சவுதி குடும்பத்தினரிடம் பல இலட்சம் யூரோக்கள் மதிப்புள்ள நகைகள் கொள்ளை!!
11 September, 2018, Tue 7:00 GMT+1 | views: 2827
பரிசில் சவுதி அரேபியாவைச் சேர்ந்த குடும்பத்தினரிடம் பல இலட்சம் யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிசின் ஆடம்பர Ritz தங்குமிடத்தில் வைத்து இந்த நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 1 ஆம் வட்டார காவல்துறையினரிடம் வழக்கு தொடுத்த பின், அவர்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். வெள்ளிக்கிழமை நண்பகலுக்கு சற்று பின்னதாக இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றதாகவும், ஆனால் அதற்குரிய எந்த தடயங்களும் கிடைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையிடப்பட்ட நகைகளின் மொத்த பெறுமதி 8 இலட்சம் யூரோக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பரிசில் தொடர்ச்சியாக இலட்சக்கணக்கான பெறுமதியுள்ள கொள்ளைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இதே Ritz தங்குமிடத்தில் இவ்வருட ஜனவரியில் ஒரு கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. அமெரிக்க தொலைக்காட்சி நடிகை மற்றும் மொடல் Kim Kardashian இடம் இருந்து ஒன்பது மில்லியன் யூரோக்கள் பெறுமதியுள்ள நகைகள் கொள்ளையிடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
* உலகிலேயே மிக உயர்ந்த பீட பூமி எது? தீபெத் பீட பூமி
•
உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.