பரிஸ் - பல பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபர் அதிரடி கைது!!
8 September, 2018, Sat 15:00 GMT+1 | views: 2673
பரிசில் இந்த கோடைகாலத்தின் போது பல்வேறு இளம் பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த நபர் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் வியாழக்கிழமை இந்த கைது சம்பவம் இடம்பெற்றுள்ளது. கைது செய்யப்பட்ட நபர் 29 வயதுடையவர் எனவும், இவ்வருட கோடை காலத்தின் போது ஐந்து இளம் பெண்களையும், ஒரு சிறுமியையும் பாலியல் துன்புறுத்தல் செய்துள்ளார். பல்வேறுகட்ட கண்காணிப்பு மற்றும் விசாரணைகளின் பின்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் பரிசின் வடமேற்கு பகுதியைச் சேர்ந்தவர் எனவும், கடந்த ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் ஐந்துக்கும் மேற்பட்ட இளம் பெண்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார் என நபரை கைது செய்த Brigade de Protection des Mineurs (BPM) படையினர் தெரிவித்துள்ளனர்.
பூமியில் பாறை உருவான விதம், அமைப்பு குறித்து படிக்கும் படிப்பு.
•
உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.