13வது வாரமான இன்றைய மஞ்சள் ஆடைப் போராட்டத்தில் நாடு தழுவிய ரீதியில் 54.000 பேர் கலந்து கொண்டதாகவும், பரிசில் 4.000 பேர் கலந்து கொண்டதாகவும் சற்று முன்னர் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்தவாரம், நாடு தழுவிய ரீதியில் 58.600 பேரும், பரிசில் 10.500 பேரும் கலந்துகொண்டதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது. ஆனாலும் ஊடகங்கள் பரிசில் 13.800 பேர் கலந்துகொண்டதாகக் கணக்கெடுத்திருந்தனர்.
இன்றைய போராட்டத்தில் மதியத்தின் பின்னர் வன்முறைகள் வெடித்துள்ளன.
16h30 அளவில், ஈபிள் கோபுரத்திற்கு அருகில், காவற்துறை வாகனங்கள் மீது கற்கள் வீசப்பட்டதைத் தொடர்ந்து, காவற்துறையினர் கண்ணீர்ப்புகைத் தாக்குதல் நடாத்தி உள்ளனர்.
பரிசில் 36 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய போராட்டங்களில் மஞ்சளாடைப் பேராளிகள் 'வெறுக்கத்தக்க' வகையிலும் 'அருவருக்கத்தக்க' வகையிலும் நடந்து கொண்டதாக, உள்துறை அமைச்சர் கிறிஸ்தொப் காஸ்தனே மிகவும் காட்டமாகத் தனது டுவிட்டர் அலகில் தெரிவித்துள்ளார்.
இன்றைய போராட்டங்களின் ஆரம்பத்திலேயே, 'காவற்துறை வன்முறைகளைக் கட்டவிழத்துவிடும் உள்துறை அமைச்சர்' பதவிவிலக வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
* உலகிலே ஆயிரம் ஏரிகளின் நாடு என்றழைக்கப்படும் நாடு எது? பின்லாந்து
•
உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.