தொடரூந்துக்கு முன்னால் பாய்ந்த தாய்! - அதிர்ச்சியில் மகன்!!
19 August, 2018, Sun 13:00 GMT+1 | views: 5516
பெண் ஒருவர் தனது 11 வயதுடைய மகனின் கண் முன்னால் RER B தொடரூந்துக்கு முன்னாள் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை ஓகஸ்ட் 17 ஆம் திகதி Hauts-de-Seine இல் உள்ள Bourg-la-Reine தொடரூந்து நிலையத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அன்று, நண்பகல் வேகையில் 44 வயதுடைய பெண் ஒருவர் தன்னுடைய 11 வயதுடைய மகனுடன், RER B தொடரூந்தில் வந்து குறித்த நிலையத்தில் இறங்கியுள்ளார். பின்னர் தொடரூந்து புறப்படும் போது எதிர்பாராத வேளையில், தொடரூந்தில் முன்னால் பாய்ந்துள்ளார். இதனால் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இதை கண் எதிரே ஆர்த்துக்கொண்டிருந்த 11 வயதுடைய மகன் மிக அதிர்ச்சிக்கு உள்ளாயுள்ளான். உடனடியாக குறித்த சிதுவனை மீட்கப்பட்டு மனநல சிகிச்சைக்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளான். சில நிமிடங்கள் வரை போக்குவரத்து தடைப்பட்டது.
* உலகிலேயே மிக நீளமான நதி எது? நைல் நதி (6695கி.மீ)
•
உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.