இணையத்தில் வாங்கிய போலி 'சைரன்' - வீதியில் சென்றவர்களை மிரட்டி - தாக்குதலுக்கு ஆளான இளைஞர்கள்!!
15 August, 2018, Wed 11:00 GMT+1 | views: 4157
போலியான காவல்துறையினரின் சமிக்ஞை (சைரன்) விளக்கு ஒன்றை வைத்து வீதியில் சென்றவர்களை ஏமாற்றிய மூன்று இளைஞர்கள் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர்.
மூன்று இளைஞர்களின் இந்த விளையாட்டு விபரீதமாகியுள்ளது. மூன்று இளைஞர்கள் இணையத்தளமூடாக சைரன் சமிக்ஞை விளக்கு ஒன்றை வாங்கியுள்ளனர். பின்னர் அதை மகிழுந்து ஒன்றில் பொருத்தி, Rouen ( Seine-Maritime ) நகரின் புறநகர் பகுதியில் உள்ள வீதி ஒன்றில் நிறுத்தி, ஒலி எழுப்பியுள்ளனர். வீதில் சென்றவர்கள் இதனால் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகினர். ஆனால் இந்த சந்தோசம் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. மகிழுந்தில் வந்த சிலரை இது போல் ஏமாற்றியதால், ஆத்திரம் அடைந்த அவர்கள் மூன்று இளைஞர்களையும் தாக்கியுள்ளனர்.
இந்த சைரன் BMW மகிழுந்து ஒன்றில் பொருத்தப்பட்டிருந்ததாகவும், குறித்த மூன்று இளைஞர்களையும் ஐவர் கொண்ட குழு ஒன்று மோசமாக தாக்கியதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தவிர அவர்கள் காவல்துறையினரின் உடை அணிந்திருந்ததாகவும், அதுவே அவர்களை மேலும் கோபமாக்கியது எனவும் தெரிவித்துள்ளனர். விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது. நபர் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது எனவும் அறிய முடிகிறது.
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.