717பேர் கைது - பரிஸ் எங்கும் பரவும் கலவரங்கள் - ஒரு தரவு!
8 December, 2018, Sat 16:45 GMT+1 | views: 2635
இன்றைய போராட்டத்தினை அடக்கக் களமிறக்கப்பட்ட 89.000 படைகளில், பரிசில் நடக்கும் போராட்டங்களைத் தடுக்க மட்டும் 8.000 படைகள் மற்றும் கவச வாகனங்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
அவெனியூ சோம்ப்ஸ் எலிசேயைவிடவும், அதன் உபவீதிகள், மற்றும் பரிசின் பிரதான வீதிகளிலும் கலவரங்களும் போராட்டங்களும் வெடித்துள்ளன.
717 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 581 பேர் பரிசில் மட்டும் கைதாகி உள்ளனர். 423 பேர் காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
நெடுஞ்சாலை A6 மற்றும் பல வீதிகளின் சுற்றுப்பாதைகளும் முடக்கப்பட்டுள்ளன.
பரிசின் வர்த்தகம் மற்றும் தொழில் நிறுவனங்களின் பதிவகமான Chambre de commerce et d’industrie கற்களினால் தாக்கப்பட்டுள்ளது. இது பரிஸ் எட்டிலுள்ள Avenue de Friedland இல் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பரிஸ் 12 இன் Boulevard de Courcelles இல் வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ன.
பரிசின் வீதிகளெங்கும் கலவரங்கள் தொடர்ந்து பரவி வருகின்றது.
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.