அவதானம்! - துவிச்சக்கர வண்டி ஓட்டுனர்களுக்கு €90 வரை தண்டப்பணம்!!
12 October, 2018, Fri 15:00 GMT+1 | views: 3696
இல்-து-பிரான்சுக்குள் கட்டுப்பாடு இன்றி துவிச்சக்கர வண்டிகளில் பயணிப்பவர்களுக்கு €90 க்கள் வரை தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. இதுபோல் தொடர்ந்தும் இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று வியாழக்கிழமை Hauts-de-Seine மாவட்டத்தின் ஆறு பகுதிகளில் களம் இறங்கிய காவல்துறையினர் பல மிதிவண்டி ஓட்டுனர்களுக்கு தண்டப்பணம் விதித்தனர். Saint-Cloud,
Rueil-Malmaison,
La Garenne-Colombes,
Courbevoie,
Nanterre
மற்றும் Neuilly ஆகிய பகுதிகளில் காவல்துறையினர் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
சிவப்பு விளக்கில் நிறுத்தாமல் செல்வது, மிதிவண்டி சாலையை விட்டு, இசைக்கருவியகள் மற்றும் தொலைபேசிகள் பயன்படுத்திக்கொண்டு மிதிவண்டியை செலுத்துவது போன்ற பல்வேறு ஆபத்தான செயலில் ஈடுபட்ட மொத்தம் 27 பேருக்கு தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளது. மிதிவண்டி ஓட்டுபவர்கள் பொறுப்பின்றி ஓடித்திரிவதாகவும் காவல்துறையினர் குற்றம் சுமத்தியுள்ளார்கள். தவிர இந்த நடவடிக்கை அனைத்து இடங்களிலும் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.