Montere Fault Yonne(77130)யில் அடுக்கு மாடித் தொடரில் 1ம் மாடியில் 85m² அளவு கொண்ட F4 வீடு வாடகைக்கு உண்டு. மாத வாடகை 750€
Gare de Lyonல் இருந்து 45 நிமிடம் NAVIGO 5 ZONE
பரிஸ் - பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட நபருக்கு 9 வருட சிறை!!
14 April, 2018, Sat 17:00 GMT+1 | views: 1259
பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்ட மூன்று பயங்கரவாதிகள் சிறையிலடைக்கப்பட்டுள்ளனர். Djebril Amara, Antoine Frerejean, I. K எனும் மூன்று பயங்கரவாதிகளே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மூன்று பயங்கரவதிகளும் Cape Béar (Pyrenees-Orientales) பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தார்கள். உளவுத்துறையினரால் கைதுசெய்யப்பட்ட குறித்த நபர்கள், தொடர் விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். குறித்த பயங்கரவாதிகள் முறையே 23, 19 மற்றும் 17 வயதுடையவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தவிர குறித்த பயங்கரவாதிகள் சமூக வலைத்தளத்தில் பயங்கரவாத பரப்புரை மேற்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவனத்திற்கு:இங்கு பிரசுரமாகும் செய்திகள் அனைத்தும் பரிஸ்தமிழ்.கொம் தளத்திற்கு உரிமையானவை. செய்திகளைப் பிரதி செய்பவர்கள் எமது தளத்தின் RSS Feedஐ பயன்படுத்தவும்.