Paristamil France administration
விளம்பரம் செய்ய

எழுத்துரு விளம்பரம் - Text Pub fixed

கேரளா மூலிகை வைத்தியம்

எழுத்துரு விளம்பரம் - Text Pub

வாடகைக்கு வீடு

Gare de Villeneuve-Saint-Georgesஇல் இருந்து 5நிமிட நடைதூரத்தில் 50m2 அளவு கொண்ட F3 வீடு வாடகைக்கு.
வாடகை:850€
click to call 06 24 23 25 52

வேலைக்கு ஆள் தேவை

Bail 3/6/9 விற்பனைக்கு

பிரெஞ்சு வகுப்பு

ஊழியர்கள் தேவை

வேலைக்கு ஆள் தேவை

Bail விற்பனைக்கு

ஸ்ரீ முத்துமாரியம்மன் ஜோதிடம்

ஆங்கில வகுப்புக்கள்

வீடு விற்பனைக்கு

PTP திருமண பொருத்துனர்

கேரளா மூலிகை வைத்தியம்

மணப்பெண் அலங்காரம்

மணப்பெண் அலங்காரம் திருமண மாலைகள் மலிவான விலையில் செய்து கொடுக்கப்படும் .
click to call 07 53 91 18 24

கணனி வகுப்புக்கள்

திருமண மண்டப சேவை

வீடுகள் விற்க

விளம்பரத் தொடர்புகளுக்கு
Tél.: 09 70 40 50 71
Port.: 06 64 96 80 79
விளம்பர கட்டணம்
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2019
18
ஞாயிற்றுக்கிழமை
ஆகஸ்ட்
துர்முகி 2047
திதி: துவாதசி
சுப நேரம் »»
விரதங்கள் உள்ளே  »»
Numerology
Rasi palan

யூரோ கிண்ணம் : இன்று பரபரப்பான இறுதிப்போட்டி : ஒரு கண்ணோட்டம்!!

10 July, 2016, Sun 7:00   |  views: 15874

யூரோ கிண்ண போட்டிகளின் இறுதியாட்டம் இன்று பரிசில் இடம்பெறுகிறது. 1960 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட யூரோ கிண்ண போட்டிகள், ஒவ்வொரு நான்கு வருடத்துக்கும் ஒருமுறை இடம்பெறுவது வாசகர்கள் அறிந்ததே. 
 
இம்முறை பிரான்சில் யூரோ கிண்ண போட்டிகளை நடத்துவது, பிரெஞ்சு அரசுக்கு பெரும் சவாலாக அமைந்தது. கடந்த வருடம் நவம்பரில் தலைநகர் பரிசில் பயங்கரவாத தாக்குதல் நடாத்தப்படு 130 பேர் இறந்திருந்தமையும், அதை தொடர்ந்து நாடு முழுவதும் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலவி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. அவசரகாலச்சட்டம் போடப்பட்டு, பின்னர் அது யூரோ கிண்ண போட்டிகள் முடியும் வரை நீட்டிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
 
யூரோ கிண்ண போட்டிகளை இம்முறை பிரான்சில் நடத்துவது கத்திமேல் நடப்பது போன்றது என பல ஊடங்களும், பொது மக்களும் கருத்துக்கள் தெரிவித்திருந்தார்கள். மேலும், போட்டிகளை ரத்து செய்யவேண்டும் என சில அரசியல் கட்சிகள் கூறியிருந்தன. ஆனால், பிரான்சுவா ஓலந்து தலைமையிலான அரசு, போட்டிகளை நடத்தியே தீருவது என தீர்க்கமாக முடிவெடுத்திருந்தார்கள்.
 
அதை தொடர்ந்து, சிறப்பு படைப்பிரிவுகள் பணியில் அமர்த்தப்பட்டு, விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, 90 ஆயிரம் வீரர்கள் நாடுமுழுவதும் யூரோ கிண்ண போட்டிகளுக்காக கடமையாற்றி வருகிறார்கள். போட்டிகள் ஆரம்பிப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே அனைத்து பாதுகாப்புகளும் உறுதிசெய்யப்பட்டு விட்டது என உள்துறை அமைச்சர் தெரிவித்திருந்தார். 
 
போட்டிகள் கடந்த, ஜூன் 10ம் திகதி பரிசின் Saint-Denis இல் உள்ள Stade de France மைதானத்தில் ஆரம்பித்தது. போட்டியை காண ஜனாதிபதி பிரான்சுவா ஓலாந்து வருகை தந்திருந்தார். முதல் போட்டியில் பிரான்ஸ் ருமேனியாவை எதிர்கொண்டிருந்து, 2-1 எனும் கணக்கில் வெற்றி பெற்றது. 
 
தொடர்ந்து, போட்டிகள் நடைபெற்றுக்கொண்டிருக்க, யாரும் எதிர்பார்த்திராத புதிய பிரச்சனை ஒன்று முளைக்க ஆரம்பித்தது. ரஷ்யா மற்றும் இங்கிலாந்தை சேர்ந்த குண்டர் படை ஒன்று களத்தில் இறங்கி வன்முறையில் ஈடுபட்டது. சொத்துக்களை சேதமாக்கியும், ரசிகர்களை தாக்கியும் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டிருதனர். பரிசில் ஆரம்பித்த இந்த குண்டர் படை அட்டகாசம், மார்செய் நகருக்கும், லியோன் நகருக்கும் பரவியது. போட்டிகள் இடம்பெறுவதற்கு முதல்நாள் இரவில் பலத்த மோதல்கள் வெடித்தது.
 
ஆனால் அது பலநாள் நீடிக்கவில்லை. இண்டு மூன்று வன்முறைகளோடு, அதற்கும் முற்றுப்புள்ளி வைத்தது பிரெஞ்சு அரசு. வன்முறையாளர்களில் சிலருக்கு சிறைத்தண்டனையும், தண்டப்பணமும் விதித்து தீர்ப்பளித்தது. மேலும் முக்கிய குற்றவாளிகள் சிலரை நாட்டை விட்டு கட்டாயமாக வெளியேற்றியது அரசு. 
 
அதன் பின்னர் சொல்லிக்கொள்ளும் படியான எந்த வன்முறை சம்பவங்களும் இடம்பெறவில்லை என்றாலும், உச்சக்கட்ட கண்காணிப்பில் அதிகாரிகள் ஈடுபட்டிருந்தார்கள். கால் இறுதியில் அபாரமாக வெற்றி பெற்று அரை இறுதிக்குள் நுழைந்த பிரான்ஸ், ஜெர்மனியை எதிர்கொண்டிருந்தது.
 
வாழ்வா சாவா போராட்டம் என கருதப்பட்ட, பிரான்ஸ் ஜெர்மனி போட்டியை காண, மைதானத்தில் 80 ஆயிரம் பேர் குவிந்தனர். அதை தவிர்த்து ஈஃபிள் கோபுரம் முன்பாக 90 ஆயிரம் பேர் கூடி நின்றனர். இரண்டு அணிகளும் வெற்றி பெறுவதற்குரிய வாய்ப்புகள் சரிசமமாக இருந்தும், 2-0 எனும் செட் கணக்கில் அபாரமாக வெற்றியை ஈட்டி, இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது பிரான்ஸ்!! 
 
அதை தொடர்ந்து, வெள்ளி மற்றும் சனி, 8ம், 9ம் திகதிகளில் எந்த போட்டிகளும் இடம்பெறவில்லை. இதோ... இன்று யூரோ கிண்ணம் 2016இன் இறுதிப்போட்டி!! பிரான்சுக்கும் போர்த்துக்கல்லுக்கும் இடையே இடம்பெறுகிறது. 
 
சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் ஆக்ரோஷமாக மோதிக்கொள்கிறார்கள். போர்த்துக்கல் இறுதிப்போட்டியில் விளையாடுவதை கேலி கிண்டல் செய்து பல பதிவுகள் பதிவேற்றப்படுகின்றன. குறிப்பாக ஜெர்மன் அணி அரை இறுதியோடு தாய்நாடு திரும்பியதும், ஜெர்மனி ரசிகர்கள் பிரான்சை எதிர்த்து, போர்த்துக்கல்லுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறமை சமூக வலைத்தளக்களில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. 
 
மேலும், இறுதிப்போட்டியில் யார் ஜெயிப்பார்கள் போன்ற கருத்துக்கணிப்புகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. கருத்துக்கணிப்பில் பெரும்பான்மையாக பிரான்சே ஜெயிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
 
இவ்வாறாக பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இன்று இரவு 9 மணிக்கு, பரிசின் Stade de France மைதானத்தில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் மத்தியில் போட்டி இடம்பெறுகிறது. வெற்றி யாருக்கு?!? பொறுத்திருந்து பார்க்கலாம்!! 

  முன்அடுத்த   

kerala-mooligai-vaithiyam-oil-massage
computer-class-gare-de-bondy
முன்னைய செய்திகள்
  முன்


TRICO TRANSPORT INTERNATIONAL
Tel. : +33 7 54 13 38 25
trico-transport-international
பொதிகள் அனுப்பும் சேவை இலங்கை, இந்தியா மற்றும் அனைத்து நாடுகளுக்கும் குறைந்த விலையில்..
AMETHYSTE INTERNATIONAL
Tel. : +33 6 64 38 47 18
amethyste-international
இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€ வில் இருந்து பெற்றுக்கொள்ளாம்..
AUTO ECOLE DE BONDY
Tel. : 0175471856 / 0752111355
auto-ecole-de-bondy
வீட்டில் இருந்து வலைத்தளம் வழியாக கோட் படிக்க
EXACT EXCHANGE SARL
Tel.: 01 48 78 35 33
exact-exchange-sarl
உலகின் எப்பாகத்திற்கும் பணப் பரிமாற்றம் செய்ய நாடவேண்டிய ஸ்தாபனம்
WORLD FAMOUS ASTROLOGER FROM INDIA JOTHIDAR NOW IN PARIS
HIK VISION
Tel.: 06 29 17 07 14
முழு வீட்டையும் 24 மணி நேரமும் பாதுகாப்பு
SALLE PALAIS DE LA TERRASSE
Tel.: 06 12 65 73 53 / 06 51 79 74 32
தமிழர்களுக்கான புதிய மண்டபம் உதயம்

ANNONCES

Mercedes benze ml 2.7
3500 €
Paristamil Annonce