சினிமா பாணியில் வயிற்றுக்குள் போதைமருந்து கடத்தியவர் - சுங்க அதிகாரிகளால் கைது!!
30 August, 2018, Thu 19:00 GMT+1 | views: 3353
வயிற்றுக்குள் €75,000 யூரோக்கள் பெறுமதியுள்ள போதைமருத்தை வயிற்றுக்குள் வைத்து கடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் கடந்த ஓகஸ்ட் 10 ஆம் திகதி இடம்பெற்றிருந்தது. Nièvre மாவட்டத்தில் குறித்த நபர் தொடரூந்து நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டிருந்தார். ஒன்றுக்கொன்று முரணான தகவல்களை தெரிவித்ததால், சந்தேகத்தின் அடிப்படையில் சோதனையிடப்பட்டது. வயிற்றுப்பகுதி கதிர்வீச்சு கருவியில் சோதனையிடப்பட்டது. அப்போது உள்ள சிறு சிறு பொதிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
குறித்த நபர் குறைந்தது 109 பொதிகளை உட்கொண்டுள்ளார். 1,309 கிராம் போதைப்பொருள் அவற்றுக்குள் அடைக்கப்பட்டிருந்தது. உடனடியாக கைது செய்யப்பட்ட நபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சைக்கும் உட்படுத்தப்பட்டார். இவர் Guyana தீவுக்கு இப்போதைப்பொருளை கடத்த முற்பட்டுள்ளார் எனவும், அதன் மொத்த மதிப்பு €74,460 யூரோக்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, நேற்று புதன்கிழமை குறித்த நபருக்கு ஐந்து வருட சிறைத்தண்டனையும், €52,300 யூரோக்கள் தண்டப்பணமும் அறவிடப்பட்டுள்ளது.
* உலகிலேயே மிக உயரமான மலைச் சிகரம் எது? எவரெஸ்ட் (நேபாளம் 8848 மீ)
•
உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.