பரிசில் - சர்ச்சைக்குள்ளான சிறுநீர் கழிக்கும் இயந்திரம்!!
15 August, 2018, Wed 9:00 GMT+1 | views: 4816
பரிசில் புதிதாக ஆண்களுக்காக அமைக்கப்பட்டுள்ள 'திறந்தவெளி' சிறுநீர் கழிக்கும் இயந்திரம் ஒன்று பெரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
முதல் கட்டமாக இந்த 'திறந்தவெளி' சிறுநீர் கழிக்கும் கருவி 17 ஆம் வட்டாரத்தில் உள்ள Île Saint-Louis (சென் நதியில் உள்ள தீவு) இல் அமைக்கப்பட்டுள்ளது. பொது இடங்களில் சிறுநீர் கழிக்கும் இடங்கள் அவசியமான ஒன்று தான் என்றபோதும், இது பலரால் முகம் சுழிக்கக்கூடியதாக உள்ளது, தவிர, நீங்கள் அதில் சிறுநீர் கழிக்கும் போது உங்களைச் சுற்றி எவ்வித தடுப்புச் சுவர்களும் இருக்காது. இது குறித்து பெண் ஒருவர் தெரிவிக்கும் போது, 'இது மிக மோசமான ஒன்று, நீங்கள் சிறுநீர் கழிக்கும் போது மற்றவர்களால் உங்களை பார்க்கமுடியும். இதனால் சுற்றுலாப்பயணிகள் இதனை பரிஸ் என்றே நம்ப மாட்டார்கள்!' என தெரிவித்துள்ளார்.
தவிர, சிறுநீர் கழிக்கும் வசதி ஆண் மற்றும் பெண் இருவருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும். இது முழுக்க முழுக்க ஆண்களுக்கானது. பெண்களுக்காக எதுவும் அமைக்கப்படவில்லை. இந்த சர்ச்சையும் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்படு வருகின்றது. இந்த சிவப்பு வர்ண கருவிக்கு Uritrottoir என பெயர் சூட்டியுள்ளனர். பரிசில் பிற நகரங்களிலும் இவை அமைக்கப்பட இருந்த நிலையில், தற்போது இந்த திட்டம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பூமிப் பரப்பில் விலங்கினங்கள் உருவான விதம் குறித்து அறியும் படிப்பு.
•
உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.