வீதி போக்குவரத்து! - மீண்டும் நெருக்கடிக்கு உள்ளாகும் வீதிகள்! - சிவப்பு எச்சரிக்கை!!
12 July, 2018, Thu 19:00 GMT+1 | views: 3177
கடந்த வாரத்தைத் தொடர்ந்து, இந்த வார இறுதி நாட்களும் வீதிகளில் போக்குவரத்து நெரிசலை கடும் அளவு சந்திக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை வெள்ளிக்கிழமை ஜூலை 13 ஆம் திகதி இல்-து-பிரான்சின் வீதிகளுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Bison Smart அறிவித்துள்ளதன் படி, இல்-து-பிரான்சின் வெளிச்செல்லும் வீதிகளில் அதிகளவு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, நாளை மறுதினம் சனிக்கிழமை ஜூலை 14 ஆன் திகதி தேசிய அளவில் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் அனைத்து வீதிகளிலும் போக்குவரத்து கடும் நெரிசலை சந்திக்கும் எனவும், Rhône-Alpes மாகாணத்துக்கு மாத்திரம் செம்மஞ்சள் எச்சரிக்கையும், மீதி அனைத்து மாகாணத்தின் வெளிச்செல்லும் வீதிகளுக்கும் சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
ஜூலை 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சில பகுதிகளுக்கும், குறிப்பாக A7 வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
* உலகிலேயே மிக நீளமான நதி எது? நைல் நதி (6695கி.மீ)
•
உங்கள் கருத்துப் பகுதி
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.