பரிஸ் - சிலவாரங்களுக்கு முன் இறந்த பெண்ணின் சடலம் மீட்பு!
9 September, 2018, Sun 12:00 GMT+1 | views: 2425
பரிசில் பெண் ஒருவரின் சடலம் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளது. பெண் உயிரிழந்து சில வாரங்கள் ஆகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் கார்-து-நோர் நிலையத்துக்கு பின்பாக rue Boucry வீதியில் உள்ள வீடு ஒன்றில் வைத்து இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று மாலை 4 மணிக்கு தீயணைப்பு படைய்னர் எதேர்ச்சையாக இதை கண்டுபிடித்தனர். பூட்டிய வீட்டுக்குள் இருப்து துர்நாற்றம் வீசியதாகவும், அதன் பின்னர் வீட்டை உடைத்து சடலத்தை மீட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
18 ஆம் வட்டார காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த பெண் உயிரிழந்து சில வாரங்கள் ஆகலாம் எனவும், உயிரிழந்த பெண் அடையாளம் காணப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.