செந்தனியில் பெண்ணையும் அவரது மகனையும் தாக்கி - வழிப்பறி!!
11 September, 2018, Tue 15:00 GMT+1 | views: 3223
செந்தனியில் வழிப்பறி செய்வதற்காக பெண் ஒருவரையும் அவரது மகனையும் மிக மோசமாக தாக்கியுள்ளனர்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவுக்கி சற்று முன்னதாக இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. செந்தனியின் Rue Edouard-Vaillant வீதியில் 23.50 மணிக்கு வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்த பெண் ஒருவரும் அவரின் 28 வயதுடைய மகன் ஒருவரும் கொள்ளையர்களால் வழிமறிக்கப்பட்டனர். இரண்டு உந்துருளியில் வந்தவர்களே இவ்வாறு வழிமறித்து சுற்றி நின்றனர். தாயிடம் இருந்த பணப்பையை பறிப்பதற்கு முயல, மகன் அவர்களை தடுக்க முற்பட்டான்.
அதன்போது கொள்ளையகளில் இருவர், மகனை மிக மோசமாக தாக்கியுள்ளனர். பின்னர் அவர்கள் பணப்பையுடன் இருவரையும் தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். செந்தனி காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். தாக்குதலில் எலும்பு முறிவு ஏற்பட்ட மகன் Delafontaine மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
ஏ.சி. மின்சாரத்தை டி.சி. மின்சாரமாக மாற்றும் கருவி.
•
உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.