Montere Fault Yonne(77130)யில் அடுக்கு மாடித் தொடரில் 1ம் மாடியில் 85m² அளவு கொண்ட F4 வீடு வாடகைக்கு உண்டு. மாத வாடகை 750€
Gare de Lyonல் இருந்து 45 நிமிடம் NAVIGO 5 ZONE
காவல்துறையினருக்கு எதிராக தாக்குதல்! - 43 பேர் தொடர்ந்தும் கட்டுப்பாட்டுக்குள்!!
15 April, 2018, Sun 17:00 GMT+1 | views: 1703
நேற்று சனிக்கிழமை Montpellier இல் இடம்பெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினருக்கு எதிராக தாக்குதல்கள் இடம்பெற்றது.
கலவரத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். Notre-Dame-des-Landes இல் தங்கியிருந்தவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட, அவர்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் தாக்கினார்கள். அதைத் தொடர்ந்து 51 பேர்களை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிகமாக மாணவர்களே கலந்து கொண்டதாகவும், கைதுசெய்யப்பட்டவர்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை வரை 43 பேர்களை தொடர்ந்தும் காவல்துறையினர் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலவரத்தில் ஈடுபட்டவர்களில் 200 க்கும் மேற்பட்டவர்கள் முகமூடி அணிந்திருந்ததாகவும், அவர்களின் நோக்கம் காவல்துறையினரை தாக்குவதாக மாத்திரமே இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையினர் மீது கற்களை கொண்டு வீசியுள்ளனர். பதிலுக்கு காவல்துறையினர் கண்ணீர்புகை வீசி, கலவரத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.