ப்ளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக கடுமையாக்கப்படும் சட்டம்! - புதிய கட்டுப்பாடுகள்!!
13 August, 2018, Mon 13:00 GMT+1 | views: 3258
மீழ் சுழற்சிக்கு உட்படுத்த முடியாத ப்ளாஸ்டிக் பொருட்களுக்கு எதிராக பிரெஞ்சு அரசு பல கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுக்க உள்ளது.
2025 ஆம் ஆண்டுக்குள் பிரான்சில் முற்று முழுதாக 100 வீத மீள் சுழற்சி செய்யக்கூடிய ப்ளாஸ்டிக் பொருட்களை மட்டுமே தயாரிக்கும் நிலையை நாம் எட்டிவிவோம் என சுற்றுச்சூழல் அரச அதிகாரி Brune Poirson தெரிவித்துள்ளார். இதற்காக தாம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், மீள் சுழற்சி செய்யமுடியாத ப்ளாஸ்டிக்குகளை தயாரிக்கும் நிறுவனங்களின் பொருட்கள் மீது 10 வீத மேலதிக வரி ஏய்ப்பு செய்யப்படும் எனவும், இதனால் அதன் விலை சந்தையில் அதிகமாக காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே தரமுள்ள பொருள், மீழ் சுழற்சி செய்ய முடியாது என்பதற்காக அதிக விலை கொடுத்து வாங்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த வரி ஏய்ப்பு 2019 மஆம் ஆண்டில் இருந்து செயற்பாட்டுக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை 95 வீதமான பிரெஞ்சு மக்கள், ஒவ்வொரு ப்ளாஸ்டிக் போத்தலும் மீள் சுழற்சி செய்யப்பட்டு வருவதாகவே தாம் நினைத்துக்கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.
* உலகிலேயே மிக அகலமான நீர்வீழ்ச்சி எது? நயாகரா நீர்வீழ்ச்சி
•
உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.
கடந்த பெப்ரவரி 11 ஆம் திகதி Aubervilliers இல் தனியார் நிறுனம் ஒன்றுக்குச் சொந்தமான பண வண்டி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில், பல்வேறு புதிய செய்திகள் வெளி