இல்-து-பிரான்சுக்குள் 39°c வரை வெப்பம்! - வெயில் மற்றும் மழை!!
7 August, 2018, Tue 13:00 GMT+1 | views: 3620
பரிஸ், அதன் புறநகர்கள் மற்றும் இல்-து-பிரான்சின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று கடும் வெப்பம் நிலவும் எனவும், அதைத் தொடர்ந்து மாலை மழைப்பொழிவு ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரெஞ்சு வானிலை ஆய்வு மையம் அறிவித்ததன் படி, இல்-து-பிரான்சுக்குள் அதிகபட்சமாக 39°c வெப்பம் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டு, செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தவிர நாடு முழுவதும் 66 மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது இவற்றில் 21 மாவட்டங்களில் கடும் மழைக்காகவும், ஏனைய மாவட்டங்கள் கடும் வெயிலுக்காகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பரிசுக்குள் இன்று 37°c வரை வெப்பம் நிலவி வருகின்றது. 66 மாவட்டங்களுக்கான எச்சரிக்கை நாளை புதன்கிழமை நண்பகல் வரை விடுக்கப்பட்டுள்ளது. தவிர, நாளையோடு அதிகூடிய வெப்பம் முடிவுக்கு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.