போலி விளம்பரம் கொடுத்து வாடிக்கையாளரை தாக்கிய நபர்கள்! - சூழ்ச்சி செய்து மீண்டும் கைது செய்ய உதவிய நபர்!!
9 September, 2018, Sun 15:00 GMT+1 | views: 2442
உந்துருளி விற்பனைக்கு என போலியான விளம்பர கொடுத்து, வாடிக்கையாளரை தாக்கிய சம்பவம் ஒன்று பரிசில் இடம்பெற்றுள்ளது.
Bon Coin எனும் இணையத்தளமூடாக உந்துருளி ஒன்று விற்பனைக்கு உள்ளது என இரு நபர்கள் விளம்பரப்படுத்தியுள்ளனர். அவரை வாடிக்கையாளர் ஒருவர் தொடர்புகொண்டு, நேரில் வந்து பெற்றுக்கொள்ளுமாறும் தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களின் பேச்சை நம்பிச் சென்ற நபருக்கு ஏமாற்றமே காத்திருந்தது. உந்துருளி வாங்கச் சென்ற நபரை குறித்த இரு நபர்களும் தாக்கி, அவரிடம் இருந்த €700 பணத்தை பணத்தையும் பறித்துக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர். இச்சம்பவம் கடந்த புதன்கிழமை பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆனால் சம்பவம் அத்தோடு முடியவில்லை. கொள்ளையர்கள் மறுநாள் மீண்டும் இணையத்தில் விளம்பரப்படுத்தியுள்ளனர். தாக்குதலுக்கு இலக்கான நபர் பிறிதொடு கணக்கில் இருந்து அவர்களுடன் உரையாடி 'சந்திப்புக்கு' ஏற்பாடு செய்தார். ஆனால் இம்முறை காவல்துறையினரோடு அங்கு செல்ல, மறைந்திருந்த காவல்துறையினர் குறித்த இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். தற்போது அனைவரும் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளனர்.
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.