நேற்று ஞாயிற்றுக்கிழமை Nîmes சிறைச்சாலையில் சிறைச்சாலை மேற்பார்வையாளர் ஒருவர் மிக மோசமாக தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். கைதி ஒர்ய்வர் அவரை தாக்கியுள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை நண்பகல் வேளையில், குறித்த கைதி, உணவு பெறுவதற்காக சிறைச்சாலைக்குள் நடந்து சென்றுகொண்டிருந்த போது திடீரென கையில் வைத்திருந்த ஆயுதம் ஒன்றை பயன்படுத்தி, மிக மோசமாக சிறைச்சாலை மேற்பார்வையாளரை தாக்கியுள்ளார். மேற்பார்வையாளரின் கழுத்து பகுதியில் கூரான ஆயுதம் மூலம் தாக்கியதில் இரத்தக்கசிவு மிக மோசமாக ஏற்பட்டது. உடனடியாக Nîmes ( Gard) நகர பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டுசெல்லப்பட்டார்.
இந்த தாக்குதல் சம்பவம் கண்காணிப்பு கமராவில் பதிவாகியுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நீதித்துறை அமைச்சர் Nicole Belloubet, இதுகுறித்து தெரிவிக்கும் போது, 'இதுபோன்ற கைதிகள் பிரான்ஸ் முழுவதும் நிரம்பி வழிகின்றனர். நாம் அவர்களை சமாளிக்க பெரிதும் போராடுகின்றோம்!' என இன்று திங்கட்கிழமை Nîmes சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்ட போது தெரிவித்தார்.
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.