கத்தி மூலம் காவல்துறையினரை தாக்க முற்பட்ட நபர்! - துப்பாக்கிச்சூடு!!
9 August, 2018, Thu 19:00 GMT+1 | views: 2895
கூரான கத்தி ஒன்றின் மூலம் காவல்துறையினரை தாக்க முற்பட்ட நபர் ஒருவர் காவல்துறையினரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகியுள்ளார்.
நேற்று புதன்கிழமை இரவு இச்சம்பவம் Melun பகுதியில் இடம்பெற்றுள்ளது. 18 வயதுடைய நபர் ஒருவர் காவல்துறையினரை தாக்க முற்பட்டுள்ளார். இதனால் காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டது. நபரை நோக்கி நான்கு தடவைகள் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். படுகாயமடைந்த குறித்த நபர் Henri-Mondor (Val-de-Marne) மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நள்ளிரவு 1 மணி அளவில் Melun தொடரூந்து நிலையத்துக்கு அருகே காவலில் ஈடுபட்ட BAC அதிகாரிகள் மீதே தாக்குதல் நடத்த முற்பட்டுள்ளார். அதிகாரிகள் தாக்குதலாளியை மடக்கி பிடிக்க முயற்சித்தனர். ஆனால் தொடருந்து மூர்க்கத்தனமாக நடந்துகொண்டதால் துப்பாக்கிச்சூடு நடத்தவேண்டி ஏற்பட்டுள்ளது என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. IGPN அதிகாரிகள் விசாரானைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஒலி அலைகளைப் பயன்படுத்தி கடலின் ஆழத்தை அளவிடும் கருவி.
•
உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.