Montere Fault Yonne(77130)யில் அடுக்கு மாடித் தொடரில் 1ம் மாடியில் 85m² அளவு கொண்ட F4 வீடு வாடகைக்கு உண்டு. மாத வாடகை 750€
Gare de Lyonல் இருந்து 45 நிமிடம் NAVIGO 5 ZONE
பரிஸ் - வணிகவளாகத்தின் எட்டாம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை!!
17 February, 2017, Fri 17:00 GMT+1 | views: 6083
வணிக வளாகம் ஒன்றின் எட்டாம் மாடியில் இருந்து நபர் ஒருவர் விழுந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் வாடிக்கையாளகள் பலரை அதிச்சிக்குள்ளாக்கியுள்ளது.
பரிசின் 9 ஆம் வட்டாரத்தின் Boulevard Haussmann பகுதியில் உள்ள Printemps வளாகத்தில் நேற்று வியாழக்கிழமை நண்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 70 வயதுடைய நபர் எட்டாவது மாடியில் இருந்து விழுந்துள்ளார். முதலில் தாம் எச்சரித்ததாகவும், அதை கவனிக்காது தாமே மாடியில் இருந்து விழுந்துள்ளதாகவும் அக்கடையின் நிர்வாகி தெரிவித்துள்ளார். பின்னர் வேகமாக வந்த முதலுதவி படையினர், குறித்த நபரை சடலமாக மீட்டுள்ளனர். இது தற்கொலை என காவல்துறையினரால் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கடையின் நிர்வாகி மிகுந்த அதிச்சிக்குள்ளாகியிருப்பதாகவும், அவருக்கு சில மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் சம்பவத்தை தொடர்ந்து Printemps கடை நேற்று முழுநாளும் மூடப்பட்டிருந்ததாகவும் அறியமுடிகிறது. இறந்த நபர் 1947 ஆம் ஆண்டு பிறந்த பிரெஞ்சு குடிமகன் என தெரிவிக்கப்படுள்ளது.
* உலகிலேயே மிக உயரத்தில் அமைந்துள்ள நாடு எது? சுவிட்சர்லாந்து
•
உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.