பிரான்சில் கடந்த நான்கு வருடங்களில் இல்லாத அளவு நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நால்வர் காயமடைந்துள்ளனர்.
பிரான்சின் தென் கிழக்கு பிராந்தியமான Montélimar (Drôme) நகரில் இந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது. நேற்று திங்கட்கிழமை நண்பகலை நெருங்கிக்கொண்டிருந்த வேளையில், இங்குள்ள Teil எனும் பிராந்தியத்தில் பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது. தவிர Ardèche எனும் நகரிலும் நில நடுக்கம் ஏற்பட்டது. 5.4 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பதிவானது. முன்னெச்சரிக்கை காரணமாக உடனடியாக Ardeche நகரில் உள்ள அனல் மின் நிலையம் நிறுத்தப்பட்டது.
Drôme, Ardèche மற்றும் Montélimar ஆகிய நகரங்களைச் சேர்த்து மொத்தமாக நால்வர் காயமடைந்துள்ளனர். சில கட்டிடங்கள் இடிந்தும், சில கட்டிடங்களில் வெடிப்பும் நிகழ்ந்துள்ளன. பலர் பாதுகாப்பான இடத்துக்கு மாற்றப்பட்டனர். தீயணைப்பு படையினர் துரிதமாக செயற்பட்டு உதவிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2003 ஆம் ஆண்டு 5.5 ரிக்டர் அளவு நிலநடுக்கம் பிரான்சில் பதிவானது. அதன் பின்னர் இடம்பெறும் மிகப்பெரும் நிலநடுக்கம் இதுவாகும்.