வாங்க   செயல்படுத்தவும்  உதவும்  உள்நுழைதல்  
paristamil
செய்தி
நிர்வாக தகவல்
பரிஸ்தமிழ்FM
குழந்தைகள் பெயர்
தமிழ்வழிகாட்டி
காணொளிகள்
திருமண சேவை
Tamilannuaire
Paristamil Carte
Annonce
PrÉnom
Jeux
Chat
ParistamilFm
Blagues
Nous contacter
 எழுத்துரு விளம்பரம் - Text Pub
Bail விற்பனைக்கு
170317
தேவை-வீடு
130317
வீடு வாடகைக்கு
110317
Bail விற்பனைக்கு
060317
வீடு விற்பனை
030317
விளம்பர தொடர்புக்கு
Paristamil
மின்னஞ்சலில்
கவனத்திற்குரிய செய்தி
இஸ்லாமிய முக்காடு போட்வர்களை வேலையால் நிறுத்த முடியும் - ஐரோப்பிய நீதிமன்றச் சட்டம்!!
France Tamilnews
அரிய சந்தர்ப்பம்!! உணவகங்கள், விடுதிகளில் வேலை வேண்டுமா? தவறவிடாதீர்கள்!!
France Tamilnews
அவதானம்!! ட்ராமில் அதிகரிக்கும் பயணச்சீட்டுச் சோதனை!!
France Tamilnews
கடுமையான குளிர் - தொழிலாளர்கள் சட்டப்படி வேலை செய்யாது விட முடியுமா?
France Tamilnews
பிரான்சின் சனத்தொகை - புதிய கணக்கெடுப்புத் தகவல்!! (விவரணக் காணொளி)
France Tamilnews
பரிஸ் தமிழ் நாட்காட்டி 2017
திருக்கணித பஞ்சாங்க அடிபடையில் ஐரோப்பிய நேரப்படி கணிக்கப்பட்டது
16திங்கட்கிழமை

ஜனவரி
திருவள்ளுவர் ஆண்டு 2047
ஸ்ரீ மன்மத ஆண்டு 5116
ஹிஜ்ரி ஆண்டு 1437
ரபி உல் அவ்வல் ربيع الأول 4
தை
3
வரலாற்றில் இன்று
திதி: பஞ்சமி
சுப நேரம்
12:43:31 இருந்து 13:17:45 வரை

ராகு காலம் : 13:00:38 - 14:04:49
எமகண்டம் : 09:48:06 - 10:52:16
குளிகை        : 11:56:27 - 13:00:38
விரதங்கள்: 
 சூரிய உதயம் : 08:43:55 | சூரிய அஸ்தமம் :17:17:21 | நட்சத்திரம் :பூரட்டாதி
15
Sunday
17
Tuesday
18
Wednesday
19
Thursday
20
Friday
21
Saturday
22
Sunday
921
இன்றைய திருக்குறள்

அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.

குறள்: 76 | அதிகாரம்: அன்புடைமை.
உரை:
அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவோர் அறியாதவரே; மறத்திற்கும் கூட அதுவே காரணம் ஆகும்.
ஆங்கில மொழிபெயர்ப்பு:
The unwise deem love virtue only can sustain, It also helps the man who evil would restrain.
ஆங்கில உரை:
The ignorant say that love is an ally to virtue only, but it is also a help to get out of vice.
இன்றைய ராசிபலன்

மேஷம்
குடும்பத்தில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். சொத்துப் பிரச்னைக்கு நல்ல தீர்வு கிடைக்கும். உறவினர்கள் எதிர்பார்ப்புடன் பேசுவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு

ரிஷபம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். உடல் நலம் சீராகும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்

மிதுனம்
இரவு 8.45 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப்பான்மை வந்துச் செல்லும். தன்னம்பிக்கை குறையும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிலர் உங்களை தாழ்த்திப் பேசினாலும் கலங்காதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

கடகம்
குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதம் வந்துப் போகும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் அதிகரிக்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். சகோதர வகையில் பிணக்குகள் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். இரவு 8.45 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் போராடி வெல்வீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

சிம்மம்
புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

கன்னி
சாதிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். வியாபாரத்தில் சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

துலாம்
குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

விருச்சிகம்
இரவு 8.45 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். சிலர் உங்களிடம் நயமாகப் பேசினாலும் சொந்த விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். உதவிக் கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

தனுசு
பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். விலை உயர்ந்த ஆடை, ஆபரணம் வாங்குவீர்கள். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். இரவு 8.45 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

மகரம்
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்தை முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

கும்பம்
புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், நட்பால் ஆதாயமும் உண்டாகும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்

மீனம்
தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க புது யோசிப்பீர்கள். மனதிற்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், வெள்ளை
வரலாற்றில் இன்று

1547 - நான்காம் இவான் ரஷ்யாவின் சார் மன்னனாக முடிசூடினான்.

1556 - இரண்டாம் பிலிப்பு ஸ்பெயின் மன்னன் ஆனான்.

1581 - இங்கிலாந்து நாடாளுமன்றம் ரோமன் கத்தோலிக்க மதத்தை சட்டத்துக்கெதிரானதாக்கியது.

1707 - ஸ்கொட்லாந்து, இங்கிலாந்துடன் இணைந்து ஐக்கிய இராச்சியம் ஆக உருவாவதற்கு ஏதுவாக அமைந்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

1761 - பிரித்தானியர் பாண்டிச்சேரியை பிரான்சிடம் இருந்து கைப்பற்றினர்.

1777 - வெர்மொண்ட் நியூயோர்க்கில் இருந்து விடுதலையை அறிவித்தது.

1795 - பிரான்ஸ், நெதர்லாந்தின் யூட்ரேக்ட் என்ற இடத்தைக் கைப்பற்றியது.

1864 - டென்மார்க்கின் மன்னன் ஒன்பதாம் கிறிஸ்டியான் ஜெர்மனி மீது போரைத் தொடுத்தான்.

1909 - ஏர்ணெஸ்ட் ஷாக்கிளெட்டனின் குழுவினர் தென் முனையைக் கண்டுபிடித்தனர்.

1945 - ஹிட்லர் தனது சுரங்க மறைவிடத்திற்கு தப்பிச் சென்றார்.

1956 - எகிப்து அதிபர் கமால் அப்துல் நாசர் பாலஸ்தீனத்தைக் கைப்பற்றுவதாக சூளுரைத்தார்.

1979 - ஈரான் மன்னர் முகமது ரேசா பாஹ்லாவி குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறி எகிப்தில் குடியேறினார்.

1991 - ஐக்கிய அமெரிக்கா ஈராக் மீது போரை அறிவித்தது.

1992 - எல் சல்வடோர் அதிகாரிகள் தீவிரவாதத் தலைவர்களுடன் மெக்சிக்கோ நகரில் அமைதி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.

1993 - விடுதலைப் புலிகளின் தளபதி கேணல் கிட்டு உட்பட 10 விடுதலைப் புலிகள் வெளிநாடொன்றில் இருந்து இலங்கை திரும்புகையில் சர்வதேசக் கடற்பரப்பில் இந்தியக் கடற்படையால் சுற்றி வளைக்கப்பட்ட போது கப்பலை வெடிக்க வைத்து இறந்தனர்.

2001 - கொங்கோ தலைவர் லாரன்ட் கபிலா தனது மெய்க்காவலரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2006 - எலென் ஜோன்சன் சேர்லீஃப்ப் லைபீரியாவின் அதிபரானார். இவரே ஆபிரிக்க நாடொன்றின் முதலாவது பெண் அரசுத் தலைவர் ஆவார்.

2003 - கொலம்பியா விண்ணோடம் தனது கடைசிப் பயணத்தை ஆரம்பித்தது. இது 7 விண்வெளி வீரர்களுடன் 16 நாட்களின் பின்னர் பூமி திரும்புகையில் வெடித்துச் சிதறியது.

2008 - 2002 போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசு அதிகாரபூர்வமாக விலகியது.

2008 - இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு இலங்கையில் தனது பணிகள் அனைத்தையும் நிறுத்தியது.


 பிறப்புகள்                                                                                                                                                                 
    

1929 - எஸ். ஜே. தம்பையா, மானிடவியல் ஆய்வாளர், பல்சான் பரிசு பெற்றவர்

1932 - டயான் ஃபொஸி, கொரில்லாவைப் பற்றி சிறந்த ஆய்வுகள் நடத்திய அமெரிக்கப் பெண் (இ. 1985)


 சிறப்பு நாள்                                                                                                                                                              
 

தாய்லாந்து: ஆசிரியர் நாள்

 

௰௧ ௨௰ ௩௰ ௪௰ ௫௰ ௬௰ ௭௰ ௮௰ ௯௰
123 4 5 6 7 8 9 10 11 20 30 40 50 60 70 80 90 100 1000
  Annonce
Secrétaire

Paristamil Annonce
  விளம்பரம்
mohan-jewellery-mart
Libraplay
donuts-ice-bondy
Nira-English-Center
pavillon-europe
exact-exchange-sarl
Auto Ecole Aswini
Paris Decoration
Advertisements  |  RSS