சற்று முன் : பரிசில் தாக்குதல்! - ஏழு பேர் காயம்! - நால்வர் உயிருக்கு போராட்டம்!!
10 September, 2018, Mon 7:00 GMT+1 | views: 8721
பரிசில் சற்று முன் தாக்குதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. நபர் ஒருவர் இரும்பு கம்பி கத்தி போன்றவற்றை பயன்படுத்தி ஏழு பேரை தாக்கியுள்ளார். அதில் நல்வர் உயிருக்கு போராடிவருகின்றனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 23 மணி அளவில் இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. பரிஸ் 19 ஆம் வட்டாரத்தில் Ourcq canal அருகே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. ஆஃப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஒருவரே தாக்குதல் நடத்தியுள்ளார். முதல்கட்ட விசாரணைகளில் 'பயங்கரவாத தாக்குதல்' என்பதற்குரிய தடயங்கள் எதுவும் கிடைக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த நபரை BAC படையினர் மடக்கிப்பிடித்து கைது செய்துள்ளனர்.
திரைப்படம் ஒன்றை பார்வையிட்டுக்கொண்டிருந்த நபர், அதன் பின்னர் வெளியே வந்து தாக்குதல் நடத்தியதாகவும், இந்த ஏழு பேரைத் தவிர முன்னதாகவே இருவரை தாக்கியிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலதிக தகவல்கள் பின்னர் வெளியாகும்.
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.