தடையை உடைத்துக் கொண்டு உட்சென்ற பாரஊர்தி - உயிர்ப்பலி தவிர்க்கப்பட்டது - காணொளி!!
6 December, 2018, Thu 11:00 GMT+1 | views: 2818
மஞ்சள் ஆடைப் போராளிகளின் தடைகளை உடைத்துக் கொண்டு பாரஊர்தி ஒன்று உள்நுழைந்துள்ளது. அதிஸ்டவசமாக, உயிர்பலிகள் தவிர்க்கப்பட்டுள்ளன.
Gironde இலுள்ள Langon இலுள்ள போக்குவரத்து மற்றும் விநியோகப் பகுதிகளைத் தொடர்ந்தும் முற்றுகையிட்டு, தடைகளைப் போட்டு, போராட்டம் நடாத்தி வருகின்றனர்.
இந் நிலையில் இன்று இங்கு பெரும் பதற்றம் ஒன்று உருவாகி உள்ளது.
தடைகள் போட்டிருப்பதை அறிந்தும், அங்கு போராளிகள் நிற்கின்றனர் என்பதை அறிந்தும், ஒரு பார ஊர்தியை அதன் சாரதி மிகவும் வேகமாகச் செலுத்திவந்து தடைகளை உடைத்தெறிந்து கொண்டு உள்நுழைந்துள்ளார்.
போராளிகள் திடீரென விலகியதால் யாரும் காயமடையவில்லை.
பூமியில் பரவியிருக்கும் விலங்குகள் மற்றும் தாவரங்கள் குறித்து படிக்கும் படிப்பு.
•
உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.