Paristamil France administration
பாவனையாளர் பதிவு உள்நுழைதல்  
paristamil
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
தேவை
210418
வீடு வாடகைக்கு
210418
வீடு வாடகைக்கு
140418
வீடு வாடகைக்கு
140418
Bail விற்பனைக்கு
310318
கடை Bail விற்பனைக்கு
300318
அழகுக் கலைநிபுனர் தேவை
300318
வீடு வாடகைக்கு
300318
பாரிசில் ஆங்கில வகுப்புக்கள்
300318
வீடுகள் விற்க
30112017
புத்தம் புது வீடுகள் வாங்க!!
191117
விளம்பர தொடர்புக்கு
விரைவாய் விளம்பரம் செய்ய
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
அவதானம் - மணிக்கு 80 கிலோமீற்றர் வேகமாகக் குறைக்கப்படும் சாலைகள்!!
France Tamilnews
எச்சரிக்கை! பிரான்சில் அம்மை நோய்த்தொற்று!!
France Tamilnews
இல்-து-பிரான்சிற்குள் புகுந்த வெள்ளம் - ஒரு படத்தொகுப்பு
France Tamilnews
தொற்று நோயாகப் பரவிக் கொண்டிருக்கும் வைரஸ் காய்ச்சல் - ஒரு புள்ளி விபரம்!!
France Tamilnews
விரைந்து செல்லுங்கள் - பெரும் பற்றாக்குறையில் இரத்த வங்கி!!
France Tamilnews
அவதானம் - உங்கள் உடலுறுப்புக்களை வைத்தியசாலைகள் எடுத்துக் கொள்கின்றனவா? - புதிய சட்ட நடைமுறை!!
14 December, 2016, Wed 14:00 GMT+1  |  views: 13231
பிரான்சில் 1956 ஆம் ஆண்டு முதன் முதலாக என்பு மச்சை மாற்று சிகிச்சை பிரான்சில் வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இருதயம், ஈரல், சிறுநீரகம், நுரையீரல், நுரையீரல் இருதய மையம், கணையம், என்பு-மச்சை, கண், தோல், குடல் (மிகவும் அரிதாக), என்பவை மாற்றீட்டு முறைப்படி பொருத்தப்பட்டு வருகின்றது.
 
 
சட்ட உரிமை
 
தேசிய ஒற்றுமையின் பெயரால் (Au nom de la solidarité nationale) ஒருவரின் இறப்பின் பின்னர், இந்த உடலுறுப்புக்களில் உபயோகிக்கும் நிலையில் உள்ளவற்றை, மாற்றீட்டுச் சிகிச்சைக்காக, எடுத்துக் கொள்ளும் உரிமை அரசாங்கத்திற்கு உள்ளது.
 
18 வயதிற்கு மேற்பட்டவர்களின் உடலுறுப்புக்களைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை. 18 வயதிற்குக் குறைந்தவராக இருந்தால் பெற்றோரின் அனுமதி மிகவும் அவசியமானது.
 
 
உடலுறுப்புப் பெறப்படும் முறை
 
ஒருவரின் இறப்பானது, இரண்டுவிதத் தகமையில் உள்ள வைத்தியர்களால் உறுதிசெய்யப்படல் வேண்டும். அதன் பின்னர் குடும்ப உறுப்பினரிடம் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்படல் வேண்டும். ஆனால் அவர்களின்அனுமதி அவசியமில்லை.
 
இந்த உடலுறுப்புக்களை எடுப்பதானது இலவசமானதும், இரகசியமானதுமாகப் பேணப்படும். இந்த உறுப்புக்கள் யாரிற்குப் பொறுத்தப்படுகின்றது என்பதும், மருத்தவ இரகசியக் காப்பின் மூலம் பாதுகாக்கப்படும். ஆனால் வேண்டுமாயின், பெறப்பட்ட உடலுறுப்பானது வெற்றிகரமாக ஒருவரிற்குப் பயன்படுத்தப்படடுள்ளது என்பதை மட்டும் வைத்தியசாலை நிர்வாகம் குடும்பத்தினர்க்குத் தெரிவிக்கலாம். ஆனால் பெறுநரின் அடையாளம் இரகசியக் காப்பிற்குரியது.
 
பிரான்சில் இறக்கும் யாருடைய உடம்பிலிருந்தும், பயனுள்ள உடலுறுப்புக்களை அரசாங்கம் பெற்றுக்கொள்ளும் உரிமை இருப்பதைப்போல், உடலுறுப்புக்கள் அகற்றப்பட்ட பின்னர். உடலம் மீண்டும் கொளவரமான முறையில் முழுமையான நிலையில் உறவுகளிடம் வழங்கப்படல் வேண்டும் எனச் சட்டம் வலியுறுத்துகின்றது.
 
மறுப்புரிமை
 
ஆனால் 11ம் திகதி ஓகஸ்ட் மாதம் திருத்தியமைக்கப்பட்ட décret n°2016-1118 du 11 août 2016  சட்டத்தின் படி தேசிய மறுப்புப் பட்டியலில் (Registre National des Refus) உங்கள் பெயர் விபரங்களைப் பதிவு செய்வதன் மூலம், உங்கள் உடலுறுப்புக்கள் எடுக்கப்பட்டு, இன்னொரு உயிரிற்குப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்க முடியும். இந்த மறுப்புரிமைச் சட்டமானது, மீண்டும் கடந்த 28ம் திகதி நவம்பர் மாதம், பிரதமரின் தலைமையில், யாப்பு உருவாக்க மையத்தினால் பரிசீலனை செய்யப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
 
https://www.registrenationaldesrefus.fr/  தளத்தில் உங்கள் பெயரினைப் பதிவு செய்வதன் மூலம், உங்கள் உடலுறுப்புக்களை இறப்பின் பின்னர் அரசாங்கம் எடுத்துப் பயன்படுத்துவதைத் தடுத்துக் கொள்ள முடியும்.
 
இந்த மறுப்புரிமைச் சட்டமானது, 2017 ஆம் ஆண்டு, ஜனவரி முதலாம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
 

 

  முன்அடுத்த   
பொதறிவுத் துணுக்கு :

கருவிகளும் பயன்களும்

டைனமோ (Dynamo)

எந்திர ஆற்றலை மின்சார ஆற்றலாக மாற்றும் கருவி.

•  உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு: இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
முன்னைய செய்திகள்
srilanka Tamilnews
மார்ச் மாதத்தில் இருந்து காணாமல் போயிருந்த பெண்ணின் சடலம் மீட்பு!!
கடந்த மார்ச் மாதம் 9 ஆம் திகதியில் இருந்து காணாமல் போயிருந்த இளம் எண் ஒருவரின் சடலம் அடுக்குமாடி குடியிருப்பு
15 April, 2018, Sun 11:00 | views: 1624 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அரசின் புதிய வேகக்கட்டுப்பாடுக்கு எதிராக உந்துரு சாரதிகள் ஆர்ப்பாட்டம்!!
அரசு கொண்டுவந்துள்ள புதிய வீதி வேகக்கட்டுப்பாட்டுக்கு எதிராக பல்வேறு அமைப்புக்களைச் சேர்ந்த உந்துருளி சாரதிகள்
15 April, 2018, Sun 7:00 | views: 1985 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
பரிஸ் - பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட நபருக்கு 9 வருட சிறை!!
பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூன்று பயங்கரவாதிகள் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். Djebril Amara, Antoine Frerejean, I. K எனும் மூன்று பயங்கரவாதிகளே சிறையில் அடைக்கப்ப
14 April, 2018, Sat 17:00 | views: 1272 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
ஜெர்மனி பயணமாகும் இம்மானுவல் மக்ரோன்! - Angela Merkel உடன் சந்திப்பு!!
ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன், ஜெர்மனியின் தலைநகர் பேர்லினுக்கு பயணமாக உள்ளார். ஜெர்மன் தலைவர் Angela Merkel இனை சந்தித்து உரையாட உள்ளார்.
14 April, 2018, Sat 15:00 | views: 1223 |  செய்தியை வாசிக்க
srilanka Tamilnews
அமெரிக்க நடிகையிடம் கொள்ளை! - மேலும் ஒருவர் கைது!!
அமெரிக்க நடிகை ஒருவரிடம் கொள்ளையிட்ட வழக்கில் புதிதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். Côte d'Azur இல் இந்த கை
14 April, 2018, Sat 12:00 | views: 1160 |  செய்தியை வாசிக்க

Amthyste International
Actif assurance
Advertisements  |  RSS