இன்று நடைபெற்ற Ligue des Nations உதை பந்தாட்டப் போட்டியில் பிரான்ஸ் நெதர்லாந்தை 2:1 என்ற இலக்கு விகிதத்தில் தோற்கடித்துள்ளது.
உலகக் கோப்பையை பிரான்ஸ் வென்றதன் பின்னர், பிரான்சில் நடைபெறும் பிரெஞ்சு தேசிய அணியின் முதலாவது போட்டி இதுவாகும். இந்தப் போட்டியானது ஸடத்-து-பிரான்சில் நடைபெற்றது.
விளையாட்டு ஆரம்பித்து சிறிது நேரத்தில், முதலாவது இலக்கினை கிலியான் எம்பாப்பே மிகச் சாமர்த்தியமாக இறக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து, அரை நேர இடைவேளையின் பின்னர், நெதர்லாந்து ஒரு இலக்கினைப் பெற்று 1:1 என்ற விகிதத்தில் போட்டியினைச் சமன் செய்தது.
விளையாட்டின் 75% நேரத்தின் பின்னர், நீண்ட கால இடைவெளியின் பின்னர், ஒலிவியே ஜிரூ ஒரு இலக்கினைப் போட்டு பிரான்சின் வெற்றியினை உறுதி செய்தார். இதன் மூலம் பிரான்ஸ் நெதர்லாந் அணியிiனை 2:1 என்ற விகிகத்தில் தோற்கடித்தது.
ஒலிவியே ஜிரூ உலகக் கோப்பைப் போட்டியியில் எந்த இலக்கினையும் பெற்றிருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
கடந்த பெப்ரவரி 11 ஆம் திகதி Aubervilliers இல் தனியார் நிறுனம் ஒன்றுக்குச் சொந்தமான பண வண்டி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், பல்வேறு புதிய செய்திகள் வெளி