
9 November, 2018, Fri 10:30 | views: 1675 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
உலகம் தழுவிய RATP - சில தகவல்கள்!!
பிரான்சுக்கான பொது போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் RATP குழுமம் மிக முக்கியமான ஒன்று.
8 November, 2018, Thu 10:30 | views: 1563 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
'French 75' - ஒரு ஆயுதத்தின் கதை!!
முதலாம் உலக யுத்தத்தின் நூற்றாண்டு கால நினைவுகளை கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்த வேளை
7 November, 2018, Wed 10:30 | views: 881 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
சிறைச்சாலையும் தேநீர் கடையும்!!
அந்த புகழ்பெற்ற தேநீர்கடை தற்போது நிரந்தரமாக மூடப்பட்டு, தனது அடையாளத்தையும் தொலைத்து நிற்கின்ற
6 November, 2018, Tue 10:30 | views: 777 |  செய்தியை வாசிக்க
trico-transport-international

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS