தபால் ஊழியரை தாக்கிய நபர் கைது! - பரிஸ் 11 ஆம் வட்டாரத்தில் சம்பவம்!!
10 September, 2018, Mon 21:00 GMT+1 | views: 2839
பரிசில் நபர் ஒருவர் தபால் ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளார். இன்று திங்கட்கிழமை 11 ஆம் வட்டாரத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இன்று திங்கட்கிழமை காலை Place de la Bastille க்கு அருகே, Rue de la Roquette மற்றும் Rue de Lappe வீதிகளின் முனையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. SDF என அழைக்கப்படும் வீடற்றவர் ஒருவர், முதலில் வீதியில் சென்ற நபர் ஒருவரை தாக்கியுள்ளார். பின்னர் இரண்டாவதாக தபால் ஊழியர் ஒருவரை தாக்கியுள்ளார். குறித்த நபர் பின்னர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். காரணங்கள் ஏதுமின்றி தாந்தோன்றித்தனமாக வீதியில் சென்றவர்களை தாக்கியுள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
11 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் குறித்த நபரை மடக்கி வாகனத்தில் ஏற்றி காவல்நிலையத்துக்கு கொண்டு வந்துள்ளனர். தாக்குதலுக்கு இலக்கானவர்கள் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.