அதிர்ச்சி - பரிசின் விமான நிலையங்கள் விற்பனைக்கு!!
8 March, 2018, Thu 12:00 GMT+1 | views: 12103
பரிசின் விமான நிலையங்கள் தனியாரிடம் விற்பனையாகவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வார இறுதியில் பரிசின் விமான நிலையங்களான, சார்ள்-து-கோல், லூ பூர்ஜே மற்றும் ஓர்லி விமானநிலையங்கள் தனியார் மயப்படுத்தப்படுவதற்கான தீர்மானஙகள் நிறைவேற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிஸ் விமான நிலையங்களின் (Paris Aéroport) அரசாங்கம் 50.6 சதவீதப் பங்குகளை வைத்துள்ளது. இதனை தனியாரிடம் விற்கும் அதிகாரம் அரசாங்கத்திற்கு உண்டு. இதன் மூலம் அரசாங்கத்திற்கு, 8200 மில்லியன் (8.2 Billions / Milliards) யூரோக்கள் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை தனியார் நிறுவனங்களிடம் விற்கப்பட்டாலும், விமானப் போக்குவரத்துக்கள், மற்றும், விமான நிலையத்தின் பாதுகாப்புப் பொறிமுறைகள் அரசாங்கத்திடமே இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நீஸ் விமானநிலையத்தின் 8 சதவீதப் பங்குகளையும் வெளிநாட்டு விமானநிலையங்களில் பெரும் பங்குகளையும் வைத்திருக்கும் Vinci நிறுவனம், பரிஸ் விமான நிலையத்தின் பெரும் பங்குகளைக் கொள்வனவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
* உலகிலேயே மிகப் பெரிய வளைகுடா எது? மெக்சிகோ வளைகுடா
•
உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.