Champagne-sur-Seine - மதுபோதையில் தள்ளாடிய திருடன்! - திருடப்போன வீட்டில் படுத்துறங்கினான்!!
4 August, 2018, Sat 19:00 GMT+1 | views: 3443
திருடன் ஒருவர் நிறைந்த மதுபோதையில் Champagne-sur-Seine இல் உள்ள வீடு ஒன்றுக்குள் திருடச்சென்றுள்ளான். ஆனால் அங்கிருந்து தப்பிக்க முடியாமல் கட்டிலில் படுத்து உறங்கியுள்ளான்.
வியாழக்கிழமை இரவு, Champagne-sur-Seine ( Seine-et-Marne) இல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரவு 10 மணி அளவில், நிறைந்த மதுபோதையில் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்த 35 வயதுடைய குறித்த கொள்ளையன், அங்கிருக்கும் சில பொருட்களை திருடியுள்ளான். மகிழுந்து ஒன்றின் சாவியினையும் திருடியுள்ளான். பின்னர் அங்கிருந்து புறப்படும் போது, அவனால் மேற்கொண்டு நகர முடியவில்லை. மது போதையில் இருந்ததால், அங்கிருந்த கட்டில் ஒன்றில் படுத்து உறங்கிவிட்டான். அதிகாலை வீட்டுக்குத் திரும்பிய வீட்டின் உரிமையாளர் கதவு உடைக்கப்பட்டிருப்பதை பார்த்து அதிச்சியடைத்து காவல்துறையினருக்கு அழைத்துள்ளார்.
விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டை சோதனையிட்டுள்ளனர். கொள்ளையன் கட்டிடில் படுத்து தூங்கிக்கொண்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் குறித்த நபர் கைது செய்யப்பட்டு Moret-sur-Loing காவல்நிலையத்துக்கு அழைத்துச்செல்லப்பட்டார். குறித்த நபரை முன்னதாகவே காவல்துறையினர் அறிவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்றதொரு சம்பவம் முன்னதாக Mans பகுதியில் இடம்பெற்றிருந்தது. அச்செய்தியினை படிக்க <இங்கே> சொடுக்கவும்!!
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.